Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

Published:Updated:
##~##

''ஹாய் ஜீபா... உலகில் மிக விலைமதிப்புள்ள கார் எது?''

- ம.சிபிஸ்ரீபாலாஜி, திருப்பூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உலகில், இப்போது இருக்கும் கார்களில் மிகவும் விலை உயர்ந்தது, லம்போர்கினி வெனினோ ரோட்ஸ்டெர் (Lamborghini Veneno Roadster). இத்தாலி நாட்டின் தயாரிப்பான இந்தக் கார், மணிக்கு 221 மைல் வேகத்தில் செல்லும். அதாவது, சென்னையில் இருந்து பெங்களூருக்கு 1 மணி நேரத்தில் சென்றுவிடலாம். இந்தக் காரின் விலை, 28 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம். இது ஆரம்ப விலைதான். இந்த ஆண்டில் ஒன்பது கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன.''

''டியர் ஜீபா... பச்சோந்தி தனது உடல் நிறத்தை எப்படி மாற்றுகிறது?''

- ஏ.தினேஷ், கோவை.

''பச்சோந்தி, தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது உண்மை அல்ல. சிவப்பு நிறப் புள்ளிகள்  போலவோ, கட்டம் போட்ட துப்பட்டி போலவோ, அடர்ந்த ஆரஞ்சு நிறமாகவோ (அதுபோன்ற சூழலில் இருந்தாலும்) மாறிவிடாது. பச்சை, பழுப்பு மற்றும் சாம்பல் என ஒவ்வொரு பச்சோந்தியும் குறிப்பிட்ட சில நிறங்களை மட்டுமே மாற்ற முடியும். பச்சோந்திகள், ஒரு கூட்டுத் திசு அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த அமைப்புதான், அதன் விசேஷமான குணத்துக்குக் காரணம். ஒளி ஊடுருவும் (ஜிக்ஷீணீஸீsஜீணீக்ஷீமீஸீt) தன்மை உடைய அதன் மேல் தோலுக்குக் கீழ் இருக்கும் திசு அடுக்குகளில், பல நிறமிகள் உள்ளன. 'மெலனோபோர்ஸ்’ எனப்படும் அந்தத் திசுக்களைத் திறக்கவும் மூடவும் முடியும். தோல் மேல் படும் சூரிய ஒளி, அந்தத் திசுக்களில் பட்டுப் பிரதிபலிக்கும்போது, நிறத்தை வெளிப்படுத்துகிறது. நோய்வாய்ப்பட்ட பச்சோந்தி, வெளிர் நிறத்தில் இருக்கும். அதற்கு, உடலில் நிறத்தை மாற்றும் திறன் இருக்காது.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... பாம்பன் பாலம் எப்போது கட்டப்பட்டது?''

- எம்.ஹரிஸ்கான், செட்டிகுளம்.

''பாம்பன் பாலம், இயற்கையின் மேல் கட்டப்பட்ட பொறியியல் அதிசயம். பாம்பன் தீவில் இருக்கும் ராமேஸ்வரம் நகரத்தை, இந்தியாவுடன் இணைக்கும் இந்தப் பாலத்தின் நீளம், 2.3 கிலோமீட்டர். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள பாக் ஜலசந்தியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தில், சாலைப் போக்குவரத்து வழியும் ரயில்வே பாதையும் அமைந்துள்ளன. 1914-ல் திறக்கப்பட்ட, இந்தியாவில் முதன்முதலில் கடல் மேல் கட்டப்பட்ட பாலம். 2010 வரை, நம் நாட்டில் கடல் மீது அமைந்துள்ள பாலங்களில் மிக நீளமான பாலமாக விளங்கியது. இப்போது 2-வது இடம். (முதல் இடம், மும்பை, பாந்த்ரா - வொர்லி பாலம்). மிகப் பெரிய கப்பல்கள் இந்த பாக் நீரிணைப்பைக் கடக்கும்போது, இந்தப் பாலத்தின் நடுவே இருக்கும் லீவர்கள் திறந்து வழிவிடும். 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, இந்தியர்களால் கட்டப்பட்ட பாம்பன் பாலம், நம் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் பணித் திறமைக்கு சிறந்த உதாரணம்.''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... எனக்குப் பிடித்த அரசர், கரிகால் சோழன். அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்.''

- அ.தமிழ் அழகி, நீர்முளை, நாகை.

''கரிகால் சோழன், சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னர். திருமாவளவன், பெருவளத்தான் என்னும் பட்டப் பெயர்களும் இவருக்கு உண்டு. சோழ குலத்தை, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தவர். சங்க காலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. 'கரிகாலன்’ என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்று பொருள். இளம் வயதில் ஏற்பட்ட தீவிபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டதால்  இந்தப் பெயர். பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்

மை டியர் ஜீபா...

பெற்றபோது, 'யானைகளின் (எதிரிகளின்) எமன்’ என்று இந்தப் பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.

புலிக்குட்டி, கூண்டுக்குள் வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்தே வல்லமை பெற்றவர். கரிகாலனின் ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர், வெண்ணிப் போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தருக்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இந்தப் போரே.''

''டியர் ஜீபா, நாம் இரவில் மரத்துக்கு அடியில் தூங்கலாமா?''

- பீ.வில்சன் ஆண்ட்ரூஸ், வடுகர்பேட்டை.

''தாவரங்கள், சூரிய ஒளி இருக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியே விடுகின்றன. ஆனால், இரவில் அவற்றால் கார்பன் டை ஆக்ஸைடை உபயோகிக்க முடியாமல் போவதால், காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கிறது. இரவு நேரத்தில், மரத்தின் அடியில் படுத்தால், நமக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால், இரவில் மரத்துக்கு அடியில் படுத்து உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அறிவியல் ரீதியாகச் சொல்வதைவிட, 'இரவில், புளிய மரத்துக்கு அடியில்  படுத்தால், பேய் அடிக்கும்!’ என்று ஒரு கதையைக் கிளப்பிவிட்டால், நம் மக்கள் பயந்துபோய் கேட்பார்கள் என்பதால், கிராமங்களில் அப்படிச் சொல்லப்படுவதும் உண்டு.''