கே.யுவராஜன்

ஹாய் சுட்டீஸ்... உலகில் நடந்த, நடக்கிற ஆச்சர்யங்களை 'ஊலலல்லா...உலக உலா’ மூலம் ரவுண்ட் வருவோம். முதலில்... இயற்கையாலும் மனிதனாலும் உருவான சில பிரமாண்டமான பள்ளங்களைப் பார்க்கலாம். கவனமா கையைப் புடிச்சுகிட்டு வாங்க!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுத்தமாலா. பெரிய கட்டடங்கள், வீடுகள் இருக்கிற இடத்தில் 2010 மே 30 காலை நேரம்... திடீரென பயங்கரமாக மண் சரியும் சத்தம்... எல்லோரும் வெளியே வந்து பார்த்தாங்க. சாலையின் நடுவே மிகப் பெரிய பள்ளம். 18 மீட்டர் அகலமும், 100 மீட்டர் ஆழமுமாக கிலி ஏற்படுத்தியது. இது எப்படி உருவானது? 'பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே புதைகுழிகள் இருந்தன. காலப்போக்கில் மண் கெட்டிப்பட்டு சாலை உருவானது. பூமிக்குள் மழைநீர் செல்லச் செல்ல மண் இளகி, புதைகுழி திறந்துகொண்டது. அதனால் ஏற்பட்ட பள்ளமே இது என்கிறார்கள்(எதுக்கும் நம்ம தெரு வரலாறையும் படிச்சு வெச்சுக்குவோம்!).

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒன்றான சால்ட் லேக் சிட்டியின், யூட்டா மாநிலத்தில் கனிம வளம் அதிகம். அங்கே உள்ள பெங்கஹாம் மலைப் பகுதியில் காப்பர் எடுக்க, 1900 ஏக்கர் பரப்பளவில் பள்ளம் தோண்டினாங்க. 1906 முதல் 1966 வரை தோண்டித் தோண்டி, ஒன்றரை கிலோ மீட்டர் ஆழம்... 4 கி.மீ. அகலம் பள்ளம் உருவாயிடுச்சு. இது மனிதனால் உருவான, உலகின் பெரிய பள்ளமாம் (தாண்டறதில் மட்டுமில்லே, தோண்டறதிலும் மனிதன் கில்லாடிதான்!).

அடுத்து, பெலீஸ் நாட்டின் கடலில் உள்ள பள்ளம்... 'தி கிரேட் ப்ளூ’ எனப்படுகிறது. இயற்கையாக உருவானது. 125 மீட்டர் ஆழம். 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி நிலப்பரப்பாக இருந்து, சுண்ணாம்புக் குகைகள் இருந்திருக்கு. ஐஸ் ஏஜ் சமயத்தில் கடல் நீரால் சூழ்ந்துடுச்சு. கடலில் ஸ்கூபா டைவிங் செய்யறவங்க இங்கே குவியறாங்களாம் (இதுதான் ஆழம் பார்த்து காலை விடறதோ?).

கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்ரியேஸா ஏரியில் உள்ளது மோண்டிசிலோ அணை. 312 மீட்டர் நீளம், 93 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட அணையை மேலே இருந்து பார்த்தா, ஏரியில் பெரிய பள்ளம் இருக்கிற மாதிரியே தோன்றும். 3,26,000 கன அடி நீரை இதில் தேக்கி வைக்கலாம் (இவங்க கிட்டேயும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை விடச் சொல்லிக் கேட்போமா!).

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ளது, மிர்னி வைரச் சுரங்க பள்ளம். இதன் உச்சியில் இருந்து ஒரு டிரக் மூலம் இறங்க ஆரம்பிச்சா, கீழே போய் சேர ரெண்டு மணி நேரம் ஆகும். 525 மீட்டர் ஆழம், 1200 மீட்டர் பரப்பளவும் கொண்டது. 1957-ல் இங்கே வைரச் சுரங்கத்தை ஆரம்பிச்சாங்க. அடுத்த மூன்று வருடங்களில் ஒரு கோடி காரட் மதிப்புள்ள வைரங்களைத் தோண்டி எடுத்தாங்க. 2001-ல் வைரம் எடுக்கும் பணி முடிஞ்சப்ப கிடைத்த மொத்த வருமானம், 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (கணக்கு போட்டு முடிக்கவே தலை சுத்தும் போலிருக்கே!).

மத்திய ஆசியாவின் துருக்மெனிஸ்தான் நாட்டின் கரக்கும்(karakum) பாலைவனத்தில் உள்ளது, 'நரகத்தின் கதவு’ எனப்படும் பள்ளம். 1971-ல் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இங்கே மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு இருக்கிறதை கண்டுபிடிச்சு, அதை எடுக்க பள்ளங்களைத் தோண்டினாங்க. அப்போது, பூமிக்கு அடியில் இருந்த வாயு வெளியேறித் தீப் பிடிச்சது. அன்று முதல் இங்கே திடீர் திடீர் என நெருப்பு உருவாயிட்டே இருக்காம் (உலகத்தின் பெரிய அடுப்பு இதுவாகத்தான் இருக்கும்).

இப்படி இன்னும் சில மெகா பள்ளங்கள் உலகில் இருக்கு. இதை எல்லாம் அசால்ட்டா கடந்துடலாம். ஆனா, நம்ம ஊரில் குடிநீர் குழாய், கேபிள் பதிக்க என்று திடீர்னு ஆங்காங்கே பள்ளங்களைத் தோண்டி இருப்பாங்க. கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும் போச்சு. அதனால, ஸ்கூலுக்குப் போறப்பவும் வர்றப்பவும் கவனமா இருங்க சுட்டீஸ்!