ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

சுவைச்சுப் பாரு டாப் 10

சுவைச்சுப் பாரு டாப் 10

##~##

உலக அளவில், வாழ்நாளில் ஒரு முறையாவது ருசி பார்க்க வேண்டிய டாப் 10 உணவு வகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது, நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்’ பத்திரிகை. அந்தப் பட்டியலில் நம் மசால் தோசையும் ஒன்று. தோசையுடன் போட்டி போடும் அந்த உணவு வகைகளைப் பற்றி சில வரிகளில்...

1. பீகிங் டக் (Peking duck) சீனா: மன்னராட்சிக் காலத்திலேயே பிரபலமாக இருந்த உணவு. உறித்த முழு வாத்தின் மீது கொஞ்சம் பூண்டு, இனிப்பு கலந்த மசாலாவைப் பூசி, 270 டிகிரி சூட்டில் ரோஸ்ட் செய்து பரிமாறுகிறார்கள்.

2. எஸ்கர்கோட்ஸ் (Escargots)   பிரான்ஸ்: நத்தையை ஓட்டில் இருந்து பிரித்து எடுப்பார்கள். பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் ஒயினைக்கொண்டு பதப்படுத்தி, மீண்டும் அதை ஓட்டுக்குள் வைத்துப் பரிமாறுகிறார்கள். இந்த உணவில், புரதச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.

3. மௌஸாகா (Moussaka) கிரீஸ்: ஓட்டோமான் சக்ரவர்த்தியின் ஃபேவரைட் டிஷ் இது. அடிப்பாகத்தில் ஆலிவ் எண்ணெய் தடவிய எக்பிளான்ட் நடுவில்... தக்காளி, வெங்காயம், பூண்டு, கொஞ்சம் மசாலா சேர்த்த கொத்துக்கறி. எல்லாவற்றுக்கும் மேலாக, பெக்காமல் சாஸ் தடவிப் பரிமாறுகிறார்கள்.

4. மசாலா தோசை (Masala dosa) இந்தியா:  இதன் சுவை, உங்கள் நாக்கு நன்கு அறிந்ததே.

சுவைச்சுப் பாரு டாப் 10

5. ஸூச்சினி மலர்கள் (Zucchini Flowers)  இத்தாலி: ஸூச்சினி மலர் பார்ப்பதற்கு நம்ம ஊர் பூசணிப் பூவைப் போலவே இருக்கும். இதை இத்தாலியின் வாழைப் பூ எனச் சொல்லலாம். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மலர்களின் உள்ளே முட்டை, யாக், ரிகோட்டா, பார்சமன் போன்ற லோக்கல் மசாலாக்களுடன், உப்பு மற்றும் மிளகு தூவி பேக் செய்து, இளஞ்சூட்டில் வதக்கிச் சாப்பிடுகிறார்கள்.

6. டேப்பன்யாகி (Teppanyaki)ஜப்பான்: இது உணவல்ல, சமைக்கும் முறை. தட்டையான பெரிய கிரில் பிளேட்டில் சமைத்து, தீ ஜுவாலையுடன் பரிமாறும் ஸ்டைல். வாடிக்கையாளரின் கண் முன்னால் சமைப்பது, இதன் சிறப்பு. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்படிச் சமைத்து அசத்துவதுதான் டேப்பன்யாகி.

7. கறி லக்ஸா (Curry laksa) மலேசியா: இது மலேசியாவின் 15&ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரனகன் மரபில், சிறப்பிடம் பெற்றிருந்த உணவு. ஸ்பைஸி மசாலா + தேங்காய் + கறி சேர்ந்த நூடுல்ஸ்தான் லஸ்கா.

சுவைச்சுப் பாரு டாப் 10

8. சோம் டாம் (Som tam) தாய்லாந்து: பப்பாளிக் காய் சாலட்.  புளிப்பு, உப்பு, இனிப்பு மற்றும் காரம் ஆகிய நான்கு விதமான சுவைகளில் நாம் கேட்பதற்கு ஏற்ப, தயாரித்துத் தருகிறார்கள்.

9. பாவ்லோவா (Pavlova) ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து: மொறுமொறுப்பு, நெகிழ்வு, மென்மை இவற்றின் கலவையான ஐஸ்க்ரீம் கேக் இது. ரஷ்ய பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவின் நளினமான ஆட்டத்துக்கு இணையாக தொண்டைக்குள் இறங்குவதால், இந்தப் பெயர்.

10. பார்பெக்யூ ரிப்ஸ் (Barbecue Ribs)    அமெரிக்கா: மசாலா தடவிய பன்றியின் விலா எலும்புக்கூட்டை தணலில் வாட்டி, காந்தல் சுவையுடன் பரிமாறுகிறார்கள். இதை, முதன்முதலாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் சுவைத்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுவைச்சுப் பாரு டாப் 10