Published:Updated:

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

பிரீமியம் ஸ்டோரி
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அன்புச் சுட்டி நண்பர்களே...

உங்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு என்றால், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மட்டும்தானா?'' என்று செல்லமாய் கோபித்துக்கொள்ளும் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் சுட்டிகளின் குரல்களை  ஒதுக்கிவைக்க முடியுமா?

அந்தக் குரல்களுக்காகவே, உங்கள் கைகளில் தவழ்கிறது... சுட்டி விகடனின் இந்த அசத்தல் புத்தகம். C.C.E. கல்வி மதிப்பீட்டு முறையின் கீழ் F.A.,செயல்பாடுகள், செயல்திட்டங்கள் மூலம் 40 மதிப்பெண்கள்

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கிடைக்கின்றன. அதே வேளையில், ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் நடைபெறும் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) என்ற எழுத்துத் தேர்வு மூலம் 60 மதிப்பெண்கள் கிடைக்கின்றன.

நீங்கள் S.A. மதிப்பெண்களைக் குவிப்பதற்காகப் பாட வாரியான வழிகாட்டுதல்கள் இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளன.

தேர்வுக் காலத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதில் தொடங்கி, ரிவிஷன், விடைத் தாள்களைச் சரியாகக் கட்டி, ஆசிரியரிடம் ஒப்படைப்பது வரையிலான பயனுள்ள டிப்ஸ் தரப்பட்டு உள்ளன.

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் அக்கறை மிகுந்த ஒத்துழைப்புடன் உருவாகி இருக்கும் இந்த இணைப்பிதழ், அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் நீங்கள் பாதுகாத்துப் பயன்பெற வேண்டிய பொக்கிஷம்.  

இதில் உள்ள வழிகாட்டல்களை ஒவ்வொரு பருவத்தின் தேர்வின்போதும் பின்பற்றினால், தேர்வை எதிர்கொள்வது மிக எளிதாகிவிடும். பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு மனத்தளவில் உங்களைத் தயார்படுத்தவும் இந்தப் புத்தகம் உதவும்.

தேர்வுகள் அனைத்திலும் அதிக மதிப்பெண்களுடன்  வெற்றிபெற வாழ்த்துகள்.

அன்புடன்
ஆசிரியர்

இரண்டு பருவத் தேர்வுகள் முடிந்து மூன்றாம் பருவத் தேர்வை எழுதப் போகும் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சுட்டிகளுக்காகவே இந்த இணைப்பு.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வுக்குத் தயாரவது முதல் விடைத்தாளை நூலால் கட்டி ஆசிரியரிடம் தருவது வரை...

S.A.,   (தொகுத்தறி மதிப்பீடு)  எழுத்துத் தேர்வுக்கு உரிய   A to Z  டிப்ஸ் அனைத்தையும் படித்துப் பின்பற்றி தேர்வில் அசத்தி, கிரேடுகளை அள்ளுங்கள்.

 தமிழ்

தமிழ்த் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு...

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

முதலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது, எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதில்தான்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

மனப்பாடப் பாடல்களில் அடி பிறழாமல் எழுத வேண்டும். ஆகவே, தேர்வுக்கு முன் பலமுறை எழுதிப் பார்த்து, தவறுகள் திருத்தி, பிழையின்றி எழுதப் பழகுங்கள். மனப்பாடப் பாடலின் தலைப்பு, ஆசிரியர் பெயர் எழுதுதல், செய்யுளின் இறுதியில் பா வகை குறித்தல் போன்றவை கூடுதல் மதிப்பெண் பெற்றுத்தரும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

சிறு மற்றும் பெரு வினாக்களுக்கு, தலைப்பு இட்டு எழுதுதல் சிறந்தது. முக்கியக் கருத்தைத் தலைப்பாக எழுதினால், அதிக மதிப்பெண் கிடைக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 துணைப் பாடத்துக்கு தலைப்பிடும்போது, கதையில் இடம்பெறும் முக்கிய கருத்துக்களைத் தலைப்பாக இடுவது நல்லது.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கட்டுரை எழுதும்போது... முன்னுரை, முடிவுரை மற்றும் துணைத் தலைப்புகளை எழுதி, அதன் உள்கருத்துக்களை விளக்கி எழுதவும். இடையிடையே மேற்கோள், பழமொழி, கவிதை எழுதுவது போன்றவை, விடைத்தாள் திருத்துபவரைக் கவரும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஒரு வார்த்தை வினாக்களைத் தவறவிடாதீர்கள். உங்களின் மதிப்பெண்களை அதிகரிப்பதில் ஒரு வார்த்தை வினாக்களுக்கு முக்கிய இடம் உண்டு.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

இலக்கண வினாக்களுக்கு விடையளிக்கும்போது, உரிய விடையை மட்டும் தகுந்த எடுத்துக்காட்டுடன் சுட்டிக்காட்டவும். கடிதம் எழுதும்போது, அதற்கு உரிய முறையைப் பின்பற்றி எழுதுதல் அவசியம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

முக்கியக் கருத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், ''இந்தத் தேர்வை நான் நன்றாக எழுதுவேன்''என்கிற தன்னம்பிக்கையோடு எழுதினால், நல்ல மதிப்பெண்கள் உங்கள் வசம்.

- க.சரவணன், டாக்டர் டி திருஞானம் தொடக்கப் பள்ளி
கீழச்சந்தைப்பேட்டை, மதுரை.

 ஆங்கிலம்

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அனைத்துப் பாடங்களையும் ஒருமுறைக்கு இரு முறை படியுங்கள். புரியாத வார்த்தைகளின் கீழ் அடிக்கோடிட்டு, சிரமம் பார்க்காமல் அவற்றுக்குப் பொருள் எழுதிவையுங்கள். பொருள் உணர்ந்து படிப்பதால், நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும். சொல்லாக்கம் (Vocabulary)  அதிகரிக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

புதிய வார்த்தைகளைப் படிக்கும்போது, அவற்றின் உச்சரிப்பு முறையை ஆங்கில அகராதியின் உதவியுடன் படிக்கவும். அல்லது, ஆசிரியரின் உதவியை நாடலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

இலக்கணப் பகுதியைப் படிக்கும்போது, புத்தகத்தில் இருக்கும் எடுத்துக்காட்டுகளை மட்டும் செய்யாமல், சொந்தமாகச் சிலவற்றைச் செய்துபாருங்கள். அந்த இலக்கணம்  எப்போதும் நினைவில் நிற்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

Memory Poem  மனனம் செய்ய, அதை முடிந்தவரை ஏதாவது ராகத்துடன் பாடிப் பழகுங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஒரு சிலருக்கு, பாடலின் அடுத்தடுத்த வரிகளையோ, பத்திகளையோ நினைவில்கொள்ள சிரமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள், வரிகள் அல்லது பத்திகளில் உள்ள முதல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றை தொடர்புபடுத்தும் ஒரு சம்பவத்தை உருவாக்கிக்கொண்டால், அந்த வரிகள் அடி மாறாமல் நினைவில் இருக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கையெழுத்து என்பது உங்கள் ஆளுமையின் (Personality)  வெளிப்பாடு. அதில் கவனம் வேண்டும்

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வுக்கு புதிதாய் பேனா வாங்காதீர்கள். ஒரு மாதம் முன்னதாக வாங்கி, எழுதிப் பழகுங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஆங்கிலம் என்றதும் அச்சப்பட வேண்டாம். இதிலும் சாதிப்பேன் என்ற உறுதியோடு தேர்வு எழுதுங்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று, பலரின் பாராட்டைப் பெறலாம்.
 

.விஜயலட்சுமி,
அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

 கணக்கு

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

முதலில், வினாத்தாள் முழுவதையும்  படிக்கவும். தெளிவாகத் தெரிந்த கணக்குகளை டிக் செய்துகொள்ளவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அடுக்குகள், கணங்கள் மற்றும் வகைக் கணக்குகளில் வரும் வழிமுறைகள், எத்தனை செயல்பாடுகள் வருகின்றன போன்றவற்றைத் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

செய்முறை வடிவியல் பகுதி நன்கு தெரிந்தால், அதை அவசரமோ, அழித்தலோ இல்லாமல், துணை வரைபடம் உதவியுடன் வரைய வேண்டும். அதற்கு, வீட்டில் பல முறை வரைந்து பழகவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

காம்பஸ் பயன்படுத்தும்போது, அதன் நுனிப் பகுதி வளைந்தும், மேல் பகுதி லூஸாகவும் இருக்கக் கூடாது. பென்சிலை வைக்கும்போது, காம்பஸ் நுனிப் பகுதியும் பென்சிலின் நுனிப் பகுதியும் சமமாக இருக்க வேண்டும். காம்பஸை அழுத்திப் பிடிக்காமல், லேசாகப் பிடித்து வரைய வேண்டும். ஆள்காட்டி விரல், பென்சில் மாட்டி இருக்கும் பகுதியின் மேல் பகுதியைப் பிடித்து இருக்க வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கோணமானியைப் பயன்படுத்தும்போது, கோணமானியில் உள்ள அடிக்கோடும் நாம் வரைந்த கோடும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்க வேண்டும். கோண அளவுகளைக் கவனமாகக் குறிக்க வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

வரைபடத் தாளைப் பயன்படுத்தும்போது, கணக்குக்குத் தகுந்தாற்போல், நான்கு கால்பகுதிகளாகவோ அல்லது நமக்குத் தேவையான கால்பகுதியை மட்டுமோ வரைந்துகொள்ள வேண்டும். மறக்காமல்,X அச்சு, Y அச்சு போன்றவற்றைக் குறிக்க வேண்டும். ஒவ்வொரு கால்பகுதியிலும் (++) (-+) (- -) (+-)போன்றவற்றைத் தெளிவாகக் குறிக்க வேண்டும்.  X, Y  அச்சின் அளவுகளை வலது புறத்தின் மூலையில் எழுத வேண்டும் (-+)ஐ கவனித்துக் குறிக்க வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

நன்கு தெரிந்த கணக்குகளை முதலில் செய்யவும். கணக்குக்குரிய எண்களையும் கணக்கில் வரும் தொகையையும் அவசரம் இல்லாமல், தவறு இல்லாமல் செய்யவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கணக்குத் தேர்வில், எண்களைத் தெளிவாகவும், அடித்தல் திருத்தல் இன்றியும் அழகாக எழுதுவது முக்கியம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே கணக்குகளை முடித்துவிட்டு, எல்லாவற்றையும் செய்துவிட்டோமா, பெருக்கல் வகுத்தல், கூட்டல், கழித்தல் போன்றவற்றில் தவறு ஏதேனும் உள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும்.

அப்புறம் என்ன... கணக்குத் தேர்வில் சென்ட்டம்தான்.
- தி.முத்துமீனாள்,
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

 அறிவியல்

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் உள்ள வினாவிடை பயிற்சிகளை நன்கு படிக்கவும். அவ்வப்போது ஆசிரியர் கூறிய முக்கிய வினாக்களை நினைவுபடுத்தி, அவற்றை ரிவிஷன் செய்துகொண்டால், மதிப்பெண்களை அள்ளலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஒரு மதிப்பெண் விடைகளை நண்பர்களோடு இணைந்து ஒருவர் கேட்க, மற்றொருவர் பதில் அளித்து, உங்களுக்கு நீங்களே மதிப்பெண் இடவும். இது, விடைகளை நன்கு மனதில் பதியவைப்பதோடு, தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

பாடங்களை எளிதில் நினைவில்கொள்ள, குறிப்புகள் எடுத்து, அதை ஒரு சிறிய வார்த்தையாக நினைவில் வைக்கவும். உதாரணம், VIBGYOR  வானவில்லில் உள்ள நிறங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஆடியை நினைவில்கொள்ள, 'கிட்டக் குழி தோண்டி தூரக் குவி’ என்பது போன்ற வாசகங்கள் உதவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

படித்தவற்றை எழுதிப் பார்ப்பது நல்ல பழக்கம். இது,  விடை எழுதும்போது ஏற்படும் பிழைகளைத் தவிர்க்க உதவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

படங்கள், அவற்றின் பாகங்களைக் குறித்து, வரைந்து பழகவும். பாகங்களைக் குறிக்கும்போது, நீங்கள் வரைந்திருக்கும் அம்புக்குறியும் எழுதிய பாகத்தின் பெயரும் சரிதானா என்று சோதிக்க மறந்துவிடாதீர்கள். சில முக்கியமான படங்களைப் பலமுறை வரைந்து பழகினால், தேர்வின்போது விரைவாக வரையலாம். நேரம் மிச்சப்படும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

படங்களை வரையும்போது, ஒவ்வொரு பகுதியையும் அதற்கு ஏற்ற வகையில் தனித் தனி வண்ணங்களில் வரைந்து, விடைத்தாள் திருத்துபவரின் கவனத்தை ஈர்க்கலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

வினாவைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் பதில் அளிப்பது முக்கியம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அறிவியல் சோதனைகள் செய்ததை மீண்டும் மீண்டும் நினைவில் அசைபோடுங்கள். அது, தேர்வில் உதவியாக இருக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

சில கேள்விகளுக்கு உங்களுடைய சொந்த அனுபவத்தில் இருந்து கிடைத்த செய்திகளை இணைத்து எழுதலாம். நீங்கள், அந்தப் பாடத்தைப் புரிந்துகொண்டிருக்கும் விதத்தை விடைத்தாள் திருத்துபவர் உணர்ந்து, முழு மதிப்பெண்கள் அளிக்கக்கூடும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 அச்சமின்றி அறிவியல் தேர்வை எழுதி, அசத்தல் கிரேடைப் பெறுங்கள்!

- ஸ்ரீ.திலீப், அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம்

சமூக அறிவியல்

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 வினாத்தாள் வடிவமைப்பு முறையை நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ப தேர்வுக்குத் தயாராக வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 வினாத்தாளின் முதல் பகுதி, சரியான விடையைத் தேர்வு செய்வது. வரலாறு, புவியியல், குடிமைஇயல் என மூன்று பகுதிகளிலும் சேர்த்து 25 முதல் 30 வினாக்களே பாடநூலில் உள்ளன. எனவே, 30 சொற்களை நினைவில் வைத்திருந்தால், எளிதாக 8 மதிப்பெண்கள் பெறலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 அடுத்து, பொருத்துக பகுதி. இதற்கெனத் தனியே படிக்கவேண்டிய அவசியம் இல்லை. மற்ற வினாக்களுக்கான விடைகளைப் படித்திருந்தால், எளிதில் 5 மதிப்பெண்களை அள்ளிவிடலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 குறுகிய விடை அளித்தல் பகுதியில், விடைகள் ஓரிரு வரிகளில்தான் அமைய வேண்டும். எனவே, ஆசிரியர் குறிப்பிடும் முக்கியமான 10 வினாக்களை அதாவது, 10 வரிகளைப் படித்தால், குறைந்தது 10 மதிப்பெண்கள் பெறலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தலைப்பு வினாக்களுக்கு, ஓரிரு சொற்களில் விடை அளித்தால் போதும். மொத்தம் 20 சொற்கள் படித்தால், அதில் 4 மதிப்பெண்கள் பெறலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

விரிவான விடைக்கு, வரலாறு, புவியியல், குடிமைஇயல் என ஒரு பிரிவுக்கு இரண்டாக, மொத்தம் 6 வினாக்களுக்கு விடைகள் படித்திருந்தாலே போதும். 2 வினாக்களை சரியாக எழுதி  10 மதிப்பெண்கள் பெறலாம். ஒரு சில விடைகள் குறுகிய விடைகளுக்காகப் படித்ததில் இருந்தே அமைந்துவிடும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

வரைபடத்தில் நல்ல பயிற்சி இருந்தால், 10க்கு 10 மதிப்பெண்கள் பெறலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம் என மூன்று வரைபடங்களையும் படிப்பறைச் சுவரில் ஒட்டி, தினமும் உற்று நோக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு இடங்களையாவது மனத்தில் பதிந்துகொள்ளவும். அரசு வழங்கிய நில வரைபட நூலை தினம் ஒருமுறை பார்க்கவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 அரசு வழங்கிய நில வரைபட நூலில் ஒவ்வொரு நகரத்தின் அமைவிடமும் அட்ச, தீர்க்கக்கோடுகள் அடிப்படையில் கடைசிப் பக்கத்தில் அகர வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதையும் நினைவில்கொள்ளவும். திட்டமிட்டுப் படித்தால், சமூக அறிவியல் பாடத்தில் ஏ கிரேடு நிச்சயம்!.

- இரத்தின. புகழேந்தி,
அ.உ.நி. பள்ளி,
மன்னம்பாடி

.உபகரணங்களே, தேர்வுக்கு உதவும் நண்பர்கள்!

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வில் நமக்கு மிகவும் உதவிகரமாகவும் நாம் படித்ததை எழுதவும், அதை நன்கு வடிவமைக்கவும் எழுதவும் பயன்படுவது உபகரணங்களே. எந்தெந்த இடங்களில் எந்தெந்த உபகரணங்களைப் பயன்படுத்தினால், நமக்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதை அறியலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

1. பென்சில், ஸ்கேல்:  தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் தவிர, மற்ற தேர்வுக்கு மாணவர்கள் கோடுகள் இடாத விடைத்தாளைப் பயன்படுத்துவார்கள். அப்போது ஸ்கேலைப் பயன்படுத்தி, மார்ஜின் போட வேண்டும். அறிவியல் தேர்வுக்கு  மன வரைபடம் வரைவதற்கும் 5 மதிப்பெண் வினாவில் டயகிராம் போடுவதற்கும் பென்சிலின் உபயோகம் அதிகம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

2. ரப்பர் (எரேஸர்): தவிர்க்க முடியாத சமயம் தவிர, அடிக்கடி இதைப் பயன்படுத்துவது நல்லதல்ல.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

3. ஷார்ப்னர்: அறிவியலில் படம் வரைவதற்கும் வரைபடம் போடுவதற்கும் பென்சிலைக் கூராக வைத்திருக்க வேண்டும். பென்சில் முனை உடைந்துவிட்டால், உடனடியாகச் சரிசெய்துகொள்ளவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

4.  இங்க் பேனா(2): எல்லாத் தேர்வுகளுக்கும் இரண்டு பேனாக்களை வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று சரியாக எழுதவில்லை என்றால், யாரிடமும் இரவல் கேட்காமல் எழுத உதவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

5.  ஜியோமெட்ரி பாக்ஸ், ஸ்கெட்ச் பென் பவுச்: கணக்குத் தேர்வுக்கு நிச்சயம் தேவைப்படும். இவற்றின் உபயோகத்தால் அதிக மதிப்பெண்கள் பெற, முந்தைய நாள் இரவே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

6.  பிளாக் பென்: எல்லாத் தேர்வுகளிலும் சில முக்கியக் கருத்துக்கள் மற்றும் கோடிட்ட இடங்களுக்கு அடிக்கோடு இடுவதன் மூலம், விடைத்தாள் மெருகேறும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 7.  ஸ்கெட்ச் பென்: சமூகவியல் பாடத்தின் வரைபடத்தில், ஒரு பகுதியை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தலாம். ஆறுகள், ஏரிகள், கடல்கள், மலைகள் ஆகியற்றை எடுத்து எழுதும்போது, அவற்றுக்கு ஏற்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து எழுதினால் நன்று.

 முழு மதிப்பெண்கள் பெற உதவும் குழுப் படிப்பு!

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

'கற்றலில் மேம்பாடு அடைதல்’ என்பதே குழுவாகக் கற்றலின் முக்கிய நோக்கம். எனவே, குழுவாகக் கற்கும்போது, பாடம் அல்லாத வேறு விஷயங்களைப் பற்றி பேசுவதை அறவே தவிர்க்கவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

குழுக் கற்றலின்போது, சுருட்டிவைக்கத்தக்க வகையிலான ‘Black board chart’ ஒன்றை வைத்துக்கொள்ளவும். அதைப் பயன்படுத்தி, படிக்கும் பாடங்களில் உள்ள கடினப் பகுதியை, குழுவில் உள்ள நன்கு தெரிந்த மாணவன், மற்றவர்களுக்குக் கற்பிக்கலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

மொழிப் பாடங்களைக் கற்கும்போது (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சொற்பொருள் (synonyms), , எதிர்ச் சொல் அறிதல் (antonyms) , சேர்த்துக் கூறுதல், பிரித்துக் கூறுதல், ஆகியவற்றைக் குழுவினருக்குள்ளேயே மாறி மாறிக் கேட்டு, கற்றவற்றை நினைவூட்டிக்கொள்ளலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கணக்குப் பாடத்தில் வடிவங்களின் பண்புகள் மற்றும் வரைமுறையின் படிநிலைகள் ஆகியவற்றை ஒவ்வொரு பண்பாக அல்லது ஒவ்வொரு படியாக, குழு உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கூறி, நினைவுபடுத்தலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அறிவியல் பாடத்தில் வரக்கூடிய 'படம் வரைந்து பாகங்களைக் குறித்தல்’ வினாக்களுக்குக் குழுவாக அமர்ந்து படங்கள் வரைந்து பழகலாம்.  

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

சமூக அறிவியல் பாடத்தில், இந்தியா மற்றும் உலக வரைபடங்களை வைத்துக்கொண்டு, குழு உறுப்பினர்கள் நாடுகள், நகரங்கள், கண்டங்கள், கடல் வழிகள் போன்றவற்றைக் கூற, ஒரு மாணவன் அதை வரைபடத்தில் சுட்டிக்காட்டும் செயல்பாட்டைச் செய்யலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஒவ்வொரு பாடத்திலும் முக்கிய வினாக்களைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்குள்ளேயே அடைவுத் தேர்வு (Achievement test)  நடத்தி மதிப்பிடலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

குழுவாகப் படிக்கும் நேரத்தில், கற்றதை நினைவுகூறல், புதிய பகுதிகளைப் படித்தல், திருப்புதல் பயிற்சி என்று பிரித்துக்கொள்ளலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள், தேர்வில் ஒவ்வொரு வினாப் பகுதிக்கும் ஒதுக்க வேண்டிய நேரம், விரிவான விடைகளுக்கு எந்த வகையில் துணைத் தலைப்புகள் தரலாம் போன்ற விஷயங் களைப் பற்றியும் பேசிக்கொள்ளவும்.

- ஜெ.திருமுருகன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, மூலத்துறை,
கோவை

.தேர்வுக் காலத்தில் செய்யக்கூடியவை...செய்யக் கூடாதவை!

செய்யக்கூடியவை:

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது. எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால், தன்னம்பிக்கை பிறக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

விடைகளை மொத்தமாகப் படிப்பதைவிட, பொருள் உள்ள பகுதிகளாகப் பிரித்துப் படிப்பது நல்லது.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தினசரி குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஒரே மூச்சாக உட்கார்ந்து படிப்பதைக்காட்டிலும், இடையிடையே 10 நிமிடங்கள் இடைவெளிவிட்டுப் படியுங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அட்டவணை தயார்செய்து, அதன்படி படியுங்கள். அதை இப்போதே தயார் செய்யுங்கள். நன்றாகப் படித்த பாடங்களுக்குக் குறைந்த நேரம், அதிகம் படிக்காத பாடங்களுக்கு அதிக நேரம் எனத் திட்டமிட்டுப் படியுங்கள். படித்ததை எழுதிப் பார்ப்பது பலனை அதிகரிக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

படிப்புக்கு மத்தியில், உங்களுக்குப் பிடித்த வீட்டுவேலைகளைச் செய்யுங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

எளிய யோகாசனம், தியானம் செய்வது நல்லது. அமைதியாக மனதைச் செலுத்திப் படியுங்கள், பலன் நிச்சயம்!

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். மூன்று வேளையும் தவறாமல் உணவு உண்ணுங்கள்.

செய்யக் கூடாதவை:

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் உலா ஆகியவற்றைத்  தவிர்க்கவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

குடும்ப விழாக்கள், ஊர்த் திருவிழாக்கள் என கொண்டாட்டங்களில் மூழ்கி, தேர்வில் கோட்டை விடாதீர்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

படுத்துக்கொண்டு படிப்பது, படிப்பு வேகத்தைக் குறைக்கும். தேவையற்ற சோர்வையும் ஏற்படுத்தும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

நண்பர்களோடு கலந்து படிக்கும்போது, வெட்டிக் கதைகளும் அரட்டையுமாக நேரத்தை வீணடிக்காதீர்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வுக் காலத்தில் அறையிலேயே அடைபட்டுப் படிப்பதையும் தவிருங்கள். அது, உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அதிக நேரம் கண்விழித்துப் படிக்க டீ, காபி போன்ற பானங்களை அருந்துவதைத் தவிருங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஜங்க் ஃபுட்ஸ், காரமான உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

- த.சிங்காரவேலன், தருமபுரி

கைகளுக்குள் காலம்!

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

 தேர்வு நேரத்தை மட்டுமே கருத்தில்கொண்டு டைம் டேபிள் போடாமல், ரிவிஷன், டெஸ்ட் எழுதிப் பார்ப்பது, எந்தெந்தப் பாடத்தை எந்தெந்த நேரங்களில் படிப்பது என்று திட்டமிட வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

படிக்க வேண்டிய பாடப் பகுதி, எழுதி முடிக்க வேண்டிய ரெக்கார்ட்ஸ், டெஸ்ட் போன்றவற்றை அட்டையில் எழுதி, வீட்டில் மாட்டிவைக்கவும். அடுத்த நாள், திட்டமிட்டதை முடித்திருந்தால் டிக் செய்யவும். முடிக்காததை மறுநாளே   கூடுதல் நேரம் ஒதுக்கி முடித்துவிடவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கடினமான படங்களை, ஓவிய ஆசிரியரின் உதவியை நாடி, எளிமையாக வரையப் பழகிக்கொள்ளவும். இது, தேர்வின்போது நேரத்தை மிச்சப்படுத்தும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கடினமானப் பாடங்களை விடியற்காலையில் எழுந்து படித்தால், மனதில் பதியும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வு அறையில் விடைத்தாளைப் பெற்றவுடன் ரிஜிஸ்டர் நம்பர், தேதி எழுதும்போதே, மெயின் ஷீட்டில் பக்க எண் போட்டுவைத்துவிடுவது நேரத்தை மிச்சப்படுத்தும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

கேள்வியை முதல்முறை படிக்கும்போதே, பொறுமையுடனும் பொருள் புரிந்தும் படிப்பது அவசியம். பிறகு, அதற்கேற்ற விடையை வேகமாக எழுதவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

மதிப்பெண்களுக்கு ஏற்ற விடையை மட்டுமே எழுதவும். தேவை இல்லாதவற்றை எழுதினால், நேரம் அதிகமாகும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

எழுதிக்கொண்டிருக்கும் தாளில் இரண்டு அல்லது மூன்று வரிகள் எழுத இருக்கும்போதே, அடிஷனல் தாளுக்குக் குரல் கொடுக்கவும். அதனால், காத்திருப்பு நேரம் மிச்சமாகும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

வினாக்களுக்குத் தக்கவாறு (சிறுவினா, விரிவான வினா) நேரம் ஒதுக்கிக்கொள்ளவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வு நேரம் முடிய 5 நிமிடங்களுக்கு முன்பே, அடிஷனல் தாள்களை வரிசையாக அடுக்குவது, மேப், கிராப் சரியாக வைப்பது, பக்க எண்களைச் சரிபார்ப்பது, வினா எண் சரிபார்ப்பது, மொத்தப் பக்கங்கள் போடுவது, விடைத்தாள்களைக் கவனமாகக் கட்டுவது போன்ற முக்கியச் செயல்களைச் செய்து முடித்துவிடவும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

தேர்வு எழுத ஆரம்பிக்கும்போதே, 'நான் தேர்வைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் அழகாகவும், சரியாகவும் எழுதி முடிப்பேன்’ என்று மனதில் சொல்லிக்கொண்டு ஆரம்பிப்பது சிறந்தது.

மூ.சங்கீதா,
ஊ.ஒ.தொ.பள்ளி, புதுப்பேட்டை

.தேர்வுக் காலத்தில் டிவி, செல்போன் பயன்படுத்தலாமா?

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

செல்போன், டிவி இரண்டுமே, நாம் அதில் எவ்வளவு நேரம் செலவழித்தோம் என்று தெரியாத அளவுக்கு நம் நேரத்தை உறிஞ்சிவிடும். தேர்வு நேரத்தில் உங்களின் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு நாளுக்கு சமம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

செல்போனில் குறுந்தகவலை அனுப்பும் பலரும் டைப் செய்ய சோம்பல்பட்டு, ஆங்கில வார்த்தைகளைச் சுருக்கியும், தவறாகவும் அனுப்புகிறார்கள். இன்னும் சிலரோ, தமிங்கிலத்தில்  அனுப்புகிறார்கள். தேர்வுக் காலத்தில் அதை நீங்கள் படிக்கும்போது, ஆங்கிலச் சொற்களை எழுத்துப் பிழையோடு புரிந்துகொள்ள நேரிடும். அதனால், தேர்வில் அதுபோன்ற சொற்கள் வரும்போது, தவறாக எழுத வாய்ப்பு இருக்கிறது.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

டி.வியை அதிக நேரம் பார்ப்பதால், கண்கள் சோர்ந்துவிடும். பிறகு, நீங்கள் படிக்கும்போது, கண்கள்  பாடத்தோடு ஒன்றுவதில் சிரமம் இருக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

செல்போனில் விளையாடும் பழக்கம் பல மாணவர்களுக்கு இருக்கிறது. இது, மாணவர்களின் நேரத்தை விழுங்குவதோடு,  கவனம் குவித்துப் படிப்பதற்கும் இடையூறாக இருக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

செல்போனைப் பயன்படுத்தும்போது, கை தவறி கீழே போட்டுவிட்டால், பெற்றோர் திட்டக் கூடும். அதையே நினைத்துக் கொண்டு, படிப்பதில் கவனம் செல்லாது.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

'அப்படியென்றால் தொலைக்காட்சி, செல்போனைப் பயன்படுத்தவே கூடாதா?’ 'நிச்சயம் பயன்படுத்தலாம்.’

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

உங்களுக்குத் தேர்வு நடத்தும் கல்வித் துறை, தேர்வு தொடர்பான அறிவிப்புகளைத் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வழியாகச் சொல்வார்கள். அவற்றைத் தெரிந்துகொள்ள, செய்திகளைப் பார்க்கவும் படிக்கவும் வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

குழுவாகப் படிக்க, நண்பர்களைத் தொடர்புகொள்ள செல்போனைப் பயன்படுத்தலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

உங்கள் புத்தகத்தில் ஏதேனும் முக்கியமான பக்கம் கிழிபட்டிருந்தால், அல்லது படிக்கும் பாடத்தில் சந்தேகம் எழுந்தால், நண்பர்களிடம் செல்போன் மூலம் உதவி கேட்கலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

இப்படி, அவசியத்துக்கு மட்டுமே டிவி, செல்போனைப் பயன்படுத்தி, முழுமையாகப் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்!

ஞி.விஜயலட்சுமி,
அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

 வசீகரிக்கும் விடைத்தாள்!

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

சரியாக விடை எழுதியும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைவது ஏன்?

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

உங்கள் விடை சரியாக இருந்தால் மட்டும் போதாது.  விடை அளிக்கும் முறையும் முக்கியமானது.  அழகான வெளிப்பாடு, அதிக மதிப்பெண்களுக்கான படிக்கட்டுகள்! இதோ சில டிப்ஸ்...

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

1. விடைகளைப் பத்தி பத்தியாக எழுதாமல், 1, 2, 3, என்று எண்கள் இட்டு, கருத்து அளவில் எழுதினால், அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

2. விடைகளுக்கு மையத் தலைப்பிடுவது, உட்தலைப்பிடுவது, விடையில் முக்கியமான வார்த்தைகளைக் கறுப்பு மையால் எழுதுவது பாராட்டுக்குரியது. செய்யுள் பகுதியில் உள்ள குறுவினா, நெடுவினாக்களுக்குச் செய்யுள் வரிகளை, விடைகளின் மேலோ அல்லது கீழோ சான்றாகக் கறுப்பு மையால் எழுதி விடை அளிக்கலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

3.கடிதங்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட மற்றும் பொதுவான கடிதங்கள் என இரண்டு வகைகளில் வரும். இங்கு பொது என்பது விண்ணப்பம் அல்லது முறையீடு. அதன் உறுப்புகளான நாள், இடம், அனுப்புதல், பெறுதல், விளி, பொருள், விளக்கம், இவண், உறை மேல் முகவரி ஆகியவை கறுப்பு மையால் அமைய வேண்டும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

4. பொதுக் கட்டுரையில், வினாவில் உள்ள குறிப்புகளைச் சட்டகமாக்கி, பின்பு அவற்றையே உட்தலைப்பாக வைத்து முன்னுரை, முடிவுரையுடன் எழுதவும். உட்தலைப்புகளுக்கு ஒரு நிறம், முக்கிய வார்த்தைகளுக்கு (கீ வேர்ட்) ஒரு நிறம் என எழுதுங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

5. இதைவிட முக்கியமானது, அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதுவது. தவறாக எழுதப்பட்ட வார்த்தையை அடித்து, அதற்கு மேல் எழுதுவதைவிட, அந்தத் தவறான எழுத்தைப் பென்சிலால் சின்னஞ்சிறு கோடால் அடித்துவிட்டு, சரியான வார்த்தையைப் பக்கத்தில் எழுத வேண்டும்.

கீழே சில மாதிரிகளைப் பார்க்கலாம்.

வினாப் பகுதிகளை வழக்கமாக எழுதும் முறை:

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

1. பெண்மையின் குணங்களாக இராமலிங்கனார் கூறுவன யாவை?

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !
எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அன்பு, ஆர்வம், அடக்கம், உண்மைத்தன்மை, உறுதி, தன்னலமின்மை, பொறுத்துக்கொள்ளுதல் ஆகியவை பெண்மையின் குணங்களாகும். கவலைக்கு மருந்தாகும் மனைவியாகவும், உடன்பிறந்தானுக்கு உறுதுணையாகும் தமக்கையாகவும், தந்தைக்குப் பணிவிடை செய்து மகிழும் மகளாகவும், அயலாரிடம் அன்பும் நட்பும் கொண்டவளாகவும் இருப்பவள் பெண். இவையே பெண்ணின் குணங்கள் ஆகும்.

வசீகரிக்கும் விடையாக எழுதும் முறை:

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

1. பெண்மையின் குணங்களாக இராமலிங்கனார் கூறுவன யாவை?

பெண்மையின் குணங்கள்:

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

1. அன்பு, ஆர்வம், அடக்கம், உண்மைத்தன்மை, உறுதி, தன்னலமின்மை, பொறுத்துக்கொள்ளுதல் ஆகியவை பெண்மையின் குணங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

2. கணவனின் கவலைக்கு மருந்தாகும் மனைவியாக இருப்பாள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

3. உடன்பிறந்தானுக்கு உறுதுணையான தமக்கையாக இருப்பாள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

4. தந்தைக்குப் பணிவிடை செய்து மகிழும் மகளாக இருப்பாள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

5. அயலாரிடம் அன்பும் நட்பும் கொண்ட பெண்ணாக இருப்பாள்.

இவையே பெண்ணின் குணங்கள்.

மாணவர்களே... இதுபோல உங்களின் விடை அளிக்கும் விதம் நன்றாக இருக்கும் பட்சத்தில், விடைத்தாள் திருத்துபவர், அதிக மதிப்பெண் வழங்கும் மனோபாவத்தைப் பெற்றுவிடுவார்.

- ரா. தாமோதரன்,
அ.மே.நி.பள்ளி, மெலட்டூர்.

 வாசிப்புத் திறனை மேம்படுத்தி, வசமாக்குவோம் மதிப்பெண்களை!

படிக்க வேண்டும் என்று நினைத்த உடன், முதலில் விட வேண்டியது உங்கள் கூச்சத்தை. எழுத்தைக் கூட்டிப் படிக்க வெட்கப்படத் தேவை இல்லை.

ஐந்தாம் வகுப்பு வரை ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல்,  புதிய பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த ஆனந்துக்கு, படிக்க ஆர்வம் வந்தது. வெட்கப்படாமல், முதல் வகுப்புப் பாடங்களை வாசித்தான். இப்போது, தமிழ் வாசிப்பதோடு ஆங்கில வார்த்தைகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு, ஏழாம் வகுப்பில் ஆர்வத்துடன் படிக்கிறான்.

உங்கள் பாடப் புத்தகத்தைத் தவிர, வண்ண வண்ணப் படங்கள்கொண்ட புத்தகங்களைப் பாருங்கள். பார்க்கப் பார்க்கப் புத்தகங்கள் உங்களை ஈர்க்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

சிறுவர் புத்தகங்களில் வரும் 'ஜோக்ஸ்’ பகுதியைப் படியுங்கள். சிரித்து மகிழும்போது, புத்தகத்தின் மீது ஆர்வம் வரும்.

ஆசிரியர்கள் உங்கள் நண்பரைப் போன்றவர்கள். அவர்களிடம் உதவி கேட்கத் தயங்கவே வேண்டாம்.

ஆங்கிலம் படிக்க, இரு எழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள் என்று படிப்பதுடன், பார்த்த உடன் படிக்கக்கூடிய sight words படியுங்கள். ஆங்கில எழுத்துகளின் ஒலியைப் படிப்பது, பெரிய பெரிய வார்த்தைகளை நீங்களே எழுத்துக் கூட்டிப் படிக்க உதவும்.

ஒரு வார்த்தையை நீங்கள் முயற்சிசெய்து படித்தவுடன், உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். உற்சாகமாக இருப்பது படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும்.

வார்த்தைகளை அப்படியே ஆசிரியரிடம் காட்டி, உச்சரிப்பு எப்படி என்று கேட்காதீர்கள். நீங்களே எழுத்தைக் கூட்டி, அதன் உச்சரிப்பை ஆசிரியரிடம் கூறி, சரி செய்துகொள்வது அடுத்தடுத்த வார்த்தைகளைப் படிக்க உதவியாக இருக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

அன்று படித்த வார்த்தைகளை அன்றே எழுதிப் பார்த்து விடுங்கள். தினமும் 10 வார்த்தைகள். திங்கள் முதல் வெள்ளி வரை 50 வார்த்தைகள். வார இறுதியில் அந்த 50 வார்த்தைகளையும் வாய்விட்டுப் படித்து, எழுதிப் பாருங்கள். நன்கு தயார்ப்படுத்திக்கொண்டு, அடுத்த வாரத்துக்குச் செல்லுங்கள்.

வகுப்பில் வார்த்தைகளை வைத்து, 'மெமரி கேம்’ விளையாடலாம். வரிசையில் ஒருவர், ஒரு வார்த்தையைச் சொல்லி, அதன் ஸ்பெல்லிங் சொல்லவேண்டும். அடுத்தவர், முதல் வார்த்தையுடன் தன் வார்த்தையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இப்படியே வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் சொல்ல, அந்த மாணவனைப் பார்க்கும்போது, அவன் சொன்ன வார்த்தையும் அதன் ஸ்பெல்லிங்கும் ஞாபகம் வரும். மறுநாள், இரண்டாவது வார்த்தை. இந்த முறையில் வார்த்தைகளும் பழகும்; ஞாபகசக்தியும் வளரும்.

தொலைக்காட்சி பார்க்கும்போது, விளம்பரங்களைப் படிக்கவும் அதன் உச்சரிப்பைக் கவனித்து, பார்த்த விளம்பரத்தின் ஸ்பெல்லிங்கை எழுதிப்பாருங்கள்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

சுட்டி விகடனில் வரும், 'சூப்பர் 6’ பகுதியை அழகாக வெட்டி, ஒரு சார்ட்டில் ஒட்டி எடுத்து வந்தாள் ஒரு மாணவி. அதை வகுப்பில் ஒட்டியபோது, படத்துடன் ஏதோ இருக்கிறதே என்று வாசித்த ஒரு ஆசிரியை, 'காண்டாமிருகத்தின் அடர்ந்த முடிதான் அதன் கொம்பாம்’ என்று எனக்குச் செய்தியும் சொன்னார். வண்ணப் படங்கள் வாசிப்பைத் தூண்டும்.

- என்.கிருஷ்ணவேணி,          
ஊ.ஒ.ந.நி.பள்ளி, நல்லம்பாக்கம்.

 வினாத்தாளில் ஒளிந்துள்ள விடைகள்!

வினாத்தாளைப் பெற்றவுடன், ஒருமுறைக்கு இருமுறை புரிந்துகொள்ளும் வகையில் வாசித்தாலே, தேர்வில் நல்ல மதிப்பெண்களை அள்ளலாம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்போது, கேள்விக்குப் பொருந்தாதவற்றை விலக்கிவிட்டு, மீதம் உள்ளதை விடையாக எழுதுங்கள்.

பொருத்துக எழுதும்போது, பாடங்களுக்கு ஏற்ப விடைகளைப் பகுத்தாலே, எளிதில் விடை காணலாம்.

உதாரணமாக, அறிவியல் தேர்வில் வரும் பொருத்துக எனில், இயற்பியலில் 2, வேதியியலில் 2, உயிரியலில் 2, தாவரவியலில் 2 என வினாக்கள் இருக்கும். இடத்துக்கு ஏற்ற இரண்டு விடைகளில் ஒன்றைப் பொருத்தினாலே, சரியான விடையைப் பெறலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

குறுகிய வினாக்களில் உள்ள வினாவைக் குறிக்கும் வார்த்தைகளை எடுத்துவிட்டு, ஓரிரு வார்த்தைகளை எழுதினாலே விடை வந்துவிடும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய நெடு வினாவைப் படித்தால், அந்தப் பாடத்தில் உள்ள நிறையக் குறுவினாக்களுக்கு, விடை தரலாம். அல்லது அந்தப் பாடத்தில் படித்த குறுவினாக்களைத் தொகுத்து, நெடு வினா விடையாக எழுதலாம்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

ஆங்கிலத்தைப் பொருத்தவரை, பாடத்தின் 'சம்மரி’யைப்  படித்துவிட்டால் குறுவினா, நெடுவினா இரண்டையும் எழுதிவிடலாம்.

கணிதத்தில் வரைபடம், செய்முறை வடிவியல் கேள்விகளை நன்றாகப் பழகி, எழுதினால் வெற்றி நிச்சயம்.

சமூக அறிவியலில் வரைபடங்களில் பழகிப் பார்த்தால்,  மதிப்பெண் அள்ளலாம்.

- ஸ்ரீ.திலீப்,
அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம்.

 தேர்வை எதிர்கொள்வது எப்படி?

1. தேர்வு என்றவுடன் தோன்றும் பயத்தைக் கைவிட்டு, தன்னம்பிக்கையோடும் விருப்பத்துடனும்  தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

2. நமது ஆர்வம், நேரம், உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, மதிப்பெண் எனும் பரிசைப் பெறுவதாக எண்ண வேண்டும்.

3. தேர்வுக் காலங்களில் அதிகாலைப் பயிற்சி சிறந்த பலனைக் கொடுக்கும்.

4. படித்தவற்றைக் கண்களை மூடித் திரும்ப நினைவுகூர்வதும்  எழுதிப் பார்ப்பதும் மறதியைத் தடுக்கும்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

5.தேர்வு நாளன்று புதிதாக எதையும் படிக்காமல்,  திருப்புதல் பயிற்சியை மட்டும் செய்யுங்கள்.

6.தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்பாக, பாத்ரூம் செல்ல வேண்டி இருந்தால், அலட்சியப்படுத்தாதீர்கள். அது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களைப் பாதிக்கும்.

7. விடைகளைத் தெளிவாகவும் அழகாகவும் பதிவு செய்ய வேண்டும். தகுந்த இடைவெளிவிட்டு எழுதுதல், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் கோடிடுதல் போன்றவை விடைத்தாளை அழகூட்டும்.

8. புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதாமல், நாம் சொல்வது போல எழுத வேண்டியது அவசியம். படித்து, உள்வாங்கி, அவரவர் திறனில் வெளிப்படுத்துவதே கற்றல்.

எக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் !

9. சமூக அறிவியலில் போர்கள் பற்றி எழுதும்போது, எப்பொழுது, யார் யாருக்கு, விளைவு, எங்கே நிகழ்வு, முடிவு போன்ற தலைப்புகள் இட்டு எழுதலாம். இது உங்களின் தெளிவான கற்றலையும் திறனையும் உறுதிப்படுத்தும்.

10. கற்றலில் வெளிப்படுத்துதல் என்பது வெற்றிக்கு வழி. படித்தல், மனப்பாடம் செய்தல்,  நினைவுகூர்தல், அழகாக வெளிப்படுத்துதல், தொடர்ந்து கடைப்பிடித்தல் அவசியம்!

   - முழுமதி மணியன்,
குருமூர்த்தி நடுநிலைப் பள்ளி,
மயிலாடுதுறை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு