'ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு நம்ம குடியரசுத் தலைவர் கையால் விருதை வாங்கி, அவருடன் விருந்து சாப்பிட ஆசையா? அப்படின்னா சாரணர் இயக்கத்தில் (SCOUT) சேருங்க. சாதனை செய்து கலக்குங்க’ என்கிறார் நந்திவர்மன். இவர், திண்டுக்கல் மாவட்ட சாரண இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்.

''இது உலகின் மிகப் பெரிய மாணவர் இயக்கம். இதைத் தோற்றுவித்தவர், சர்.ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல். 1907 ஜூலை 25-ல் 'பிரௌன்ஸீ’ என்ற தீவில் 20 பேருடன் ஆரம்பித்தார். தற்போது, உலகம் முழுவதும் 38 மில்லியன் பேர் இருக்காங்க. பில்கேட்ஸ் உள்பட பல பிரபலங்கள் பள்ளி நாட்களில் சாரணர்களே.

இடது கை குலுக்கும் பழக்கம், சல்யூட் ஆகியவை பிற இயக்கத்தில் இருந்து வித்தியாசப்படுகிறது. 10 வயது நிறைந்ததும் சாரணராகச் சேரலாம். இவர்களில் சிறுவர் களை குருளையர்கள் என்றும் சிறுமிகளை புல்புல் என்றும் அழைக்கின்றனர். 17 முதல் 35 வயது வரை உள்ளவர்களில் ஆண்களை ரோவார் என்றும் பெண்களை ரேஞ்சர் என்றும் அழைப்பர்'' என்றவர், படிக்க வேண்டிய பயிற்சிகள் பற்றி விளக்கினார்.

''முதல் பிரிவு 'பிரவேஷ்’ என்ற மூன்று மாத பயிற்சி. இதை முடித்தால் சாரணர் சின்னத்தைச் சூட்டுவர். இரண்டாவது 'பிரதம ஷோபன்’ என்கிற ஆறு மாதப் பயிற்சி. இதில் படிமுடிச்சு (Reef Knot), மீனவர் முடிச்சு... என வித்தியாசமான ஆறு முடிச்சுகள் பத்தி இருக்கு.

மூன்றாவது... 'திவ்திய ஷோபன்,’ இது ஒன்பது மாதப் பயிற்சி. தீ சம்பந்தமான முன்னெச்சரிக்கை, திறந்தவெளி சமையல், முதலுதவி, நம் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றி அறியலாம். அடுத்தது... 'திருதிய ஷோபன்’ என்ற பயிற்சி ஒன்பது மாதங்கள். இந்த மூன்று பயிற்சிகளையும் 'செய்முறைப் பதிவேடு’களாக எழுதி வைக்க வேண்டும். அடுத்து 'ராஜ்யபுரஸ்கார்’ ஒன்பது மாதங்கள். இதில் வென்று, ஆளுநர் விருதுக்கு தேர்வு எழுதி வென்றால், மாநில ஆளுநரிடம் விருதைப் பெறலாம். இந்தத் தேர்வு ஆகஸ்ட் இறுதியில் மாவட்டம் தோறும் நடக்கும். இவற்றுக்கு மேல் 'ராஷ்டிரபதி ஸ்கவுட்.’ பயிற்சியின் கால அளவு ஒன்பது மாதங்கள். இதை முடித்தால், குடியரசுத் தலைவரே நேரடியாக விருதைத் தருவார்.'' என்றார் நந்திவர்மன்.

என்ன சுட்டீஸ்... உங்களுக்கும் சாரணர் இயக்கத்தில் சேரணும்னு ஆசையா இருக்கா? இன்னிக்கே உங்கள் பள்ளியின் சாரணர் இயக்கத்தின் பொறுப்பாளரிடம் போங்க. மிச்ச விவரத்தை அவர் சொல்வார்.