Published:Updated:

'க்ளிக்'கலாம் வாங்க!

அ.பார்வதி தி.குமரகுருபரன்

'க்ளிக்'கலாம் வாங்க!

அ.பார்வதி தி.குமரகுருபரன்

Published:Updated:
##~##

''இன்று, பெண்கள் இல்லாத துறையே இல்லை. இருந்தாலும் ஒருசில துறைகளில்  அதிகமாக ஆர்வம் காட்டுவது இல்லை. அவற்றில் ஒன்று போட்டோகிராஃபி. அழகியலுக்கு முக்கியத்துவம் உள்ள இதில், நீங்களும் சாதிக்கலாம்'' என சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தார், 'சென்னை ஆன் லென்ஸ்’ விஜயன். அரங்கச்  சுவரைப் புகைப்படங்கள் அலங்கரித்தன.

அரசுப் பெண்கள் பள்ளிகளைத் தேர்வுசெய்து, பயிற்சி மற்றும் கண்காட்சியைத்  தன்னார்வத்துடன் நடத்திவருகிறார் விஜயன். ''நான் ஒரு காலத்தில் தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்தவன். பிறகு, போட்டோகிராஃபியைக் கற்றுக்கொண்டேன். நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுக்கும்போது... பெண்கள் பலர், போஸ் கொடுக்கக்கூட யோசிப்பார்கள். இந்த இடத்தில் ஓரு பெண் புகைப்படக்காரர் இருந்தால், தயங்க மாட்டார்களோ எனத் தோன்றும். அதனால் நாமே போட்டோகிராஃபி பற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளி மாணவிகளுக்குச் சொல்லலாமே என நினைத்தேன். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஓரளவுக்காவது இந்தத் துறை பற்றித் தெரியும். அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அவ்வளவாகத் தெரியாது. அதனால், அரசுப் பெண்கள் பள்ளியைத் தேர்வுசெய்து இந்தக் கண்காட்சியை நடத்துகிறேன்'' என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'க்ளிக்'கலாம் வாங்க!

புகைப்படத்தை எப்படியெல்லாம் எடுக்கலாம், லென்ஸ் வகைகள், பெண்களுக்கு இந்தத் துறையில் இருக்கும் எதிர்காலம் எனப் பல விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

''முன்னாடி எல்லாம் 'நீ வளர்ந்து என்ன செய்யப்போறே?’ என்று யாராவது கேட்டால், டாக்டர், டீச்சர், வக்கீல்னுதான் சொல்வோம். இந்தக் கண்காட்சியைப் பார்த்த பிறகு, போட்டோகிராஃபியை செலக்ட் பண்ணலாம்னு தோணுது'' என்று ஆர்வமுடன் சொன்னார்கள் மாணவிகள்.

விஜயன் முயற்சிக்கு, நல்ல வரவேற்புதான்.

'க்ளிக்'கலாம் வாங்க!