Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி

மலர்களும் நிறங்களும்!

மலர்கள், சூரியனிடம் இருந்து நிறத்தைப் பெறுகின்றன. சூரிய ஒளி, ஏழு வண்ணங்களின் கலவை. மலர்கள், தமக்கு வேண்டிய வண்ணங்களைக் கிரகித்துக்கொண்டு, வேண்டாம் என வெளிப்படுத்தும் நிறங்களே, நம் கண்களுக்கு அந்த மலரின் நிறமாகத் தெரிகிறது.

'ஸ்கார்லெட்’ எனப்படும் ஒரு வகைப் பூவின் மூலம், தட்பவெப்ப நிலையை அறியலாம். இந்தப் பூவின் இதழ்கள் மூடியிருந்தால், மழை அல்லது குளிர்ச்சியான தட்பவெப்பம் இருக்கும். இதழ்கள் திறந்திருந்தால், வெயில் நன்றாக அடிக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

 வெள்ளை மாளிகை!

அமெரிக்க ஜனாதிபதிக்கு, ஒரு தனி வீடு இருக்க வேண்டும் என்று முதலில் தீர்மானித்தவர், அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி, ஜார்ஜ் வாஷிங்டன். அதுவே வெள்ளை மாளிகை. அவரது பதவிக் காலத்தில் கட்டடம் முடிவடையாமல், இரண்டாவது ஜனாதிபதியான ஜான் ஆடம்ஸ்தான் முதலில் அங்கு வசித்தார். இந்த மாளிகையில், விமானக் குண்டு வீச்சில் இருந்து தப்ப, ஒரு நிலவறை இருக்கிறது. அந்த அறைச் சுவரின் கனம், 270 சென்டிமீட்டர். இரட்டை வரிசை எஃகுக் கதவுகள் கொண்டது. 9 லட்சம் டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த அறையில் இருக்கும் ரகசியம், முக்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

சோப்பின் அறிமுகம்!

பழங்கால மக்கள், கடவுளுக்கு ஆடு, மாடுகளைப் பலியிட்டுப் பிரார்த்திப்பது வழக்கம். திறந்தவெளியில் உள்ள பலிபீடத்தில்     பிராணிகளைப் பலியிட்டதும் காய்ந்த விறகுகளுடன் தீயிட்டுக் கொளுத்துவர். அப்படித் தீயில் வெந்து உருகிய பிராணிகளின் கொழுப்பும், விறகுச் சாம்பலும் ஒன்றுகலந்து கட்டியாக உறைந்து கிடைந்ததைத் தற்செயலாகப் பயன்படுத்தியபோது உருவானதே, இன்றைய சோப்பின் மூலக் கதை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பாபிலோனியர்கள், கி.மு. 2800-ம் ஆண்டுகளிலேயே விலங்குகளின் கொழுப்பு மற்றும் தாவரங்களின் எண்ணெயில் இருந்து சோப்பைத் தயாரித்துப் பயன்படுத்தினார்கள்.

 உயர்ந்த சிகரங்கள்!

நண்பர்களே... உலகின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்பது தெரியும். கண்டங்கள் ரீதியாக சில உயர்ந்த சிகரங்கள் எவை எனத் தெரிஞ்சுக்கலாம்.

ஆசியாவின் உயர்ந்த சிகரம், எவரெஸ்ட் (Everest) - 8,850 மீட்டர்.

வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம், மெக்கென்லே (McKinley) - 6,168 மீட்டர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம், அகன்காகுவா (Aconcagua) - 6,960 மீட்டர்.

ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரம், கிளிமாஞ்சாரோ (Kilimanjaro) - 5,895 மீட்டர்.

அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரம், வின்சன் மாஸிஃப் (Vinson Massif) - 4,892 மீட்டர்.

ஐரோப்பாவின் உயர்ந்த சிகரம், ஆல்ப்ஸ் (Alps)- 4,810 மீட்டர்.

ஃபோர்க்

சுட்டி ஸ்டார் நியூஸ்

அம்மா செஞ்ச நூடுல்ஸை, அழகாக எடுத்துச் சாப்பிட, ஃபோர்க் (Fork) பயன்படுகிறது. கரண்டி வகைகளில் ஒன்றான இதைப் பழங்காலத்திலேயே கிரேக்கர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். சங்கு, மரம், வெள்ளி, தங்கம் போன்றவற்றால் அப்போது செய்யப்பட்டன. நவீன ஃபோர்க்குகள், இத்தாலியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் ஹென்றி திருமணத்துக்காக, இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குச் சென்றது. இத்தாலி சென்ற சுற்றுலாப் பயணி, தாமஸ் கெயோட் மூலம் இங்கிலாந்துக்கு வந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு