Published:Updated:

வலை உலா

வலை உலா

வலை உலா

வலை உலா

Published:Updated:
##~##

'இன்று இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும்; பயனுள்ளதாகவும் அமைய வேண்டும். அப்படியான வலைகளில் உலா வரும் பகுதி இது.

'வார்த்தை நீர்யானை’ (Word hippo) என்ற பெயரே ஜாலியாக இருக்கிறதுதானே? பயன்படுத்தும்போது, அதைவிட ஜாலியாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, அழகிய நீர்யானை வரவேற்கும். ஆங்கிலத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அந்த நீர்யானை படத்துக்குக் கீழே டைப் செய்தால் போதும்.  அர்த்தம் வந்து நிற்கும். 'அட, இதற்குத்தான் ஆன்லைன் அகராதிகள் இருக்கே’ என்று நினைக்கலாம். இந்தத் தளம் அதுக்கும் மேலே.

இதில் வார்த்தையை டைப் செய்ததுமே, அந்த வார்த்தை தொடர்பாக உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கும். அதாவது, அந்த வார்த்தைக்கான எதிர்ச் சொல் வேண்டுமா? அல்லது இன்னொரு வார்த்தை வேண்டுமா? அந்தச் சொல்லுடன் எதுகை, மோனை நயத்துடன் சேர்ந்து ஒலிக்கும் சொற்கள் தேவையா? இப்படிப் பலவிதமான தேர்வுகள் இருக்கும். உங்களுக்குத் தேவையானதை கிளிக் செய்தால், அதற்கான பதில் அடுத்த பக்கமாக வந்துநிற்கும்.

நீங்கள் தேடிய பதிலும் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தேடாத பல விஷயங்களுக்கான பரிந்துரைகளும் இருக்கும். இந்தப் பரிந்துரைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்தால், அந்த வார்த்தை தொடர்பான அநேகப் பயன்பாடுகள் பழகிவிடும்.

வலை உலா

உதாரணத்துக்கு, இன்டராக்ட்டிவ் (interactive). ’இரண்டு நபர்கள், பொருட்கள், அல்லது நபரும் பொருட்களும் என பரஸ்பரம் ஒரு செயலில் ஈடுபடுவது’ என்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் சொல்லப்படுகிறது. சரி, இந்த வார்த்தைக்கு அர்த்தம் கிடைச்சாச்சு. அடுத்து என்ன?

இன்டராக்ட்டிவ் போலவே வேறு வார்த்தைகள் என்னென்ன? அதற்கான எதிர்ப்பதம் என்ன? அவற்றையும் தேடிப்பார்க்கலாம். கம்யூனிக்கேட்டிங் (communicating) கொலாபரேட்டிங் (collaborating) ஷேர்டு (shared) இவை எல்லாம் இன்டராக்ட்டிவ் வார்த்தையின் தோழர்கள். சரி, இந்த வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துவது?

அதற்கான உதாரணங்களையும் பார்க்கலாம். இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்ற சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ளலாம். பெயர்ச்சொல், வினைச்சொல் போன்றவை இருந்தால், அவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமா? இன்டர்... எனத் தொடங்கும் பிற சொற்களுக்கான அர்த்தம், பயன்பாடுகளையும் தெரிந்துகொள்ளலாம்.

வலை உலா

பொதுவாக, அகராதிகளிலேயே இந்த வசதிகள் இருக்கும். ஆனால், இந்த இணையதளத்தில் அவை போரடிக்காத வகையில் எளிமையாகத் தொகுத்துத் தந்திருக்காங்க. ஒரு பொருளைத் தேடும்போது, அதன் தொடர்புடைய பயன்பாடுகள் சங்கிலித் தொடர்போல கொடுக்கப்பட்டுள்ளதால், ஆர்வத்தோடு அவற்றைத் தேடிப் படிக்கத் தூண்டும்.

இன்னொரு விஷயம், இந்தத் தளத்தின் மூலமே குறிப்பிட்ட வார்த்தைகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தும் தெரிந்துகொள்ளலாம். ஆங்கில வார்த்தைக்கு இணையான ஜெர்மன் மொழிச் சொல்லையோ, இத்தாலிய மொழிச் சொல்லையோ தெரிந்துகொள்ளலாம்.

வலை உலா

ஆங்கிலப் பெயர்கள், அவற்றின் அர்த்தம், அவை உருவான விதம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும் இந்த நீர்யானையைச் சந்திக்க... http://www.wordhippo.com/.

ஆங்கில வார்த்தைகளைக் கற்று களைப்பாக இருக்கிறதா? ரிலாக்ஸ் செய்துகொள்ள, வேர்டுவேர்ல்டு (http://www.wordworld.com/) தளத்துக்குப் போகலாம். ஆங்கில மொழி தொடர்பான பிரபல டி.வி., தொடருக்கான இந்தத் தளத்தில், வார்த்தைகள் தொடர்பான விளையாட்டுகள், செல்போன் செயலிகள் போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

'எல்லாமே ஆங்கிலம்தானா?’ என்று தோன்றுகிறதா... இதோ இந்தி மொழிச் சொற்களை அறிமுகம் செய்துகொள்ள, http://kidsone.in/hindi/writetheLetters/worksheetHindi.jsp. தளத்தை நாடலாம். இந்தத் தளத்தின் தமிழ்ப் பகுதி http://kidsone.in/tamil/learntamil/. p>

கடைசியாக... ஆங்கில வார்த்தைகளில் சூரப்புலிகளாக இருப்பவர்களுக்காக என்றே ஒரு போட்டி நடத்தப்பட்டு வருவது தெரியுமா நண்பர்களே? 'ஸ்பெல்லிங் பீ’ என்பது அதன் பெயர். அமெரிக்காவில் இந்த விளையாட்டுப் போட்டி மிகவும் பிரபலம். இதில்,  அமெரிக்க இந்தியக் குழந்தைகள்தான் அதிகமாக பரிசைத் தட்டிக்கொண்டுபோகிறார்களாம். காலரை தூக்கிவிட்டுக்கங்க. நம் அமெரிக்க இந்திய நண்பர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்க.