Published:Updated:

தேல்ஸ்

இரா.சிவராமன்

தேல்ஸ்

இரா.சிவராமன்

Published:Updated:
##~##

கிரேக்க நாட்டின் மிலேடஸ் எனும் நகரில் பிறந்தவர், தேல்ஸ். இவரது காலம் கி.மு. 624 - 546 என நம்பப்படுகிறது. 'இயற்கை நிகழ்வுகளுக்குக் கடவுள் அருளே காரணம்’ என்று நம்பிய காலம். அந்த நிகழ்வுகளை அறிவியல், கணிதம் துணை கொண்டு விளக்கியவர். கிரேக்க நாட்டின் ஏழு ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது வானியல்  கணிதச் சிந்தனை, ஒரு மாபெரும் போரையே முடிவுக்குக் கொண்டுவந்தது.

தேல்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கி.மு. 585 காலகட்டத்தில் மீட்ஸ் மற்றும் லிடியன்ஸ் என்ற இரு தரப்பினருக்கு இடையே ஐந்தாண்டுகளாகக் கடும் போர் நடந்தது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தார் தேல்ஸ். பாபிலோனியர்கள் மற்றும் எகிப்தியர்கள் பதிவு செய்திருந்த வானூல் அடிப்படைகளைக் கொண்டு, கி.மு. 585 மே 28, அன்று முழுச் சூரிய கிரகணம் ஏற்படும் என்று கண்டறிந்தார். இதை சாதகமாக்கி, ஒரு  திட்டத்தை வகுத்தார். ''உங்கள் போரினால் தேவதைகள் கோபம்கொண்டு, பகலை இருள் சூழ்ந்த இரவாக்க முடிவு செய்திருக்கிறார்கள்'' என்றார்.

அதைப் பொருட்படுத்தாமல், இரு தரப்பினரும் தொடர்ந்து போர் புரிந்தனர். தேல்ஸ் குறிப்பிட்ட நாளில், முழுச் சூரிய கிரகணம் ஏற்பட்டது. பட்டப் பகலில் திடீரென பேரிருள் சூழ்ந்துகொண்டதைக்

தேல்ஸ்

கண்டதும் பயந்துபோய், இரு தரப்பினரும் தங்கள் போரை நிறுத்தினார்கள்.

2,600 வருடங்களுக்கு முன்பே, மிகத் துல்லியமாக முழுச் சூரிய கிரகண நிகழ்வை தேல்ஸ் கணித்ததற்கு முக்கியக் காரணம், அவரது கணித ஆற்றல்தான்.

கணிதத்தில் முதன்முதல் தேற்றத்தை (First Theorem in Mathematics)வழங்கிய பெருமை இவரையே சேரும். தானறிந்த கணித உண்மைகளை, அறிவியல் சிந்தனைகளை மக்கள் தேவைக்காகப் பயன்படுத்துவதில் தேல்ஸ் வல்லவராகத் திகழ்ந்தார். ஜியோமெட்ரியில் தோன்றும் வடிவொத்த முக்கோணங்கள் (Similar Triangles) கருத்தைக்கொண்டு, பிரமிடுகள், பெரிய கோபுரங்களின் உயரத்தைக் கண்டறிந்தார். சர்வ சம முக்கோணங்கள் (Congruent Triangles) கருத்தைக்கொண்டு, கடற்கரையில் இருந்து எவ்வளவு தொலைவில் ஒரு கப்பல் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டார்.

இந்த உலகம், நீரினால் ஆனது என்றும் உலகின் எல்லாத் தன்மைகளையும் நீரைக்கொண்டு விளக்கலாம் என்றும் நம்பினார். இந்தக் கருத்து முற்றிலும் உண்மையாகாது என்றாலும் இன்று, கிட்டத்தட்ட 70 சதவிகிதம் நீரைக்கொண்டே நம் புவி அடங்கியுள்ளது.

இன்றும் கிரேக்க நாட்டு மக்கள் வணங்கும் சிறந்த ஞானியாக இருக்கிறார் தேல்ஸ்.