Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:

உலகிலேயே குளிரான பகுதி!

உலகிலேயே குளிரான பகுதி அண்டார்டிக்கா என்று தெரியும். ஆனால், அண்டார்டிக்காவில் எந்தப் பகுதி மிகவும் குளிரானது?

கிழக்கு அண்டார்டிக்காவில் உள்ள பீடபூமி (Plateau)தான் உலகின் மிகக் குளிரான பகுதி என்று செயற்கைக்கோள் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு, -93.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு, அண்டார்டிக்காவில் இருந்த ரஷ்யாவின் ஆராய்ச்சி மையமான வோஸ்டாக் ஸ்டேஷன்தான் அதிகக் குளிரான பகுதியாக இருந்தது (-89.2 செல்சியஸ்)!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

 மின்னஞ்சல்

 மின்னஞ்சல் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

சுட்டி ஸ்டார் நியூஸ்

மின்னஞ்சல் முகவரிகள், இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று, மின்னஞ்சலை உபயோகிப்பவரது பெயர் (user name) அடையாளம். மற்றொன்று, அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிப் பயன்படுத்தத் தருபவரது பெயர் (Domain name) அடையாளம். இந்த இரண்டையும் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடு. உதாரணமாக, gmail.com என்பது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளம். அதில் ஒருவரின் மின்னஞ்சல் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of)என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம்!

 பார்த்தா சிறுசு... வளர்ச்சியோ பெருசு!

 மடகாஸ்கரில் வாழும் சிறிய பாலூட்டி இனம், 'டென்ரெக்’ (Tenrec). இவற்றில், 5 சென்டிமீட்டர் முதல் 39 சென்டிமீட்டர் வரை பல வகைகள் உள்ளன. உருவில் சிறியதாக இருந்தாலும் இந்த விலங்கு மிகவும் வேகமாக வளரக்கூடியது. பிறந்த சிறிது நேரத்திலேயே ஓட ஆரம்பித்துவிடும். ஆறாவது நாளிலிருந்து பூச்சிகளைத் தின்னத் தொடங்கிவிடும். இதே நேரத்தில், மற்ற விலங்குகளின் குட்டிகளோ, தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

 கார்ன் ஃப்ளேக்ஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

 சிறுவர்களால் விரும்பி உண்ணப்படுவது கார்ன் ஃப்ளேக்ஸ். இது, 'வில் கேத் கெல்லாக்’ (will keith kellogg) என்பவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது சகோதரர் ஜான் ஹார்வி கெல்லாக், புகழ்பெற்ற மருத்துவர். கேத் கெல்லாக், தனது சகோதரருக்கு உதவியாக, மருத்துவமனை நோயாளிகளுக்கான உணவு தயாரிக்கும் பொறுப்பேற்று இருந்தார். ஒருநாள், ரொட்டிக்கான மாவை நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டுவிட்டார். பிறகு வந்து பார்த்தபோது, அந்த மாவு மெல்லிய சீவல்களாகி இருந்தது. ஆர்வத்தினால் அதை வாணலியில் வாட்டினார். அது ஒரு மொறுமொறுப்பான சிற்றுண்டியாக ஆனது. நோயாளிகளும் ஆர்வமாக உண்டார்கள். அதனால், இதையே தொழில்துறையில் தயாரித்து வெற்றிபெற்றார்!

 ரெட் சிக்னல்

சுட்டி ஸ்டார் நியூஸ்

ரஷ்யாவின் 'உக்ரைன்’ பகுதியில்தான் செர்னோபில் அணுமின் நிலையம் இருந்தது. 1986-ல் அந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக, கடுமையான கதிர்வீச்சு ஏற்பட்டு, அருகில் இருந்த காட்டுப் பகுதியைப் பதம் பார்த்தது. கதிர்வீச்சின் பாதிப்பால், பச்சை இலைகள் மெள்ள மெள்ள சிவப்பாக மாறிவிட்டன.  அந்தக் காட்டை, சிவப்புக் காடு (Red Forest) என்றே அழைக்கிறார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்ட இயற்கை எவ்வளவு 'ரெட் சிக்னல்’ போட்டாலும்,  அவர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism