Published:Updated:

கணிதப் புலிகள்: பைதாகரஸ்

கணிதப் புலிகள்: பைதாகரஸ்

கணிதப் புலிகள்: பைதாகரஸ்

கணிதப் புலிகள்: பைதாகரஸ்

Published:Updated:

முதன்முதலாக குருகுல முறையில் பள்ளி என்ற அமைப்பை ஏற்படுத்தி, அறிவைப் பரப்பிய மேதை பைதாகரஸ் (பிதாகரஸ் என நீங்கள் படித்திருப்பீர்களே அவரேதான்).

இத்தாலி நாட்டின் அந்த நாளைய நகரமான 'சாமோஸ்’ என்ற இடத்தில், கி.மு.569-ல் பைதாகரஸ் பிறந்தார். இவரது தந்தை ஒரு வியாபாரி. அவருடன் பல இடங்களுக்குச் சென்று உலக அறிவை வளர்த்துக்கொண்டார் பைதாகரஸ். தேல்ஸ் மற்றும் அனாக்ஸிமான்டர் என்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றார். எகிப்துக்குச் சென்று பல கலைகளைக் கற்றார். தானே ஒரு பள்ளி அமைப்பை 'அரைவட்டம்’ என்ற பெயரில் தொடங்கினார். குருகுல முறையில் சீரும் சிறப்புமாக அந்தப் பள்ளி இயங்கியது.

ஆங்கே ஆண், பெண் இரு பாலரும் பாடம் பயில, பைதாகரஸ் வழிவகுத்தார். உலகிலேயே முதன்முதலில் பெண்களுக்கு சம உரிமை வழங்கி, அவர்களைக் கல்வி கற்கச் செய்த பெருமை இவரையே சாரும். இவரது பள்ளியில் மதம், அறிவியல் ஆகிய இரு அம்சங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பள்ளியில் பயில்பவர்களுக்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே  ஆன்மா தூய்மை அடையும் என்றார் பைதாகரஸ். இவரது போதனைகள் மிக விரைவில் பிரபலம் அடைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவரது பள்ளியில் பயில்பவர்களை, 'பைதாகோரியன்ஸ்’ என்று அழைப்பர். இன்றும் பைதாகரஸ் சிந்தனைகள், பலரால் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. கணிதத்தில் முதன்முறையாக நேர்த்தியான ஆய்வுகள் மூலம், கணித உண்மைகளைக் கண்டறிந்த பெருமை, பைதாகோரியன்ஸ் குழுவையே சாரும்.

கணிதப் புலிகள்: பைதாகரஸ்

எண் கணிதத்தில், பைதாகரஸ் பல உண்மைகளைக் கண்டறிந்தார். எண்களுடன் வாழ்வியல் சம்பந்தப்பட்ட செய்திகளை நேர்த்தியாக ஒப்பிட்டார். உதாரணமாக, ஒற்றை எண்கள் ஆண்களையும் இரட்டை எண்கள் பெண்களையும் குறிப்பதாகக் கருதினார். 'உலகில் உள்ள எல்லா உண்மைகளையும் எண்களைக் கொண்டே புரிந்துகொள்ளலாம்’ என்பது அவரது பள்ளியின் வாசகமாகக் கருதப்பட்டது. இவரே கணிதத்துக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முதன்முதலில் கண்டறிந்து விளக்கினார். மேலும், இவரது வானவியல் நூலிலும் பல உண்மைகளை விளக்கி உள்ளார். இவரது போதனைகள், இன்றளவும் உண்மையாக விளங்குவதே இவரது சிந்தனையின் வெற்றி.

பைதாகரஸ் மந்திர, தந்திர சக்தியைப் பெற்றவர் என்றும் அவர், மக்களின் நோய்களைத் தனது அதீத சக்தியால் குணப்படுத்தியதாகச் சில குறிப்புகள் உள்ளன. ஆனால், இதற்கு வரலாற்றில் எந்த நிரூபணமும் இல்லை.

எனினும், பைதாகரஸ் வழங்கிய செய்திகளின் மூலம் அவர், கணிதத்தில் சிறந்த மாமேதையாக வலம்வந்தார்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism