புதிய பகுதி !

நாம் டிஜிட்டல் கேமரா வாங்கியவுடனே... நண்பர்கள் முதலில் கேட்பது... 'இது எத்தனை மெகா பிக்சல் கேமரா?’ ஐந்து, எட்டு, பனிரெண்டு பிக்சல் என்று சொல்லுவோம். ஆனால், 111 மில்லியன் கிகா பிக்சல் போட்டோ கேள்விப்பட்டு இருக்கீங்களா? இதை பிரித்துப் போட்டால், இரண்டு கால்பந்து மைதானம் அளவுக்கும் அதிகமான அளவில் இருக்கும். அதாவது, 13,800 சதுர மீட்டர் அளவு! ஜோஸ் மனுயல் டோமிங்யுஸ் மற்றும் பாப்ளோ பொம்பா என்ற இரண்டு புகைப்படக்காரர்கள் இதைப் படம் பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒன்பது மாத முயற்சியில் இதைச் சாதித்து உள்ளனர்.

இந்தப் புகைப்படத்தில் இருப்பது ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற செவில்லா நகரமாகும். இந்த நகரத்தின் சிறப்பு வாய்ந்த பகுதிகள் மற்றும் பாரம்பரியமிக்க கட்டடங்களையும் இயற்கை எழிலையும் ஒரே க்ளிக்கில் கொண்டுவந்துள்ளனர். இதற்காக 60 மீட்டர் உயரம் உள்ள தோரே சின்ட்லர் என்ற கட்டடத்தின் உச்சியில் இருந்து மொத்தம் 70,000 படங்கள் எடுத்துள்ளனர்.

கேமராவை இயக்குவதற்காக பிரத்யேகமான ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். அத்துடன் கம்ப்யூட்டருடன் கேமராவை இணைத்து, நேரடியாக படங்களைப் பதிவுசெய்து உள்ளனர். 16 அடி உயரம் உள்ள கட்டடத் தின் உச்சியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு பகுதியில் உள்ள நகரையும், நதியையும் படத்தில் கொண்டு வந்துள்ளனர். மார்ச் 2010-ல் இந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது தொழில்நுட்பப் பிரச்னைகள், பலமான காற்று, பனி, மழை என்று அடுத்தடுத்து பல சோதனைகள் வந்தன. அதை எல்லாம் சமாளித்து, செப்டம்பர் 2010-ல் வெற்றிகரமாக படத்தை எடுத்து முடித்தனர். பிறகு, கிட்டத்தட்ட மூன்று மாதம் முயற்சித்து, போட்டோக்களை எடிட் செய்து நவம்பரில் படத்தை வெளியிட்டனர். அதில் மொத்தம் 1,40,000 சிறுசிறு படங்களை நீங்கள் பார்க்க முடியும்.

இந்த பெரும் முயற்சிக்கு 2010-ஆம் ஆண்டு வரை உலக சாதனை என்ற பெருமை கிடைத்திருக்கிறது. சும்மாவா... 111 ஆயிரம் மில்லியன் பிக்சல் புகைப்படம் ஆயிற்றே!

Canon SD Mkll 400 mm-lens மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது www.sevilla 111.com.நீஷீனீ என்ற இணையதள முகவரியில் அழகாக உலா வருகிறது. இந்தத் தளத்தில் நீங்கள் நுழைந்தால் பிரமித்துப் போவீர்கள்.

இது மொத்தமுமே நவீன தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மற்றும் இணையம் ஆகியவற்றின் கொடை என்றுதான் கூற வேண்டும். வாங்க 'சைட் அடிப்போம் ஜாலியா!’