நீல நிற மனிதர்கள் !

சுட்டிகளுக்கான காமிக்ஸ் உலகத்தில் இருந்து திரைப்படமாக வந்து இருக்கிறார்கள் ஸ்மர்ப்ஸ். சோனி மற்றும் கொலம்பியா நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க நீல நிறத்தாலான உலகில் வாழ்ந்து வருபவர்கள் ஸ்மர்ப்ஸ். மூன்று ஆப்பிள்களை அடுக்கி வைத்ததைப் போல் குள்ளமான, வித்தியாசமான தோற்றம். தங்கள் உலகில் நிம்மதியாய் வாழ்ந்து வரும் இந்த இனத்துக்கு கார்கமேல் எனும் தீயவனால் ஆபத்து ஏற்படுகிறது. இந்த நீல நண்பர்களை தங்கமாக்கவும், கொல்லவும் துடிக்கிற கார்கமேலிடம் இருந்து தப்பித்து, பூமியில் உள்ள நியூயார்க் நகருக்கு வருகிறார்கள். அங்கே பாட்ரிக், கிரேஸ் என்ற தம்பதிகளின் அபார்ட்மென்டில் தஞ்சம் அடைகிறார்கள். அங்கும் வந்து தொல்லை தருகிறான் கார்கமேல். ஸ்மர்ப்ஸ் சொந்த உலகுக்குப் போகிறார்களா இல்லையா என்பதை விறுவிறு திரைக்கதையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ராஜா கோஸ்னெல்... ஸ்கூபி டூ மற்றும் ஹோம் அலோன் போன்ற சுட்டிகளுக்கான படங்களை இயக்கியவர் என்பதால், சுட்டிகளைக் கவரும் சுவாரசியமான விஷயங்கள் படம் முழுக்க உண்டு. இந்தப் படத்துக்காக ஸ்பெயினில் உள்ள ஜுஸ்கர் எனும் நகரத்தையே 4200 லிட்டர் நீலநிற பெயின்ட்டால் குளிப்பாட்டி இருக்கிறார்கள்.

-பூ.கொ.சரவணன்

லட்சியம் வேண்டும் !

''மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் வெற்றிக்கு அவசியம் நல்லொழுக்கம், நல்லொழுக்கத்தை தாய், தந்தை, ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.''

சமீபத்தில் தூத்துக்குடி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த அப்துல் கலாம், மாணவர்களுக்குச் சொன்ன பொன்னான வரிகள் இவை. நாற்பது பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர்.அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

'நம் நாடு வல்லரசாக, வேளாண்மை வளர வேண்டும். ஆனால், விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தொடர்ந்தால் நாட்டின் நிலை?’ என்று ஒரு சுட்டி கேட்க, ''நம் நாட்டில் 60 கோடி விவசாயிகள் உள்ளனர். ஆண்டுக்கு 235 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்கலாம்.'' என்றார்.

'இளைஞர்களை கனவு காணுங்கள் என்கிறீர்களே, நீங்கள் கனவு கண்டுதான் ஆராய்ச்சியாளர் ஆனீர்களா?’ என்று கேட்டதற்கு... ''தூங்கும்போது உங்களைக் கனவு காணச் சொல்லவில்லை. கனவில் லட்சியம் வேண்டும். நீ நீயாக இருக்கவேண்டும். நான் கண்ட கனவுக்கு பல தடைகள் இருந்தன.'' என்றார்.

'உங்களுக்கு மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்புக் கிடைத்தால் ஏற்பீர்களா?’ என்ற கேள்விக்கு... ''சென்னை, அகமதாபாத், அமெரிக்கா எனச் சென்று மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தது ஆசிரியர் பணி. எனவே, ஆசிரியராகவே இருக்க விரும்புகிறேன்.'' என்றார்.

'மாணவர்களை சாதிக்கலாம் வாங்க என்று தாங்கள் கூறுவதன் நோக்கம் என்ன?’ என்று கேட்டதற்கு, ''என்னால் செய்ய முடியும் என்ற லட்சியம் இருக்கவேண்டும், என்னால் முடியுமெனில் எங்களால் முடியும், எங்களால் முடியுமெனில் நாட்டால் முடியும்'' என்றார்.

அறிவியல் முகாம் !

பள்ளியில் படிக்கும்போதே சுட்டிகளை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தவும், அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை புதுடெல்லி சார்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 'அறிவியல் முகாம்’ சமீபத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 125 மாணவர்கள் கலந்துகொண்டனர். 'உயிர் இயற்பியல்’, 'உயர் தகவல் தொழில் நுட்பம்’, 'பழங்குடி மருத்துவம்’ முதலான 20 தலைப்புகளில் வரைபடங்கள், செயல்முறை விளக்கங்களுடன் கருத்தரங்குகள் நடைபெற்றன. ஆசியாவிலேயே பவளப் பாறைகள் அதிகம் காணப்படும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 உயிரினப் பூங்கா தீவுகளில் காணப்படும் சிங்க மீன் உள்ளிட்ட 3500 அரியவகை உயிரினங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றின் குணாதிசயங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாம் ஒருங்கிணைப்பாளரான விலங்கியல் துறை பேராசிரியர் வீரபாகு, ''பொதுவாக என்ஜினியரிங் கல்லூரிகளில்தான் இவ்வகை முகாம்கள் நடைபெறும். கலைக் கல்லூரியில் முகாம் நடைபெறுவது இதுவே முதல் முறை. வருங்கால இந்தியாவில் எல்லா ஆராய்ச்சிகளையும் இந்திய மாணவர்களே கண்டுபிடிக்க வேண்டும்'' என்றார்.

இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்

கேன்கருக்கு பை..பை !

சென்னையைச் சேர்ந்த பேட்டர்சன் புற்றுநோய் மையம் 2003-ஆம் ஆண்டு நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு, தனது மருத்துவ சேவையின் ஆறாம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் வகையில் தருமபுரி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஐநூற்றுக்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகளுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. எதிர்காலத் தலைமுறையினர், புற்றுநோய் குறித்தும், அந்நோயாளிகளிடம் எப்படி பழகுவது என்பது குறித்தும் அறிந்தனர்.

''புற்றுநோய் ஒரு தீராத வியாதி அல்ல. ஆரம்பக் கட்டத்திலே முறையான மருத்துவம் செய்துவந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதே எங்களுடைய நோக்கம்'' என்கிறார் இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.விஜயராகவன்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர் செந்தமிழன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி.குமரன், நடிகர் மதன் பாப், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முறையான மருத்துவத்தின் மூலம் மீண்ட நோயாளிகளிடம் சுட்டிகள் தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர். பங்கேற்ற சுட்டிகளுக்கு சான்றிதழ்களும் பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

-கே.ஜி.
படம்: வி.செந்தில்குமார்