Published:Updated:

மின்னும் அன்புப் புன்னகை !

என்.மல்லிகார்ஜுனா

மின்னும் அன்புப் புன்னகை !

என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:

'அறியாமையுடன் 100 ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேல்!’ என்று சொன்னவர் கௌதம புத்தர்.

பல்வேறு நாடுகளில் புத்தருக்கு பிரமாண்ட சிலைகள், கோயில்கள் கட்டி, பிரார்த்தனை செய்துவருகிறார்கள். அந்த வரிசையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில்... பிரமாண்டமான புத்த ஸ்தூபியை அமைத்திருக்கிறது, 'தம்மகாய’ (Dhammakaya) அறக்கட்டளை. இந்த ஸ்தூபியில், தங்க முலாம் பூசிய மூன்று லட்சம் புத்தர் சிலைகள் பொருத்தப்பட்டுள்ளன.

புத்தத் துறவிகள் மட்டும் அல்லாமல், பொது மக்களும் பிரார்த்தனை செய்வதற்காக 6,000 கோடி ரூபாய் செலவில் இதனை அமைத்துள்ளது, தம்மகாய அறக்கட்டளை. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகிறார்கள்.  ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்னும் அன்புப் புன்னகை !

சிந்தும் புன்னகையுடன் ஒரே இடத்தில் மொத்தமாக இத்தனை புத்தர் சிலைகள், மின்னலாக மனதைக் கொள்ளை அடிக்கின்றன. இன்னும் ஏழு லட்சம் புத்தர் சிலைகளைப் பொருத்த இருக்கிறதாம் தம்மகாய அறக்கட்டளை.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism