Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்

முகமே... நினைவே!

ஒருவரின் முகம் நினைவில் இருக்கும் அளவுக்கு அவரின் பெயர் நினைவுக்கு வருவது இல்லை. இது ஏன் தெரியுமா? நமது உணர்வுகளின் 80 சதவிகிதத்தை கண்களினாலேயே பெறுகிறோம். மீதி 20 சதவிகிதத்தைக் கேட்டும் படித்தும் தொட்டும் அறிந்துகொள்கிறோம். இதனால்தான்  முகம் நினைவில் இருக்கிறது. பெயர் நினைவில் இருப்பது இல்லை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சத்தம் இல்லாத தூக்கம்!

உறக்கத்தைக் கெடுப்பதில் இரைச்சலுக்கு முக்கியப் பங்கு உண்டு. சிலரால் வெளிச்சத்தில் தூங்க முடியாது. அதற்குத் தீர்வாக வந்திருக்கிறது. 'ஆஸ்ட்ரிச் பில்லோ’ எனப்படும் முகமூடித் தலையணை. அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்தத் தலையணை, கண் கூசும் ஒளி மற்றும் காதை இம்சிக்கும் இரைச்சலைத் தடைசெய்து, நிம்மதியான தூக்கத்துக்கு உதவுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வாய் நிறைய பாக்டீரியா!

'எங்கள் பற்பசை, வாய்க் கிருமிகளை விரட்டுகிறது’ என்று பற்பசை நிறுவனங்கள் பந்தாவாக விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்பீங்க. அதெல்லாம் கொஞ்சம்தான். நமது வாய், 40 மில்லியன் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான பாக்டீரியாக்கள், தீங்கு செய்யாதவை. வெகு சில பாக்டீரியாக்களே வியாதியை ஏற்படுத்தக்கூடியவை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

காது... கேட்'காது’!

யாராவது கூப்பிடும்போது கவனிக்கவில்லை என்றால், 'காது கேட்கலையா?’ என்பார்கள். நம் காதுகளால் வினாடிக்கு 20 முதல் 20,000 ஒலி அதிர்வுகள் வரை கேட்க முடியும். 20-க்குக் குறைவாகவோ, 20,000-க்கு அதிகமாகவோ உண்டாகும் ஒலி அதிர்வைக் கேட்க முடியாது. இதற்கு, 'கேளாத ஒலி’ என்று பெயர். இந்தக் கேளாத ஒலி அலைகளைக் குவித்து ஒருமுகப்படுத்தினால், தீயை உண்டாக்கலாம். இதன் அதிர்வுகளைக்கொண்டு, ஆடைகளைச் சலவை செய்யலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

கூல் டவுன்!

உடம்பைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட பிரேஸ்லெட்டை அமெரிக்காவின் எம்.ஐ.டி மாணவர்கள் உருவாக்கி இருக்காங்க. 'ரிஸ்ட்டிஃபை’ (கீக்ஷீவீstவீயீஹ்) என்ற பிரேஸ்லெட் போன்ற இந்தக் கருவியை கையில் அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும். வீடு, கார், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களின் தன்மைக்கு ஏற்றபடி நம் உடம்புக்குத் தேவையான குளிர்ச்சியையோ, சூட்டையோ இதில் வெச்சுக்கலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்