Published:Updated:

மை டியர் ஜீபா...

மை டியர் ஜீபா...

மை டியர் ஜீபா...

மை டியர் ஜீபா...

Published:Updated:
##~##

''மை டியர் ஜீபா... குதிரைகள்தான் வேகமாக ஓடுமா?''

 - மு.கார்னேஷ், திண்டுக்கல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''குதிரை, வேகமாக ஓடும் விலங்குதான். ஆனால், குதிரையைவிட அதிவேகமாக ஓடக்கூடிய விலங்குகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது, சிறுத்தைப்புலி. அதன் அதிகபட்ச வேகம், மணிக்கு 112 - 120 கிலோமீட்டர். அதன் கால்கள் தரையில் படுவதே  தெரியாது. மணிக்கு சுமார் 88 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய விலங்கு, மான். சிங்கம், காட்டுநாய், கங்காரு என நீளும் பட்டியலில் பத்தாவது இடத்தையும் தாண்டி வரும் குதிரையின் வேகம், மணிக்கு 70.76 கிலோமீட்டர். இது, 2008-ம் ஆண்டு பென்சில்வேனியா, குதிரைப் பந்தயத்தில் ஓடி, கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 'வின்னிங் ப்ரூ’ என்ற ரேஸ் குதிரையின் வேகம்.''

''ஹலோ ஜீபா... உலகில் முதன்முதலில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை எது?''

- க.மனோன்மணி, ருத்திரியம்பாளையம்.

''ஆரம்பத்தில் கார்க் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட அச்சினை மையில் தோய்த்து, அஞ்சல் கட்டணம் பெற்றதற்கான முத்திரை வைக்கப்பட்டது. அதை மேம்படுத்து வதற்காக, இங்கிலாந்தும் அயர்லாந்தும் சேர்ந்து எடுத்த முயற்சிதான் அஞ்சல்தலை, உலகின் முதல் அஞ்சல்தலை இங்கிலாந்தில் 1840 மே 1-ல் வெளியிடப்பட்டது. 'பென்னி பிளாக்’ என்ற அந்த அஞ்சல்தலையில் இடம்பெற்றவர், விக்டோரியா மகாராணி. இந்தியாவில் 1852 முதல் அஞ்சல்தலை பயன்பாட்டுக்கு வந்தது.''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... கொசு போன்ற உயிரினங்களுக்கு எலும்புகள், இதயம், நுரையீரல் உள்ளனவா?''

- எஸ்.அமுதா, கோவை.

''பொதுவாக, பூச்சி வகையறாக்களின் உடல், மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தலைப்பகுதி, நெஞ்சுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி. கொசு போன்ற பூச்சி வகைகளுக்கு தலைப் பகுதியில்தான், சுற்றுப்புறத்தை உணர்ந்துகொள்ளும் உணர்வு உறுப்புகளும் (சென்ஸார்) மனிதர்களைக் கடிக்கும் ஊசி போன்ற உறுப்பும் உள்ளன. நெஞ்சுப் பகுதியில், இரண்டு இறக்கைகளும் ஆறு கால்களும் உள்ளன. கூட்டு இதயம் (compound heart), பறக்கும் தசைகள் மற்றும் சில முக்கியமான நரம்புகள் உள்ளன. வயிற்றுப் பகுதியில், செரிமானத்துக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உறுப்புகள் அமைந்துள்ளன. எலும்பு, நுரையீரல் கிடையாது.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... நிலவில் ஈர்ப்புவிசை இல்லை என்றால், விண்வெளி வீரர்கள் நிலவின் தரையில் தங்கள் நாட்டுக் கொடியை எவ்வாறு நாட்டினர்?''

- ரா.கார்த்திக், சென்னை-87.

மை டியர் ஜீபா...

''நிலவில் ஈர்ப்பு விசை சுத்தமாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. பூமியில் இருப்பதைப் போல ஆறில் ஒரு பங்கு ஈர்ப்புவிசை நிலவில் உள்ளது. அதற்கு ஏற்றவாறு, வீரர்களின் உடைகள் அதிக எடையுடன் தயாரிக்கப்பட்டன. அதனால்தான் நிலவில், விண்வெளி வீரர்களால் நிற்கவும் நடக்கவும் முடிந்தது. அதே விதியைத்தான், நிலவின் பரப்பில் நாட்டிய கொடிக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள். மெல்லிய கம்பி வலையைக் கொடியுடன் சேர்த்துப் பின்னித் தைத்திருக்கிறார்கள். அதன் எடை, சுமார் 4.3 கிலோ. இதனால், நிலவில் காற்று இல்லாவிட்டாலும் கம்பி வலை இருப்பதால், கொடி பறப்பது போல விரிந்தே இருக்கும்.''

''உலகத்திலேயே மிகப் பெரிய நாடு எது ஜீபா? அந்த நாட்டைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்''

- எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

''உலகின் மிகப் பெரிய நாடு, ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரஷ்யா. பூமியில் மக்கள் வசிக்கும் பரப்பில், எட்டில் ஒரு பகுதி, ரஷ்யாவின் பரப்புதான். இதன் மொத்தப் பரப்பளவு, 17,075,400 சதுர கிலோமீட்டர். நார்வே, பின்லாந்து, கஜகஸ்தான், சீனா, உக்ரைன், ஜார்ஜியா, வட கொரியா, மங்கோலியா எனப் பல நாடுகளைத் தன் நில எல்லைகளால் தொடுகிறது ரஷ்யா. மக்கள்தொகையின் படி, உலகின் 9-வது பெரிய நாடு. இதன் மக்கள்தொகை, சுமார் 14.3 கோடி (2012-ம் ஆண்டின் புள்ளிவிவரம்).

மை டியர் ஜீபா...

உலகப் புகழ்பெற்ற ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, மிகப் பெரிய தனிக் குடியரசு நாடாக ஆனது ரஷ்யா. இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பின், பல முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் கண்டது. உலகிலேயே முதன்முதலில் விண்வெளி ஓடம் அனுப்பியது மற்றும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது போன்ற தொழில்நுட்பச் சாதனைகளை 20-ம் நூற்றாண்டில் ரஷ்யா நிகழ்த்தியது. ரஷ்யாவின் மிகப் பெரிய சொத்து, அதன் இயற்கையான தாது மற்றும் கனிம வளங்கள். அணு ஆயுத உற்பத்தியில் ரஷ்யா முன்னணியில் இருக்கிறது.''