Published:Updated:

பென் டிரைவ்!

பென் டிரைவ்!

பென் டிரைவ்!

பென் டிரைவ்!

Published:Updated:
பென் டிரைவ்!
பென் டிரைவ்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமாக, 'மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியை’ ஆண்டுதோறும் கேரள அரசு நடத்திவருகிறது. இந்த ஆண்டு 54-வது கலை நிகழ்ச்சி, பாலக்காட்டில் நடைபெற்றது. 9,500 மாணவ மாணவிகள், 230 பிரிவுகளில் கலந்துகொண்டனர். இதில், செய்யுள் கூறும் போட்டியில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 16 மாணவ மாணவிகளில், ம.அலன் முதல் இடம் பெற்றார். இவர், பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் 2013-14 திட்டத்தின் சுட்டி ஸ்டார்களில் ஒருவர். நம்ம ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்கள்!

பென் டிரைவ்!

.அபூர்வமாகத் தென்படும் 'கண்ணாடி மீன்’ சமீபத்தில் நியூசிலாந்தில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடக்கில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில், அந்த நாட்டைச் சேர்ந்த ஃப்ரேஸர் என்பவருடைய வலையில் சிக்கிய இந்தக் கண்ணாடி மீனை, கடல் உயிரியல் ஆய்வக அதிகாரிகள் சோதித்தனர். இது, 'ஸல்பா மகியோர்’ (salpa maggiore) என்ற இறால் வகை மீன் இனத்தைச்  சேர்ந்தது என்று சொன்னார்கள். முழுக்க முழுக்கக் கண்ணாடி போல தெரியும் இந்த மீனின் உடல் வழியாக, எதிர்புறத்தில் உள்ள பொருட்களைத் துல்லியமாகப் பார்க்கமுடிகிறது. கலக்கல் மீன்!

பென் டிரைவ்!

பள்ளி மாணவர்கள் வகுப்புகளில் சோர்வடைவதைத் தடுத்து, உற்சாகமும் புத்துணர்ச்சியும் பெற, சீனக் கல்வியாளர்கள் ஒரு திட்டம் மேற்கொண்டனர். எல்.கே.ஜி., யுகேஜி படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில், தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர். இதன்படி, உணவு இடைவேளைக்குப் பிறகு, சுமார் 20 நிமிடங்கள் அந்த மாணவர்கள் உறங்க வைக்கப்பட்டனர். இது கைமேல் பலன் தந்தது. இப்போது, மேல் வகுப்புகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, சீனக் கல்வித் துறை பரிசீலித்துவருகிறது. இனி, வகுப்பில் 'ஒழுங்கா தூங்கச் சொல்றப்ப, யாருடா பாடம் படிச்சுட்டு இருக்கிறது?’ என்ற டயலாக் கேட்குமோ!

பென் டிரைவ்!

அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் வசிக்கும் ஜேவான் ஃபெல்டன் என்ற ஒன்பது வயதுச் சிறுவன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருந்தது. இதை அறிந்த அந்தப் பகுதி போலீசார், சர்வதேசப் புற்றுநோய் தினத்தன்று, சிறுவனின் கனவை நிறைவேற்றினர். டெட்ராய்ட் நகரின் ஒருநாள் போலீஸ் தலைமை அதிகாரியாக ஃபெல்டன் நியமிக்கப்பட்டான். அன்றைய பணிகள் அனைத்தையும் சக காவலர்களுடன் ஆலோசனை நடத்தி செயல்படுத்தினான் ஃபெல்டன். தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ''நான் சீக்கிரமே உடல் நலம் தேறி, பள்ளிக்குச் செல்வேன்'' என்றான். உன் நம்பிக்கை ஜெயிக்கட்டும் ஃபெல்டன்!

பென் டிரைவ்!

கரூர் வேலம்மாள் வித்யாலயா மற்றும் வேலம்மாள் மெட்ரிக் பள்ளிகளில் விளையாட்டு தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய நீதிபதி குணசேகரன், ''விளையாட்டு, உடல் மற்றும் அறிவுத் திறனை வளர்க்கவும் எதிர்பாராத தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையையும் மேம்படுத்துகிறது'' என்று கூறினார். சர்வதேசக் கபடி விளையாட்டு வீரர் சுந்தரராஜ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கிரிக்கெட், கோக்கோ, வாலிபால், த்ரோபால் எனப் பல்வேறு போட்டிகளில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. யோகாவிலும் பல்வேறு சாகசங்களைச் செய்து அசத்தினார்கள். உடலினை உறுதி செய்!

பென் டிரைவ்!

'தன்னம்பிக்கையும் உறுதியும் இருந்தால், சாதனை என்பது மிகவும் சாதாரணமே’ என்று நிரூபித்து இருக்கிறான், அமெரிக்காவைச் சேர்ந்த 10 வயது ஜஹ்மிர் வாலஸ் (Jahmir Wallace). பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாத வாலஸ், தனது நண்பர்களைப் போல ஏதேனும் இசைக்கருவி ஒன்றைக் கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வாலஸ் படிக்கும் பள்ளி நிர்வாகமும் உள்ளூர் இசைக் கருவிகள் விற்கும் நிறுவனமும் உதவிசெய்து, டிரம்பெட் கருவியைக் கற்றுக்கொடுத்தனர். இப்போது, தன் கால் விரல்களால் அழகாக டிரம்பெட் கருவியை இசைத்து, அனைவரையும் அசத்துகிறார் வாலஸ். தன்னம்பிக்கை நட்சத்திரம்!