''நாங்க இப்போ டீச்சர்ஸ். பாடங்களை முடிச்சுட்டுப் பேசுறோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்'' என்று பொறுப்புடன் சொன்னார், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர்.
திருச்சி, ராமலிங்க நகரில் உள்ளது சிவானந்த பாலாலயா. அங்கே, மாணவர்கள் தங்களது டீச்சரை ஆன்ட்டி என்றுதான் அழைக்கிறார்கள். தற்போது, மாணவர்களால் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் திட்டத்தையும் அந்தப் பள்ளி அறிமுகப்படுத்தி உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''7 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று நாட்கள் ஆசிரியர்களாக இருப்போம். இதற்காக, 79 மாணவர்கள், கடந்த இரண்டு மாதங்களாகப் பயிற்சி எடுத்தோம். பாடங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, பவர் பாய்ன்டில் சிலைடுகள் உருவாக்கினோம். அதே சமயம் எங்கள் பாடங்கள், வகுப்புகள் பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டோம். இவர்களுக்குப் பாடம் நடத்துவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம் ஆசிரியர்களின் சிரமங்களையும் புரிந்துகொண்டோம்'' என்கிறார்கள் மாணவ ஆசிரியர்கள்.
பாடம் முடித்துவிட்டு, தங்கள் மாணவர்களோடு வகுப்பிலேயே விளையாடவும் செய்கிறார்கள் இந்தக் குட்டி ஆசிரியர்கள். இவர்களிடம் பாடம் படித்த சுட்டி மாணவர்களோ, ''ஆன்ட்டியைவிட இந்த அண்ணன், அக்காவை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. இவங்களே தினமும் பாடம் நடத்தினா நல்லா இருக்கும்'' என்கிறார்கள் குஷியாக.
