Published:Updated:

பென் டிரைவ்!

பென் டிரைவ்!

பென் டிரைவ்!

பென் டிரைவ்!

Published:Updated:
பென் டிரைவ்!

ரெபேக்கா ஷீலா தாஸ்...

சென்னை, வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். 12 வயதே ஆன இவர், உலகின் தலைசிறந்த 'டிரினிட்டி காலேஜ், ஆஃப் மியூசிக்’ கல்லூரியில்  கீபோர்டு வாசிப்புத் தேர்வில் பங்கேற்றார். இதில், 'கிரேடு 8’ தேர்வில் 82 சதவிகிதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளார். கிரேடு 1, 2, 3 என்று படிப்படியாகச் செல்லாமல், நேரடியாகவே இந்த வெற்றியைப் பெற்றுள்ள இவரது கனவு, சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்பதே. டென்னிஸ்  போட்டிகளிலும் மாநில அளவில் பட்டங்களை வென்றுள்ளார் இந்த, நம்பிக்கை நட்சத்திரம். இசைவானில் பிரகாசமாக ஜொலிக்க வாழ்த்துவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ்!

அமெரிக்காவில், மூன்று பேர் நீண்ட நேரம் டி.வி. பார்த்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற அந்த மூன்று பேரும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், ஐந்து நாட்களில் 87 மணி நேரம் தூங்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். கின்னஸ் விதிமுறைகளின்படி, அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் ஓய்வு தரப்பட்டது. டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்கிறபோது சேனல்களை மாற்றவும், சாப்பிட மற்றும் குளிர்பானங்கள் அருந்த மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதற்கு முன்பு 86 மணி நேரம் 37 நிமிடங்கள் டி.வி. பார்த்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. கண்களையும் பத்திரமாப் பார்த்துக்கங்க அங்கிள்ஸ்!

பென் டிரைவ்!

உயரமான இடத்தில் நின்று கீழே பார்த்தாலே... தலை சுற்றும். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது ஜேம்ஸ் கிங்ஸ்டன், உயரம் என்றதும் குஷி ஆகிவிடுகிறார். சமீபத்தில், உக்ரைன் நாட்டின் 377 அடி உயரம் உள்ள மாஸ்கோ பாலத்தில் ஏறினார். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், தனது நண்பரின் கையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி, கீழே செல்லும் வாகனங்களை ஜாலியாக ரசித்தார். பார்த்தவர்களுக்குத்தான் நடுங்கியது. இதுபோல இன்னும் அதிக உயரமான கட்டடங்கள், கோபுரங்களில் தொங்கியபடி சாதனை படைக்கப்போகிறாராம் கிங்ஸ்டன். இதைப் பார்த்து இன்னும் எத்தனைப் பேரின் தலை சுற்றுமோ?

பென் டிரைவ்!
பென் டிரைவ்!

பெங்களூருவில் ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் கேக் கண்காட்சி நடைபெறும். சென்ற ஆண்டு 39-வது கேக் கண்காட்சி நடந்தது. இதோடு, ஃபார்முலா 1 பந்தயக் கார், கடல் டிராகன் போன்ற கேக்கினால் செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களைப் பார்வைக்காக வைத்தார்கள். இதில் அனைவரையும் ஈர்த்தது, 18 அடி உயரம் 22 நீளம்கொண்ட பிரமாண்டமான சார்மினார் கேக். இதற்காக, 5 டன் சர்க்கரை, நூற்றுக்கணக்கான முட்டைகளைப் பயன்படுத்தி, 40 பேர் சேர்ந்து 60 நாட்களில் தயாரித்தார்களாம். கண்களுக்கும் விருந்து!  

சீனாவைச் சேர்ந்த 63 வயது நீய் யாங்பிங் (ழிவீமீ சீஷீஸீரீதீவீஸீரீ), தனது மூக்கினால் கார் டயர்களுக்குக் காற்று ஊதிவிடுகிறார். டயர் டியூப் மீது இரண்டு பேர் நின்றுகொண்டு அழுத்தினாலும் மனிதர் அசருவது இல்லை. 40 மீட்டர் நீளம்கொண்ட ரப்பர் பைப் குழாயைத் தனது மூக்குத் துவாரங்களில் வைத்துக்கொண்டு ஊதுகிறார். 20 நிமிடங்களில் டியூப் முழுவதும் காற்று நிறைந்துவிடுகிறது. இதற்காக, எட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தாராம் நீய். இவரை, 'சூப்பர் லங் மேன்’ (ஷிuஜீமீக்ஷீ லிuஸீரீ விணீஸீ) என்று செல்லமாக அழைக்கிறார்கள். பேட் மேன், சூப்பர்மேனை மிஞ்சிட்டார் இந்த ஏர் மேன்!  

பென் டிரைவ்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 'ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் ரன்-2014’ என்ற நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. 'ரவுண்ட் டேபிள் இந்தியா’ அமைப்பும் 'தி ரெசிடென்ஸி டவர்ஸ்’ ஓட்டலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஆட்டோவை ஓட்டிச் செல்லும் இந்தப் பயணத்தில்... ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இது, சந்தோஷக் குலுக்கல்தான்!

பென் டிரைவ்!