Published:Updated:

வானவில் பக்கங்கள்!

வானவில் பக்கங்கள்!

வானவில் பக்கங்கள்!

வானவில் பக்கங்கள்!

Published:Updated:
வானவில் பக்கங்கள்!
##~##

சுட்டி வாசகர்களே... கதை, கவிதை, கட்டுரை எனப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் எப்படி? நீங்களும் படைப்பாளிகளாக மாறலாமே... இது உங்களுக்கான பகுதி. துணுக்கு... கதை... கவிதை... கலகலப்பு என எப்படி வேணும்னாலும் வெரைட்டியாப் புகுந்து விளையாடுங்க. படைப்புகளை அனுப்பும்போது உங்கள் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், வீட்டு முகவரியை அவசியம் குறிப்பிடவும். அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியையும் எழுதுங்க. மெயிலில் அனுப்ப chuttidesk@vikatan.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அறிந்ததும் அறியாததும்!

திருக்குறளில் 'தமிழ்’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே எழுத்து - ஒள

வானவில் பக்கங்கள்!

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து - னி (1,705)

திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள் - ளீ, ங

திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - 9.

திருக்குறள், இதுவரை 25 மொழிகளுக்கும் மேல்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

திருவள்ளுவர் = 7 எழுத்து

சீர்கள் = 7

அதிகாரங்கள் = 133 (1 3 3=7)

பாடல்கள் = 1330 (1 3 3 0=7)

பொருட்பால் அதிகாரங்கள் = 70 (7 0=7)

இன்பத்துப்பால் அதிகாரங்கள் = 25 (2 5=7)

- ஜெ.சுரேஷ்பாபு, திண்டுக்கல்.

 'பொடி’ தத்துவம்!

பெரியவங்க மட்டும்தான் தத்துவம் சொல்லணுமா? இதோ, நான் சொல்லும் 'பொடி’ தத்துவம். பிடிச்சு இருந்தா ஃபாலோ பண்ணுங்க.

வானவில் பக்கங்கள்!
வானவில் பக்கங்கள்!

ஓர் எறும்பு தன்னைவிட 50 மடங்கு எடையுள்ள பொருளை, தன்னுடைய உணவுக்காகத் தூக்குமாம். அப்படி இருக்கிறப்ப, நம்மால முடியாதா என்ன? உடனே, நீங்களும் உங்க எடையைவிட 50 மடங்கு அதிக உணவைத் தேடாதீங்க. எறும்புக்கு உணவு மட்டும்தான் வாழ்க்கை. நமக்கு, அதைத் தாண்டி நிறைய இருக்கு. அதைச் செய்யுங்க.

உயரம் என்பது முடிவே இல்லாதது. எவரெஸ்ட் உச்சிதான் மிகவும் உயரம் என நினைக்கிறோம். நடந்துபோகிறவங்களுக்கு அது முடிவான உயரமாக இருக்கலாம். அதைத் தாண்டியும் விண்வெளி இருக்கு. அந்த உயரத்தை எட்ட நினைக்கணும்.

- இர.சுதாகர், சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னூர்.

 ஏட்டிக்குப் போட்டி!

ஓர் ஊரில் ராமு என்பவன் இருந்தான். அதே ஊரில் அவன் மீது பொறாமைகொண்ட சோமுவும் இருந்தான். ராமு என்ன செய்தாலும் அதற்குப் போட்டியாக, அவனைவிடப் பெரிதாக எதையாவது செய்வது சோமுவின் வாடிக்கை. ஏன் எதற்கு என்று யோசிக்கவே மாட்டான்.

ஒருமுறை ராமு, தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டான். அதைப் பார்த்த சோமு, தன் தோட்டத்தில் வண்ண வண்ணப் பூக்களைப் பயிரிட்டான். ராமு, ஒரு ஆட்டை வாங்கிவந்து வளர்த்தான். அதைப் பார்த்த சோமு, ஒரு நாயை வளர்த்தான். ராமு, ஒரு குதிரையை வாங்கினான். சோமு, ஒரு புலியை வாங்கி, ஊரையே மிரளவைத்தான்.

வானவில் பக்கங்கள்!

நாட்கள் நகர்ந்தன. ராமு, தனது தோட்டத்தில் விளைந்த காய்களைச் சமைத்து, ஆட்டை குழம்புவைத்துச் சாப்பிட்டான். சோமுவின் வீட்டுக்கு குதிரையில் ஒய்யாரமாக வந்தான். ''நண்பா... நீ பூக்களைச் சமைத்து, நாயைக் குழம்புவைத்து, புலியின் மீது வா'' என்று சொல்ல, சோமு திகைத்து நின்றான்.

- ஜி.திவ்யா- (IX), அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி.

வானவில் பக்கங்கள்!
வானவில் பக்கங்கள்!