மை டியர் ஜீபா ரயில் தண்டவாளத் தில்தான் போகணுமா? பஸ், லாரி மாதிரி இதுவும் சாலைகளில் ஓடினால் என்ன ஆகிவிடும்?

-சி.ராஜாராம், ஈரோடு.

நல்ல யோசனைதான் ராஜா ஏற்கெனவே ரயில்கள் ரோடில் ஓடிட்டுதான் இருக்கு. நீ பார்க்கலியா? கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ்ன்னு நிறைய ரயில்கள் ஈ...'ரோடு’ல ஓடிட்டு இருக்கு, ஓடிப்போயி பாரு. எப்பூடி?

ஹாய் ஜீபா, என் அண்ணனுக்கு பதில் சொல்லி 'பெட்’டில் நான் ஜெயிக்கணும்... ஹெல்ப் பண்ணு ப்ளீஸ் 'ஒரு புலவன் பொய்யே பேசிக்கொண்டிருந்தான். இனிமேல் பொய் பேசக்கூடாது என நினைத்து, ஒரு ஆற்றங் கரையில் குடிசை கட்டி, தியானம் செய்து வந்தான். அப்போது அங்கே ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வந்தான். அந்த மான், புலவனின் குடிசைக்குள் சென்று ஒளிந்து கொண்டது. புலவன் அந்த மானையும் காப்பாற்ற வேண்டும். பொய்யும் சொல்லக் கூடாது. என்ன சொல்லி வேடனை அனுப்பி இருப்பான்?’

-ஈ.பிரேம்குமார், திருப்பூர்.

'அந்தமான் இங்கே இல்லை’ன்னு சொன்னா பொய் சொன்ன மாதிரி ஆகாது இல்லே பிரேம்? (புலவர் தியானம் செய்றது அந்தமான் தீவா இல்லாம இருந்தா சரி).

நாம் தும்மும்போது ஏன் கண்களை மூடிக்கொள்கிறோம் ஜீபா?

-கா.ரா.கிருத்திகா, கணியூர்.

நாம் சுவாசிக்கும்போது காற்றில் ஏகப்பட்ட பாக்டீரியாக்களும், வைரஸ்களும், தூசியும் கலந்து மூக்கின் உள்ளே நுழையும். நம்மோட மூக்கில் இருக்கிற 'சிலியா’ங்கற சின்னஞ்சிறு முடிகள் இந்தக் காற்றை வடிகட்டி உள்ளே அனுப்பும். அதையும் மீறி வைரஸ் எதுவும் உள்ளே வந்துட்டா, மூக்கின் உள்ளே இருக்கிற 'டர்பினேட்ஸ்’ங்கிற 'பாடி’கார்டுகள் உடனே இந்த விஷயத்தை மூளைக்கு சொல்லிடுவாங்க. மூளை, உடனடியா நம்ம நெஞ்சுப் பகுதிக்கும் தொண்டைக்கும் கட்டளைகள் அனுப்பும். அதிக அழுத்தத்தோட காற்றை படு ஸ்பீடா வெளியே அனுப்பி, அந்த வைரஸை வெளியே அடிச்சுத் தள்ள ஏற்பாடுகள் நடக்கும். இந்த காற்றோட ஸ்பீடு கிட்டத்தட்ட மணிக்கு 70-லே இருந்து 100 மைல் வேகத்தில் இருக்குமாம். இதுக்குத் தேவையான காற்று நம்ம நுரையீரலில் இருந்தும், வாய் வழியா வெளியே இருந்தும் சேகரிக்கப்படுது (இதனாலதான் தும்முறதுக்கு முன்னாடி எல்லாரோட மூஞ்சும் அஷ்டகோணலுக்குப் போகுது).

சரி, விஷயத்துக்கு வர்றேன்... நம்ம மூக்கின் உள்ளே கண்களுக்கு ஒரு மெல்லிய பைப் வழி இருக்கு (ரொம்ப அழுவும்போது கண்கள்ல தண்ணி ஓவர்-ப்ளோ ஆகி, கொஞ்சம் தண்ணி இந்தப் பைப் வழியா மூக்குக்கும் வந்துடும். அதான், அழுறவங்க அடிக்கடி மூக்கைச் சிந்துவாங்க). தும்மும்போது இவ்வளவு ஸ்பீடுல வெளியே போற ஃபோர்ஸான காற்று, ஒருவேளை மூக்கு வழியா 'கண்’ பைப்புக்குள் போயிட்டா என்னா ஆகும்... கொஞ்சம் யோசிச்சுப் பாரு கிருத்திகா

புயல் அடிச்ச மாதிரி வர்ற இந்தக் காற்றுல, நம்ம கண்கள் அதனோட இடத்துல இருந்து எகிறி வெளியே பறந்துடக்கூட வாய்ப்பிருக்கு அதனாலதான் தும்முறதுக்கு ரெடின்னு மூளைக்கு சிக்னல் கிடைச்சதும் அந்தக் கடைசி செகண்டுல கண் இமைகளுக்கு 'மூடிக்கோ’ன்னு ஆர்டர் கொடுத்துடுது நம்ம மூளை

எனக்குத் தெரிஞ்சு இதுதான் காரணம்னு நினைக்கிறேன். மெடிக்கல் படிச்ச அண்ணாக்கள் இதுக்கு வேற ஏதும் காரணம் இருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்

டியர் ஜீபா நீ சொல்ற பதில்களை எல்லாம் தொகுத்து ஒரு புக்கா வெளியிடுவியா?

-ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

ஓ.. தாராளமா என் பதில்களை எல்லாம் தொகுத்து புக்ஸா போட நான் ரெடி. இதுக்கான கேள்விகளை எப்படி... நீங்க எல்லாருமா சேர்ந்து தொகுத்து ஒரே புக்கா போட இருக்கீங்களா... இல்ல, தனித்தனியா அவங்க அவங்களோட கேள்வியை தனித் தனி புக்கா போட்டுக்கப் போறீங்களா..? எதுவா இருந்தாலும் முன்கூட்டியே சொல்லிடுங்கப்பா. இல்லேனா, என் பதிலை மட்டும் படிச்சு யாருக்கும் எதுவும் புரியாது. ஹி...ஹி

தலைவர்கள் தங்கள் மேல் குண்டடிபடாமல் பாதுகாப்புடன் இருப்பதற்கு பயன்படுத்தும் 'புல்லட் ப்ரூஃப் கோட்’ எதனால் தயாரிக்கப் படுகிறது ஜீபா?

-ம.அக்ஷயா, அரூர்.

ஸ்டீலை விட ஸ்ட்ராங்கான இழைகளால் பின்னிய ஃபைபர் துணிதான் புல்லட் ப்ரூஃப் கோட்டின் முக்கிய பகுதி. லேயர்களாக இருக்கும் இந்த துணியை இரண்டு பிளாஸ்டிக் பிலிம்களுக்கு நடுவில் சாண்ட்விச் மாதிரி வைத்து, இந்த செட்டப்புக்கு மேலே நம்ம சாதாரண டிரஸ் துணியை தச்சுடுவாங்க. இந்த கோட், குண்டு துளைக்காம பாத்துக்கறது மட்டுமில்லாம, உடம்புல அதிர்ச்சியையோ காயத்தையோ உண்டாக்காமலும் பார்த்துக்கும். பெரும்பாலும் 'டுபான்'ஸ் கெல்வார் ஃபைபர்ஸ்’ என்கிற இழைகள்தான் இதுக்கு பயன்படுத்தறாங்க. ஸ்டீலைவிட இது அஞ்சு மடங்கு உறுதியானது... நூல் இழையைப் போலவே படு லேசானது வெறும் கோழி இறகைப் படு நெருக்கமா தச்சுக் கூட 'சிக்கன’ புல்லட் ப்ரூஃப் தயாரிக்கறாங்க

ஏணி மேல் ஏணி வைத்து வானத்தைப் பிடிக்க ஏறினால், எத்தனை ஏணி தேவைப்படும் என்று கணக்குப் போட்டு சொல்லு ஜீபா ப்ளீஸ்

-எஸ்.சௌம்யா, தேவனாங்குறிச்சி.

இப்போதைக்கு ஒரு நூறு ஏணியை ஒண்ணு மேல ஒண்ணு வெச்சு ஏறிக்கோ சௌம்யா. போவும்போது மறக்காம கொஞ்சம் நீளமான தாம்புக் கயிறை எடுத்துட்டுப் போயிடு. ஒருவேளை, அங்கே ஏணி ஏதும் இன்னும் தேவைப்பட்டா, லெட்டர் போடு பதறாதே... எத்தனை ஏணி வேணும்னு ஒரு பேப்பர்ல லெட்டர் எழுதி, அங்கே இருந்து கீழே போடுன்னு சொல்ல வந்தேன். கூடவே தாம்புக் கயிறையும் கீழே விட்டேனா, தேவையான ஏணிகளை அதுல கட்டி தூக்கிக்கலாம்.

என்னிக்குப் போறேன்னு மட்டும் கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடு. ஹெல்ப்புக்கு நான் வேணும்னா வர்றேன். எப்பூடி?