பிரீமியம் ஸ்டோரி

சாகசம் செய்வது சிலருக்கு சாக்லேட் சாப்பிடுவது மாதிரி. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயது ஸ்காட் யங் (Scott young) ஒரு சாக்லேட் பிரியர்.

உயர்ந்த கோபுரங்கள், கட்டடங்களைக் கண்டால், உச்சிக்குச் சென்றுவிடுவார். அந்தக் கட்டடத்தின் சுவர் விளிம்பில், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், கைகளால் தலைகீழாக நிற்பார். தன் கால் விரல்களுக்கு இடையே சிறிய கேமராவைப் பொருத்திக்கொண்டு படமும் பிடிக்கிறார். சிறுவயதில் இருந்தே உயரமான கட்டடங்களில் ஏறுவதும் வீட்டுக் கூரைகளுக்கு நடுவே தாவிச்செல்வதும் மிகவும் பிடிக்குமாம்.

திக் திக் சாகசம் !

இங்கிலாந்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று, இந்த சாகசம் தொடர்பாக, ‘Hand stands in High Places’என்ற தலைப்பில் புராஜெக்ட் ஒன்றைத் தயாரித்துவருகிறார் ஸ்காட். ''ஏன் இந்த அபாய சாகசம்?'' என்று கேட்டால்,  ''மனதைச் சிதறவிடாமல், முழுக் கவனத்தைச் செலுத்திச் செய்தால், அபாயம் கிடையாது'' என்கிறார் 'தில்’ ஸ்காட் யங்.

திக் திக் சாகசம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு