Published:Updated:

பயத்தை தள்ளு...வெற்றியை அள்ளு !

மா.அ.மோகன் பிரபாகரன் ரமேஷ் கந்தசாமி, மு.சரவணகுமார்

பயத்தை தள்ளு...வெற்றியை அள்ளு !

மா.அ.மோகன் பிரபாகரன் ரமேஷ் கந்தசாமி, மு.சரவணகுமார்

Published:Updated:
##~##

''எனக்கு எல்லாமே செஸ்தான். ஜெயிக்கிறதுக்கு முன்னாடி பண்ற 'மூவ்’ல கிடைக்கிற சந்தோஷம் வேற எதிலும் கிடைக்காது' என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் இனியன்.

ஈரோடு, தி இண்டியன் பப்ளிக் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படிக்கிறார், இந்த 11 வயது செஸ் சாம்பியன். சென்னையில் கடந்த மாதம் நடந்த, சர்வதேச சதுரங்கப் போட்டியின் ஒரு பகுதியாக, சர்வதேசத் தர வரிசையில், 2,100 புள்ளிகளுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி நடந்தது. ஒன்பது சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில், முதல் இடத்தைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இனியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''செஸ்ஸில் எல்லோருக்கும் போலவே என் ரோல்மாடலும் விஸ்வநாதன் ஆனந்த் சார்தான். அவர், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். அவருக்கு அப்புறம், இதுவரைக்கும் 34 பேர் அந்தப் பட்டத்தை ஜெயிச்சிருக்காங்க. கிராண்ட் மாஸ்டர் ஆகணும்னா, 2,500 புள்ளிகள் வேணும். இப்ப என் பாயின்ட்ஸ் 1,975. சீக்கிரம் 2,500 பாயின்ட்ஸ் எடுத்து 12 வயதுக்குள்ள கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஜெயிக்கணும்'' என்று பேச ஆரம்பிக்கும்போதே, சதுரங்கம் பற்றிய புள்ளி விவரங்களுடன் உச்சத்தைத் தொடுகிறார்.

பயத்தை தள்ளு...வெற்றியை அள்ளு !

ஆறு வயதில் முதல் போட்டியில் பங்கேற்று வெற்றிக் கணக்கை ஆரம்பித்தவர், 2010-ல் நடந்த காமென்வெல்த் போட்டியில் எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றார். மாநில அளவிலான போட்டிகளில் ஒன்பது வயதுக்குட்பட்டோர் (2011) மற்றும் 11 வயதுக்குட்பட்டோர் (2012) பிரிவிலும் இரண்டு முறை தங்கம் வென்றிருக்கிறார் இனியன்.

பயத்தை தள்ளு...வெற்றியை அள்ளு !

''போன மாதம் நடந்த சர்வதேசப் போட்டியில், 2,100 புள்ளிகளுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜெயிச்சு, முதல்வர் கையால் கோப்பையும் 50,000 ரூபாய் பரிசும் வாங்கிய என்னை, மேலும் ஊக்கப்படுத்தியிருக்கு. அந்தப் பிரிவில் 455 பேர் கலந்துக்கிட்டாங்க. போட்டி ஆரம்பிக்கிறப்ப 41-வது இடத்தில் இருந்தேன். ஆனாலும் டென்ஷனோ, பயமோ கொஞ்சமும் இல்லை.  அதுக்குக் காரணம், 'இந்தப் போட்டியில் நான்தான் ஜெயிப்பேன்’னு முழுமையாக நம்பினேன். எந்த விஷயத்தைச் செய்றதா இருந்தாலும் உங்களை முழுமையாக நம்புங்க. நிச்சயம் ஜெயிக்கலாம்'' என்று சொல்லிக் கட்டை விரலை உயர்த்துகிறார்.