Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:

நூறாண்டுச் சாதனை!

##~##

இந்தியாவின் தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூருக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அற்புதமான படைப்பாளியான அவருக்கு, 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 100 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் அதற்குப் பிறகு, எந்த இந்திய எழுத்தாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை இது வரை பெறவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

கொசுவே... கொசுவே!

நம் வீடுகளில் கொசுக்களுக்காகப் பயன்படுத்தும் பல வகையான மருந்துகளைக் 'கொசு விரட்டி’ என்று சரியாத்தான் சொல்றாங்க. காரணம், அதில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள், பெரும்பாலும் கொசுக்களின் உணர்வுகளை அடக்கி, அவற்றை விரட்டும் வேலையைத்தான் செய்கின்றன. அவற்றால் கொசுக்களை அழிக்க முடிவது இல்லை. அதனால், சுற்றுப்புறத் தூய்மை மூலம் கொசு உற்பத்தியைத் தடுப்பதுதான் சிறந்த தீர்வு.

சுட்டி ஸ்டார் நியூஸ்

 தி கிரேட் பேரியர் ரீஃப்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் கோரல் (Coral)  கடலில் உள்ளது, 'கிரேட் பேரியர் ரீஃப்’ (Great Barrier Reef) எனப்படும் மிகப் பெரிய பவளப்பாறைத் தொடர். 2,600 கிலோமீட்டருக்கு 900 தீவுகளைத் தொட்டுச் செல்லும் இந்தப் பவளப்பாறை, இயற்கை அதிசயங்களில் ஒன்று. 3,000 தனித்தனிப் பாறைகள் சேர்ந்த இந்தப் பெரிய பவளப்பாறை, பல கோடிச் சின்னஞ்சிறு உயிர்களால் ஆனவை. பவளப் பாறைக்கு அருகில்... பல வகை ஆமைகள், திமிங்கிலங்கள், டால்ஃபின்கள் வாழ்கின்றன. பவளப்பாறையை ஒட்டியுள்ள தீவுகளில், 200 வகையான பறவைகள் காணப்படுகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்

நோய் காட்டும் கண்ணாடி!

நமது உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் நோய் தாக்குதல் ஏற்பட்டால், நாக்கின் நிறத்தில் சிற்சில மாற்றங்கள் ஏற்படும். அதனால்தான், சிகிச்சைக்குச் செல்லும்போது, மருத்துவர்கள் நமது நாக்கை முதலில் பார்க்கின்றனர். அதைப் பார்த்தே பலவித நோய்களைக் கண்டுபிடித்துவிடலாம். உதாரணமாக, நாக்கில் கறுப்புத் திட்டுகள் காணப்பட்டால், வைட்டமின் பி-10 குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையைக் குறிக்கும். இனிமேல், கண்ணாடியில் முகம் பார்க்கிறப்ப நாக்கையும் பார்த்துக்கங்க. ஏதாவது மாற்றம் இருப்பதாகச் சந்தேகம் வந்தால், டாக்டர்கிட்டே காண்பிங்க.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சூரிய நமஸ்காரம்!

இயற்கையில் கிடைக்கும் பற்றாக்குறையே இல்லாத கிருமிநாசினி, சூரிய ஒளிக்கதிர்கள். இதில், 'அல்ட்ரா வயலெட்’ எனப்படும் புற ஊதாக் கதிர்கள் உள்ளன. மனிதன், கால்நடைகள், தாவரங்கள் மீது கிருமி நாசினியாகச் செயல்பட்டு, தீங்கு செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கின்றன. அதனால்தான் நமது முன்னோர்கள் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். பின்னால் வந்தவர்களில் பலர், இதை ஏதோ பக்தி விஷயம் என்று மட்டுமே நினைத்து ஒதுக்கிவிட்டார்கள்.  யோகா பயிற்சிகள் மூலம் இப்போது, சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்  தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது, மொட்டை மாடியில் கதிரவன் திசையில் கைகூப்பி நிற்கலாமே. சும்மா கிடைக்கும் கிருமிநாசினியை எதுக்கு விடணும்!

சுட்டி ஸ்டார் நியூஸ்