பேரா எஸ்.மோகனா

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது நம்ம ஊரு பழமொழி. புதனை எளிதில் பார்த்துவிட முடியாது. காலை, மாலை இரு வேளைகளிலும் புதன் கோள் தென்படும். ஆனாலும் கூட சூரிய உதயத்துக்கு முன், சூரிய மறைவுக்குப் பின் என இரு வேளையும், சுமார் 45 நிமிடங் கள் மட்டுமே தெரியும். அதுமட்டும் இல்லை. அது, தொடுவானின் அருகில்தான் தெரியும்.

கோள்களைப் பற்றியும், அவை சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும் சூரிய மையக் கொள்கை பற்றிச் சொன்ன நிக்கோலஸ் கோபர்நிகஸ் தன் வாழ்நாளில் ஒரு முறைகூட புதனைக் கண்களால் காணாமலேயே இறந்துவிட்டார்.

சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய கோள் புதன். புதன் ஒரு முறை சூரியனை சுற்றி முடிக்க 87.969 நாட்கள் ஆகின்றன. இதுதான் புதன் கோளின் ஓர் ஆண்டு.

ரோமானியர்கள், புதன் என்பது வணிகம், பயணம் மற்றும் திருட்டு போன்றவற்றின் கடவுளாக வணங்கினார்கள். புதனை கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்ற கடவுளின் மறு உருவாகப் பார்க்கின்றனர். சுமேரியர்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புதனை அறிந்திருந்தனர். இதனை 'நெபு’ தெய்வத்துடன் இணைத்தே பார்த்தனர்.

புதன் கிரகத்துக்கு அவ்வளவு எளிதாக விண்கலனை அனுப்பி விடமுடியாது. அதிலுள்ள சிக்கல்களினால் எந்த நாடும் அவ்வளவாக முயற்சி செய்யவில்லை. அமெரிக்கா புதனுக்கு 1973-ல் மரைனர்-10 அனுப்பி வைத்தது. அதன் பிறகு 2004-ஆகஸ்டில் மெசெஞ்சர் என்ற விண்கலம்(Mercury Surface, Space Environment, Geochemistry and Ranging (MESSENGER)அமெரிக்காவால் அனுப்பப்பட்டது. இதன் எடை 485 கிலோ.

மெசெஞ்சரைத் தாங்கிச் சென்ற ராக்கெட்டின் வேகம் அதை புதனின் ஈர்ப்பு வட்டத்துக்குள் செலுத்தாது. எனவே, இந்தச் சிக்கலை யோசித்த விஞ்ஞானிகள் அதை பூமியின் மாற்றுப் பாதையில் செலுத்தினார்கள். அதுமட்டும் போதாது என்று மெசெஞ்சரின் வேகத்தை மட்டுப்படுத்த, ராக்கெட்டின் முன் பகுதியிலும் எரிகலனைப் பொருத்தி எரியச் செய்து (பொதுவாக ராக்கெட்டின் பின் பகுதியில்தான் எரிகலனை பொருத்தி எரிப்பார்கள்)ராக்கெட் முன்னேறிச் செல்லும் வேகத்தை மட்டுப் படுத்தினார்கள். கூடவே, மெசெஞ்சர் வெள்ளி கிரகத்தை 2006 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் சுற்றிவருகிறபடி செய்தார்கள். மெசெஞ்சர் அனுப்பப்பட்டதில் இருந்து சூரியனை பதினைந்து முறை சுற்றி வந்த பிறகே, அதன் வேகம் மட்டுப்பட்டு... ஒரு வழியாக இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி புதனால் ஈர்க்கப்பட்டது. தற்போது புதனை அதன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

மெசெஞ்சருக்கு புதனை அடைய சரியாக ஏழு ஆண்டுகள் ஆகியது. இது புதனை வலம் வந்தபடியே அங்கு நிலவியல் தன்மை, அதிலுள்ள வேதிப் பண்புகள், அதன் காந்தப் புலன் மற்றும் தண்ணீருக்கான வாய்ப்பு, புதனின் பரப்பு ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து, படங்களைப் பதிவு செய்து அனுப்பி வருகிறது.