Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
பென் டிரைவ் !

''இந்தக் காலத்துப் பசங்க கார்ட்டூன் சேனலே கதியா இருக்காங்க. கதைப் புத்தகம் எங்கே படிக்கிறாங்க?'' என்கிற குற்றச்சாட்டை உடைத்திருக்கிறார், ஃபெய்த் ஜாக்சன் (Faith Jackson). இங்கிலாந்தைச் சேர்ந்த 9 வயது ஃபெய்த், ஏழு மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து, சாதனை படைத்துள்ளார். ''எனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும்.  மந்திர தந்திரக் கதைப் புத்தகங்கள், சாகசக் கதைகள், விலங்குகள் பற்றிய புத்தகங்கள் என்றால், விடவே மாட்டேன்'' என்கிற இந்தப் படிப்பாளினி, ஜிம்னாஸ்டிக், கராத்தே மற்றும் வலைப் பந்து பயிற்சிகளையும் கற்றுவருகிறார். உடலையும் கற்பனை வளத்தையும் டபுள் ஸ்ட்ராங் பண்றீங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

 சின்ஜிதா - சென்னை, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி. நீச்சல், ஓட்டப் பந்தயங்களில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதக்கங்களைக் குவித்துள்ளார். 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2 நிமிடம் 2 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். நீச்சல் மற்றும் ஓட்டப் பந்தயங்களில் இவர் வென்ற பதக்கங்கள்... 12 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம். சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியிலும் பதக்கத்தை வென்ற சின்ஜிதா, ''ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது கனவு'' என்கிறார். சபாஷ் சின்ஜிதா!

பென் டிரைவ் !

 திருநெல்வேலி மாவட்டம், பால அருணாசலபுரத்தில் இருக்கிறது, சாதனா வித்யாலயா பள்ளி. இங்குள்ள மாணவர்கள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை ஐக்னோ-ரைட் (Icono-write)  எனும் எழுத்துகளை ஓவியமாக வரையும் முறைப்படி எழுதி சாதனை படைத்தனர். ''சிந்தனையும் புதிய கண்டுபிடிப்புக்கான தூண்டுதலையும் ஏற்படுத்தும் இந்த முறையைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே, இதை ஏற்பாடு செய்தோம். அறிஞர்களின் படங்களில், அவர்களின் வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்புகளை ஐக்னோ-ரைட் முறைப்படி மாணவர்கள் எழுதினார்கள். 14-ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய ஐக்னோ-ரைட் முறையைத் தமிழகத்திலேயே எங்கள் பள்ளியில்தான் செயல்படுத்திவருகிறோம். இதனால், மாணவர்களுக்கு எழுத்தாற்றல், கலைத்திறன், மனக்கூர்மை, கல்வியில் ஆர்வம் மற்றும் விடாமுயற்சி எற்படுகிறது'' என்கிறார், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வின். நல்ல முயற்சி!

பென் டிரைவ் !

 சமீபத்தில், 'ஒரு நாள் காவல்துறை துணை ஆணையாளரா’கப் பொறுப்பேற்றார், கொல்கத்தாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அ. .. சிர்ன்ஷ§ ஹரிகுமார். கொல்கத்தாவில் உள்ள குருபச்சன் சிங் சொந்தி மகளிர் பள்ளியில் படிக்கிறார். அந்த நகரின் போக்குவரத்துக் காவல்துறை, போக்குவரத்து நெரிச லைக் கட்டுப்படுத்துவது குறித்து, பள்ளிகளுக்கு இடையே நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றார் அன்ஷ§. அவரை, ஒருநாள் மட்டும் கொல்கத்தா காவல் துறை துணை ஆணையாளராக நியமித்துக் கௌரவித்தனர். நல்லாப் படிச்சு, வருங்காலத்தில் அதே பதவியைப் பிடிங்க அன்ஷ§!

பென் டிரைவ் !

 மணிக்கு 643 கிலோமீட்டர் வேகம்... அட, இது ஜெட் விமானத்தின் வேகம் இல்லைங்க... ஒரு லாரியின் வேகம். கனடாவின் ஓன்டாரியோ நகரில், நவீன வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட லாரி ஒன்று, பார்வையாளர்களைப் பிரமிக்கவைத்தது. 'ஷாக்வேவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த லாரியின் உரிமையாளர், நியெல் டார்னெல் (Neal Darnell). 1957-ல் தயாரிக்கப்பட்ட 'செவர்லெட்’ லாரியின் வடிவமைப்பை மாற்றி, அதில் மூன்று பழைய ஜெட் விமான இன்ஜின்களைப் பொருத்தி இருக்கிறார். இந்த லாரி, ஒரு மணி நேரத்தில் சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது. திரும்பிப் பார்க்கிறதுக்குள்ளே 'ஜெட்’டாகப் பறந்துடும்.  

பென் டிரைவ் !

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, 'லிம்போ ஸ்கேட்டிங்’கில் எட்டு வயதுச் சிறுவன், மேட்வின் தேவா 'ஆசியா புக் ஆஃப் ரிக்கார்டு’ சாதனை படைத்திருக்கிறார்.  சென்னை, அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஈவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தேவா, ஸ்கேட்டிங்கில், 9 இன்ச் உயரத்தில் பொருத்தப்பட்டு இருந்த பலகையில் உடல்படாமல் புகுந்து, 40 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் 10 இன்ச் உயரத்தில் 10 மீட்டர் தூரத்தைக் கடந்ததே இதற்கு முந்தைய சாதனை. சறுக்குவதில்  சாதனை!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism