Published:Updated:

60 நொடிகளில் 64 ஆசனங்கள்!

அசத்தல் வைஷ்ணவி மு.ஜெயராஜ், படங்கள்: ர.சதானந்த்

##~##

 'மக்கள் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லான லைஃப் வாழறாங்க. தினமும் யோகா செஞ்சா ஸ்ட்ரெஸ் காணாமப்போயிடும்'

இதைச் சொல்வது, யாரோ யோக முனிவர் கிடையாதுங்க. 11 வயது வைஷ்ணவி. ஆனால், இதைச் சொல்வதற்கு தனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு என்பதுபோல வீடு முழுக்க பதக்கங்களை அடுக்கியிருக்கிறார்.

திருப்பூர், சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கிறார் வைஷ்ணவி. சென்ற ஆண்டு தொடக்கத்தில் ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்கள் செய்து, சாதனை புரிந்தவர். பிறகு, ஒரு நிமிடத்தில் 64 ஆசனங்கள் செய்து, தனது சாதனையைத் தானே முறியடித்தார். அரை மணி நேரத்தில் 596 ஆசனங்கள் செய்து, யோகாவின் மீது தனக்குள்ள ஈர்ப்பை மற்றுமொரு சாதனை மூலம் நிரூபித்தார்.

இவரது தோழி தாரணியுடன் இணைந்து கடந்த அக்டோபர் மாதம், மற்றுமொரு சாதனை நிகழ்த்தினார். தாரணி சக்ராசனம் செய்ய, அவர் மீது இரண்டு நிமிடங்கள், தனுராசனம் செய்தார் வைஷ்ணவி. இது, அசிஸ்ட் (ASSIST) உலகச் சாதனையில் பதிவானது.

60 நொடிகளில் 64 ஆசனங்கள்!
60 நொடிகளில் 64 ஆசனங்கள்!

கடந்த மூன்று வருடங்களில் மட்டும் மாநில அளவில் 46 தங்கப் பதக்கங்கள், தேசிய அளவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்று அனைத்திலும் வைஷ்ணவியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

''புது யுகம் தொலைக்காட்சியின் 'திறமை பொங்கும் தமிழகம்’ நிகழ்ச்சியில், முதல் மூன்று சுற்றுகளை ஜெயிச்சு, கால் இறுதிக்கு வந்துட்டேன். இந்த மாத இறுதியில் இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, குஜராத்தில் தேசிய யோகாப் போட்டியை நடத்துகிறது. அதில் ரிதமிக் யோகா பிரிவில், தமிழகம் சார்பில் தேர்வாகியிருக்கேன்'' என்கிறார் வைஷ்ணவி.

யோகாவுடன் பரதமும் பயிலும் வைஷ்ணவி, ரங்கோலி போட்டிகளிலும் கில்லி. இவரது தந்தை சரவணன், 'யோகாவில் அவளது திறமையை பள்ளிதான் கண்டறிந்தது. இப்போது, மூன்றாவது படிக்கும் தங்கை யோகேஷ்வரிக்கு இவள்தான் யோகா மாஸ்டர்'' என்கிறார்.

''பயிற்சி கொடுக்கிறப்ப நான் ரொம்ப கண்டிப்பான மாஸ்டர். சரியாச் செய்ற வரைக்கும் அவளை விட மாட்டேன். அதனால, பதிலுக்கு அப்பா வாங்கிட்டு வர்ற சாக்லேட், பிஸ்கட்டை ஒளிச்சுவெச்சு என்னை வெறுப்பேத்துவா'' என்கிறார் இந்த குட்டி யோகா மாஸ்டர்.

60 நொடிகளில் 64 ஆசனங்கள்!

அட்டகாசமான அரசுத் திட்டம்!

நீங்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் சுட்டியா? அப்படி என்றால், இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்.

படிக்கும்போதே ஆண்டுக்கு 6,000 ரூபாய் கல்வி உதவித் தொகையைப் பெற்று, பெற்றோரின் பொருளாதார நெருக்கடியைச் சற்றுத் தீர்க்கலாம்.

மத்திய அரசின் கல்வி அமைப்பான NCERT  நடத்தும் தேசிய திறனறித் தேர்வு (National Talent Search Examination-NTSE)ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 1,500 ரூபாய் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். சிறு பகுதி மட்டும் ஒன்பதாம், பத்தாம் வகுப்புப் பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, உங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசுங்கள். இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பெறலாம்.

இணையதள முகவரி:

தேர்வு நாள்: 22.02.14

தேர்வில் பங்கேற்று வெற்றிபெறுங்கள்

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு