Published:Updated:

கோடி கோடி குறுங்கோள்கள் !

கோடி கோடி குறுங்கோள்கள் !
கோடி கோடி குறுங்கோள்கள் !
##~##

சூரியனுக்கும் சனிக்கும் உள்ள தொலைவு 100 அலகு எனக் கொண்டால், புதன் 4 அலகு. இதிலிருந்து பிற கோள்களின் தொலைவைக் கூட்டினால், வெள்ளி 7 (4 3), பூமி 10 (4 6), செவ்வாய் 16 (4 12), வியாழன் 52 (4 48), சனி 100 (4 96) என ஓர் ஒழுங்கு அமைப்போடு அமைகிறது என்ற கருத்தை டைடஸ் மற்றும் போடே எனும் விஞ்ஞானிகள், 18-ம் நூற்றாண்டில் முன்வைத்தனர். சனிக்கு அப்பால் கோள் இருந்தால், அது 196 (4 192) அலகு தொலைவில் இருக்கும் என்றும் கருதினர். சனிக்கு அப்பால் யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில், 28 (4 24) அலகு தொலைவில், ஒரு கோள் இருக்க வேண்டும் என்றும், அதை மர்மக் கோள் என்றும் கருதினர்.

கோடி கோடி குறுங்கோள்கள் !
கோடி கோடி குறுங்கோள்கள் !

குறுங்கோள்களை நான்கு வகைகளாக வகைப்படுத்தினர். C வகை, பூமிக்கு அருகே வலம் வருபவை. இவை கருமையாக, கார்பன் செறிவுடன் இருக்கும். D வகை, ட்ரோஜன் குறுங்கோள்கள் எனப்படும். S வகை, உட்கோள்கள் பாதையில் வலம் வரும் இவை, பாறைகள் நிரம்பிய, இரும்புச் செறிவு மிகுந்தவை. மெக்னீசியம், சிலிகேட், நிக்கல் போன்ற வேதிப் பொருள்களின் செறிவும் உண்டு. இவற்றில் கணிசமான அளவு தங்கம், இரிடியம் மற்றும் பிளாட்டினம் இருக்கும். V வகை, யுரேனஸ் மற்றும் வியாழனுக்கு இடையில் வலம் வருபவை. இதில், எளிதில் ஆவியாகும் வேதிப் பொருள் செறிவு அதிகம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள்களில் பெரியது,  ஸெரிஸ். இதன் விட்டம், 974 கிலோமீட்டர். பல கோடிக் குறுங்கோள்களின் மொத்த நிறையில், சுமார் 25 சதவிகிதம் இந்த ஒரு குறுங்கோளில் உள்ளது. மிகவும் சிறிய குறுங்கோள் 1991 ஙிகி. இதன் விட்டம், வெறும் ஆறு மீட்டர்தான்.

கோடி கோடி குறுங்கோள்கள் !

கிரேக்க, ரோமானியப் புராணப் பெயர்களைத்தான் முதலில், குறுங்கோள்களுக்கு வைத்தனர். பின்னர், வேறு கலாசாரப் பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர். இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோளுக்கு 'ஏசியா’ என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர், சில குறுங்கோள்களுக்கு ஹனுமான், கருடன் போன்ற புராணப் பெயர்களும் ராமானுஜன், சாராபாய் போன்ற விஞ்ஞானிகள் பெயர்களும் வைக்கப்பட்டன. தற்போது, பெரும்பாலும் பெயர் வைக்கும் முறை கைவிடப்பட்டுள்ளது. ஓர் அட்டவணை ஏற்படுத்தி, இதில் எண் வரிசை தரப்படுகிறது. இதன்படி, முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஸெரிஸ்-க்கு அட்டவணை எண் 1.

கோடி கோடி குறுங்கோள்கள் !
கோடி கோடி குறுங்கோள்கள் !

குறுங்கோள்களை இதுவரை தொலைநோக்கியில் மட்டுமே ஆராய்ந்துவந்தனர். சமீபத்தில், விண்வெளிக் கலங்கள் ஆராயத் தொடங்கின. 'கலிலியோ’ எனும் விண்கலம்தான் முதன்முதலில் 'காஸ்பரா மற்றும் 'ஐடா’ எனும் குறுங்கோள்கள் அருகே சென்று, ஆராய்ச்சி செய்தது. 'நியர்’ எனும் விண்கலம் 'மெதில்டே’ எனும் குறுங்கோளை ஆராய்ந்தது. 'ஈராஸ்’ எனும் குறுங்கோளில் தரை இறங்கியது. 'டான்’ எனும் விண்கலம், 'வெஸ்டா’ மற்றும் 'ஸெரிஸ்’ குறுங்கோள்களைச் செயற்கைக் கோள் போல வலம் வரச் செய்யும் திட்டம் உள்ளது.      

கோடி கோடி குறுங்கோள்கள் !

பூமியின் மீது ஒவ்வொரு நாளும் சுமார் 100 டன் எடை அளவு குறுங்கோள்கள் மோதுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சிறு சிறு மணல் அளவுதான். இவையே பூமியின் வளிமண்டலத்தில் பாயும்போது, உராய்ந்து எரிநட்சத்திரமாகக் காட்சிதருகிறது.  ஓர் ஆண்டில் சில தடவையேனும் சிறு கார் அளவுப் பாறை பூமியில் மோதி எரிந்துபோகும். அதன் சிறு பகுதி, பூமியில் விழும். இதுதான் எரிகல்.

கோடி கோடி குறுங்கோள்கள் !
கோடி கோடி குறுங்கோள்கள் !

குறுங்கோள்கள் அட்டவணையில், 243 எண்ணில் இருக்கும் 'ஐடா’ எனும் குறுங்கோளுக்குத் துணைக் குறுங்கோள் உள்ளது. 'டக்டைல்’  எனும் இந்தத் துணைக்கோள், 'ஐடாவை’ச் சுற்றிவருகிறது. இதுபோல சுமார் 150 குறுங்கோள்களுக்குத்  துணைக் குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில குறுங்கோள்கள் ஜோடி சேர்ந்து வலம்வருகின்றன. சில சமயம், மூன்று குறுங்கோள்கள் ஒன்று சேர்ந்து சுற்றிவருவதும் உண்டு.

கோடி கோடி குறுங்கோள்கள் !

'எதிர்காலத்தில், விண்வெளியில் கட்டுமானத்துக்குக் குறுங்கோள்களே மூலப்பொருள்’ என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அரிய உலோகங்களான பல்லடியம் போன்ற வேதிப் பொருள்கள் குறுங்கோள்களில் செறிவுறும்.  இவற்றை வெட்டி எடுத்து, விண்வெளியில் குடி அமைப்பது முதற்கொண்டு விண்வெளிக் கலம் தயாரிப்பது வரை எளிதில் செய்யலாம். இதனால்தான், குறுங்கோள்கள் மீது தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. விண்வெளியிலிருந்து தாதுப் பொருட்களை அறுவடை செய்தால், பூமியில் சுரங்கம் அமைத்து, தாதுப் பொருள்களை வெட்டி எடுக்க வேண்டாம். பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.  

கோடி கோடி குறுங்கோள்கள் !
கோடி கோடி குறுங்கோள்கள் !