என்.மல்லிகார்ஜுனா

''நான் ரொம்ப தைரியசாலி. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பேன்’ என்று சொல்கிற சிலரைப் பார்த்து இருப்பீர்கள். இவர்கள் சொல்வ தோடு சரி, கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை பத்தடி தள்ளி நின்றுதான் பார்ப்பார்கள். ஆனால், உண்மையாகவே ஒருவர் சிங்கத்தின் கூண்டுக்குள் நாள் கணக்கில் இருந்தார்!

யார் அந்த தைரியசாலி?

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த நாற்பது வயது அலெக்சாண்டர் பிலிஷிங்கோதான் அவர். சொந்தமாக சிறிய மிருகக் காட்சி சாலை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர், உலக சாதனைக்காக பெண் சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் தொடர்ச்சியாக 35 நாட்கள் இருந்தார். இதற்காகவே ஒரு ஸ்பெஷல் கூண்டைத் தயாரித்து, அதில் பாத்ரூம், படுக்க ப்ளைவுட் தளம் என அமைத்து, சிங்கத்துடனே சாப்பிடுவது, தூங்குவது, செல்லமாக விளையாடுவது, போர் அடித்தால் படம் வரைவது என்று பொழுதைக் கழித்துள்ளார். குளிக்கும்போது சோப், ஷாம்பூ போன்ற நறுமணப் பொருட்களை உபயோகிக்கவில்லை. ஏனென்றால், ''இதெல்லாம் சிங்கத்துக்குப் பிடிக்காது'' என்கிறார் அலெக்சாண்டர். சிங்கத்துடன் இருந்த இவருக்கு அசம்பாவிதம் நடந்துவிடாமல் இருக்க, கேமராவில் கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள்.

இதைக் கேள்விப்பட்டு பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதியது. உலக சாதனைக்கு மட்டும் அல்ல, தன்னுடைய மிருகக்காட்சி சாலையின் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் இச்சாதனையைச் செய்துள்ளார், இந்த தில்லான மனித சிங்கம் அலெக்சாண்டர்.