Published:Updated:

டேபிள் டென்னிஸ்... சின்னப் புயல்கள் !

மா.அ.மோகன் பிரபாகரன். படங்கள் : மு.சரவணக்குமார்

##~##

உலக டேபிள் டென்னிஸ் வானில் சுடர்விட, ஒரே வீட்டில் இரண்டு நட்சத்திரங்கள் உருவாகின்றனர். ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு மெட்ரிக் பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கையான ஜவஹர் மற்றும் கௌசிகா.

''நான் சின்ன வயதில் உடல் பலவீனமாக இருந்தேன். ஏதாவது, விளையாட்டில் சேர்ந்தால், உடல் உறுதி பெறும்னு டாக்டர் சொல்ல, இந்த விளையாட்டில் சேர்ந்தேன். ஏழு வயதிலிருந்து விளையாடுறேன். இப்போ உடம்பும் உறுதி ஆகியிருக்கு, பதக்கங்களால் வீடும் நிறைஞ்சிருக்கு'' என்கிறார் ஜவஹர்.

மாவட்ட அளவிலான பரிசுகள், 2013-ல் டெல்லியில் நடைபெற்ற SGFI (School Game Federation of India) தேசியப் போட்டியில் வெண்கலம், 2014 முதலமைச்சர் கோப்பையில், ஈரோடு அணியின் சார்பாக தங்கம், தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக வெண்கலம் எனப் பதக்கப் பட்டியல் நீள்கிறது.

டேபிள் டென்னிஸ்... சின்னப் புயல்கள் !

''அப்போ எனக்கு 5 வயசு. அண்ணன் பயிற்சிக்குப் போகும்போது கூடவேபோய், வேடிக்கை பார்ப்பேன். எனக்கும் டேபிள் டென்னிஸில் ஆர்வம்வந்து, விளையாட ஆரம்பிச்சேன்'' என்கிற கௌசிகா, 10 தங்கப் பதக்கங்கள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று, அண்ணனுக்கு சவால்விடுகிறார்.

குஜராத், பெங்களூரு, ஜோத்பூர், டெல்லி எனப் பறந்து பறந்து விளையாடுகிறார். அவுரங்காபாத்தில் நடைபெற்ற ஷிநிதிமி போட்டியில் மூன்றாம் இடம், முதலமைச்சர் கோப்பையில் 75,000 ரூபாய் பரிசு என அசத்திவருகிறார்.

டேபிள் டென்னிஸ்... சின்னப் புயல்கள் !

''எங்க ரோல்மாடல் சரத் கமல். எங்க ரெண்டு பேருக்குமே ஒலிம்பிக் கனவு இருக்கு. நீங்க படிப்பில் எவ்வளவு சாதனை புரிந்தாலும், ஏதாவது ஒரு விளையாட்டிலும் ஈடுபடுங்க. அது, உடம்பையும் மனசையும் எப்பவும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்'' என்று டிப்ஸ் கொடுக்கிறார்கள், இந்தக் குட்டி நட்சத்திரங்கள்.

அடுத்த கட்டுரைக்கு