க.ஸ்ரீப்ரியா

கூகுள்... இன்டர்நெட் பயன் படுத்துபவர்களுக்கு அரிச்சுவடி. எத்தனையோ இணையதளங்கள் இருந்தாலும், பலரின் ஹோம்பேஜாக இருப்பது கூகுள்தான். அதற்குக் காரணங்கள் பல.

சின்னச் சின்ன விஷயங்களில் அழகையும் நேர்த்தியையும் கொடுப்பது அதில் ஒன்று. கூகுள், பார்வைக்கு ஒரே மாதிரியான லோகோ இல்லாமல் அவ்வப்போது மாறிட்டே இருக்கும். இது சுட்டீஸ்களுக்கு மட்டும் இல்லை பெரியவங்களுக்கும் கூட பிடிக்கும்.

இந்த மாதிரி தீம் வச்ச கூகுள் லோகோக் களை டூடுல்னு சொல்வாங்க. இந்த கூகுள் டூடுல் எப்படி ஆரம்பிச்சது?

அதுக்கு முன்னாடி, கூகுள் என்ற பெயர் எப்படி வந்துச்சுன்னு பார்ப்போம். 'பாக்ரப்’ என்ற பெயரில் ஒரு தேடுதல் இயந்திர நிறுவனம் (search engine) இயங்கி வந்தது. அதன் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவருக்கும் நிறுவனத்துக்கு அசத்தலான பெயர் வைக்கலாமே என்று தோன்றியது. மண்டையைப் போட்டு உடைச்சுக்கிட்டு யோசிச்சதில் கூகுள் என்று பெயர் சிக்கியது.

கணிதத்தில் googol என்பது ஒன்றுக்குப் பிறகு 100 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் மதிப்பு. ஆனால், நிறுவனத்தின் பெயரை ரெஜிஸ்டர் பண்ணும்போது எப்படியோ தப்பா google-ன்னு ஆயிடுச்சு. இது எப்படி இருக்கு?

1998-ல் Burning Man Festival-க்காக முதல் சீசனல் லோகோவை கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் டிசைன் பண்ணாங்க.

பிறகு, கூகுள் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய வந்த துடிப்பான டென்னிஸ் வாங் (Dennis Hwang) என்கிற கல்லூரி மாணவரிடம் இந்த இன்ட்ரஸ்டிங்கான வேலையை ஒப்படைச்சாங்க. அப்போ இருந்து இப்போ வரை டென்னிஸ் தன்னோட டிசைனிங் திறமையால் கலக்கிட்டு இருக்கார். டென்னிஸ்கிட்ட இந்த ஜாலியான வேலையைப் பத்திக் கேட் போமா...

ஹாய் டென்னிஸ்... நீங்க கூகுளுக்காக முதல் முதலில் டிசைன் பண்ண லோகோ பத்தி சொல்லுங்களேன்?

‘‘Burning Man Festival-க்காக லாரி பேஜ் பண்ண டூடுல் ஹிட் ஆனதால, அது மாதிரி சீசனல் டூடுல்ஸ் போட வெளியில் இருக்கிற கான்ட்ராக்டர்ஸ்கிட்ட கொடுத்துட்டு இருந்தாங்க. 2000-ல் கல்லூரி படிக்கும்போது, கூகுளில் இன்டர்ன்ஷிப் பண்ணிட்டு இருந்தேன். அப்போ லாரி பேஜ், செர்ஜி இருவரும் ஜூலை 4 தேதிக்காக தயாரித்த ஒரு கூகுள் டூடுலை கொடுத்து, அதை இன்னும் வேடிக்கையா மாற்ற முடியுமான்னு கேட்டாங்க. நான் பண்ண சின்னச் சின்ன ஜிம்மிக்ஸ் மாற்றங்களில் இம்ப்ரெஸ் ஆகி, டூடுல் பண்ற பொறுப்பை என்கிட்ட கொடுத்தாங்க.

நானே மண்டையை உடைச்சுக்கிட்டு பண்ண முதல் லோகோ Bastille Day-தான். இப்போ நான் கூகுள்ல சீஃப் டூட்லர். கிட்டத்தட்ட 11 வருஷமா டூடுல்... டூடுல்... டூடுல்... மட்டும்தான்!

கூகுள் வார்த்தையிலேயே எந்த எழுத்து டூடுல்க்கு ஈசியா இருக்கும்?

O மற்றும் L, ஏன் என்றால், எல்லா விதமான படங்களுக்கும் ஈஸியா வளைந்து கொடுக்கும். G கொஞ்சம் சிரமமா இருக்கும்.E கடைசியா இருக்கிறதால அதற்கென கொஞ்சம் அதிகமா கவனம் செலுத்துவேன்.

கூகுள் வார்த்தையில் உங்களுக்கு பிடித்த எழுத்து எது?

கிட்டத்தட்ட 11 வருஷமா இந்த 5 எழுத்துகளை டீல் பண்றேன். ஒரு தீம்க்காகவே எக்கச்சக்க டூடுல்ஸ் போடுவேன். ஸோ... எல்லா எழுத்துகளையும் பிடிக்கும். ஐ லவ் கூகுள்!

எப்படி எல்லா சூழலுக்கும் பொருத்தமா டூடுல்ஸ் வரைய முடியுது உங்களால்?

ஐயோ அது ரகசியமாச்சே! ஓகே... உங்களுக்கு மட்டும் சொல்றேன். சின்ன வயசில எலிமெண்ட்ரி ஸ்கூல் படிக்கும்போதே குட்டி குட்டியா டூடுல்ஸ் போடுவேன். அப்போ எனக்கு தெரியலை அது தான் என் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகுதுனு. ஸோ... உங்களுக்குள்ள இருக்கிற குட்டி குட்டி திறமைகளை வளர்த்துக்க முயற்சி பண்ணுங்கள்.

இந்த டூட்லர் டென்னிஸ்க்கு மட்டும்தான்னு நினைச்சுடாதீங்க சுட்டீஸ். கூகுள் நிறுவனம் மாணவர்களுக்கும் போட்டி நடத்தி அறிமுகப்படுத்தி இருக்காங்க. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த டூடுல்... கூகுள் இணையதளத்தில் வெளியிடப்படும். பரிசும் உண்டு. பொதுவாக யு.ஸ் மாணவர்களுக்கே நடத்தப்படுகிறது. 2009-ல் 'என் இந்தியா’ என்ற தலைப்பில் இந்திய மாணவர்களுக்காக நடந்தது. அதில் முதல் பரிசு பெற்ற டூடுல், 2009 குழந்தைகள் தினத்தில் கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் லோகோவாக வெளியானது.