வாசகிகள் பக்கம்

குழந்தைகளை சீண்டும் கொடூரன்கள்!

இடைநிலைப் பள்ளி ஆசிரியையான எனக்கு, குழந்தைப் பருவம் தொட்டு பெரிய மனுஷி ஆன வரை ஈவ் டீசிங் அனுபவங்கள் நிறையவே உண்டு. அதனால்தான், நான் சந்தித்த... சந்தித்துக் கொண்டிருக்கும் பெண் கொடுமைகளையும், அதிலிருந்து விடுபடுவது பற்றியும் மாணவிகளுக்கு சொல்லி வருகிறேன்.

ஆட்டோ மற்றும் வாகனங்களில் வரக்கூடிய சிறுபிராய பெண் பிள்ளைகள், அவர்களை அறியாமலேயே இதுபோன்ற கொடுமைகளில் சிக்கிக் கொள்கின்றனர். என் உறவுக்காரச் சிறுமி ஒருத்தி தினமும் ஆட்டோவில்தான் வருவாள். குட்டைப் பாவாடை அணிந்து வரும் அவளை அடிக்கடி அந்த ஆட்டோ டிரைவர் தன் மடி மீது தூக்கி வைத்துக் கொள்வாராம். அப்போது தொடக்கூடாத இடங்களில் தொடுவது என்றெல்லாம் சீண்டியிருக்கிறான். ஒரு நாள், தனது மறைவிட பகுதியில் வலி எடுக்கிறது என்று என்னிடம் குழந்தை சொன்னபோதுதான் ஆட்டோ டிரைவரின் விஷமம் தெரிய வந்தது. இதெல்லாம் தவறான விஷயங்கள் என்றுகூட தெரியாத பிராயம் என்பதால், யாரிடமும் சொல்லாமலே இருந்திருக்கிறாள் குழந்தை. அந்த ஆட்டோ டிரைவரை கடுமையாக எச்சரித்ததோடு... மேற்கொண்டு எந்தக் குழந்தையுமே அந்த ஆட்டோவில் வராத வகையில் பெற்றோர்களிடம் பேசி, ஏற்பாடு செய்துவிட்டேன்.

குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச் என்றால் என்ன?’ என்று நாங்கள் பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது மட்டும் போதாது. பெற்றோர்களும் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பினால் போதும் என்று இருந்துவிடக் கூடாது. குழந்தைகளை நாம்தான் கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.

- பெயர் வெளியிட முடியாத ஓர் ஆசிரியை

இப்படி உங்களுக்கும் ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதை எல்லாம் இங்கே இறக்கி வையுங்கள். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி வைப்பதோடு, மற்ற தோழிகளுக்கு எச்சரிக்கையாகவும்

அமையப்போகிறது! உங்கள் அடையாளங்கள் எதையுமே நீங்கள் தரத் தேவையில்லை. ரகசியத்துக்கு நாங்கள் 100% கியாரன்டி! உடனே, உங்கள் செல்போனிலிருந்து 04442890003 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.