Published:Updated:

கணிதப் புலிகள்!

லியோன்ஹார்ட் ஆய்லர்இரா.சிவராமன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 கணிதம்...

எல்லாப் பாடங்களையும்விட கணிதத்துக்கு எப்போதும் ஒரு சிறப்பு உண்டு. அவன் 'சயின்ஸ்ல சிங்கம்’ என்றோ, 'புவியியலில் புள்ளிமான்’ என்றோ, சொல்வது இல்லை. ஆனால், 'கணக்கில் புலி’ என கெத்தாகச் சொல்கிறோம். அப்படிக் கணிதத்தில் புலிகளுக்கு எல்லாம் பெரிய புலிகளாக இருந்தவர்கள் பற்றி தெரிந்துகொண்டால், நீங்களும் குட்டிப் புலியாக மாறலாம். முதலில்...

கணிதத்தில் அதிக அளவில் சாதனை படைத்தவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர், லியோன்ஹார்ட் ஆய்லர் (Leonhard Euler). கணிதப் பாடத்தில் இன்று பயன்படுத்தப்படும் அநேகக் குறியீடுகள், இவரது சிந்தனையில் தோன்றியவையே. கணிதத்தில் பல உட்பிரிவுகளை ஏற்படுத்தியவர்.

'ஆய்லர் படைப்புகளைப் படியுங்கள். அவரே நம் அனைவருக்கும் வழிகாட்டி' என்கிறார், 'லாப்லாஸ்’ என்ற புகழ்பெற்ற கணிதவியலாளர்.  

ஆய்லர் வழங்கிய 'கலப்பு எண்கள்’ (Complex Numbers) சூத்திரம், கணிதத்தில் மிகச் சிறந்த சூத்திரமாக இன்றளவும் கருதப்படுகிறது. மேலும், 'கோனிஸ்பெர்க் பாலக் கணக்கு’ (Seven Bridges of Königsberg) என்ற கணிதப் புதிரை உருவாக்கியதன் மூலம், கணிதத்தின் இரு மிக முக்கிய உட்பிரிவுகளான 'Topology’ மற்றும் ‘Graph Theory’  தோன்றின. கிராப் தியரி உட்பிரிவில் பல்லாயிரம் தேற்றங்கள் உருவானதற்கு, 1736-ல் ஆய்லர் வழங்கிய கோனிஸ்பெர்க் பாலக் கணக்குப் புதிரே காரணம். அந்தப் புதிர்...

ரஷ்யாவில் 'கோனிஸ்பெர்க்’ (இன்றைய கலினின்கிராட்) என்ற நகரை, நான்கு நிலப் பகுதிகளாகப் பிரித்துச் சென்றது, 'பிரேகல்' என்ற நதி. இந்த நதியைக் கடந்து, ஒரு நிலப்பரப்பில் இருந்து மற்ற நிலப்பரப்புக்குச் செல்ல, ஏழு பாலங்கள் இருந்தன.

''ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்து மற்ற நிலப்பரப்புகளுக்கு ஏழு பாலங்களையும் ஒரே ஒரு முறை மட்டுமே கடக்க வேண்டும். போன வழியில் திரும்பாமல், பயணம் தொடங்கிய நிலப்பரப்புக்கு எவராலும் வர முடியாது' என்றார்.

கணிதப் புலிகள்!

மாலை நேரத்தில், இந்தப் பாலத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட அந்த நகரின் மக்கள், பலமுறை முயற்சித்தும் இறுதி வரை முடியவில்லை.

இயற்பியல், ஒளியியல், இயக்கவியல், நுண் கணிதம், வானியல் போன்றவற்றிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார் ஆய்லர். தன் வாழ்நாளில் இறுதி 16 ஆண்டுகள் இரு கண்களையும் இழந்த நிலையிலும், ஒரு நபரின் துணையுடன் தன் மனதில் தோன்றும் சிந்தனைகளை எழுதி, உலகுக்கு வழங்கினார். அந்தச் சிந்தனைகள், தீர்வுகளை இன்றளவும் நாம் கணிதத்தில் பயன்படுத்திவருகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு