வந்தோரை இன்முகத்துடன் வரவேற்று வாழ்த்துவது தமிழர் பண்பாடு. தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் விடைபெறும் விழா, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள், அந்த வகுப்புக்குப் புதிதாக வரும் மாணவர்களை வாழ்த்தி வரவேற்றார்கள். கல்விக் கடவுள் சரஸ்வதியை வணங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்றினார். முன்னாள் மாணவர்கள் அனைவரும் மெழுகுவத்தி தீபம் ஏந்தி, சமூக முன்னேற்றத்துக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிறகு, ஒளிரும் மெழுகுவத்திகளைப் புதிய மாணவர்களிடம் வாழ்த்திக் கொடுத்து, பிரியாவிடை பெற்றனர். வித்தியாசமான இந்த நிகழ்ச்சி, பெற்றோரிடமும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது. நட்புக்கு ஒளியேற்றும் விழா!

சமீபத்தில், தோற்றத்திலும், அளவிலும் பூமியைப் போன்று தெரியும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் வான்வெளியில் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோளில்... மிதமான வெயிலும், மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறதாம். இந்தப் புதிய கோளுக்கு 'கெப்ளர் 186 எஃப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கோள்கள் (கண்டுபிடிப்பு) ஓய்வதில்லை.

கோயம்புத்தூர், இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் ஆதர்ஷினி, லேப்டாப்பைப் பிரித்து, மீண்டும் வேகமாகப் பொருத்துவதில், 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை படைத்தவர். 'தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, 'ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ போன்றவற்றிலும் இடம்பிடித்த இவர், தற்போது உலக சாதனை பட்டியலில் முத்திரை பதித்துள்ளார். லேப்டாப்பை 15 நிமிடம் 23 வினாடிகளில் பிரித்து, நேர்த்தியாகச் சேர்த்த ஆதர்ஷினியின் சாதனையைக் கௌரவித்து, இங்கிலாந்தில் உள்ள உலக சாதனைப் பல்கலைக்கழகம். வியட்நாமில் நடைபெற்ற ஒரு விழாவில், ஆதர்ஷினிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

சபாஷ் ஆதர்ஷினி.

சமீபத்தில், கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் கோடைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில்... யோகா, விளையாட்டு, ஓவியம், கைவினைப் பொருள்கள் தயார்செய்வது, முறையான ஆங்கிலம் கற்றல் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட சுட்டிகளுக்குப் பெரும் உற்சாக விழாவாக அமைந்தது. ''மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்ற பெற்றோர்களின் எண்ணத்தைப் போக்கும் வகையில், நம் பாடத்திட்டம் மாறினால், எதிர்கால இந்தியா வலிமையானதாக மாறும்'' அதற்காகத்தான் இதுபோன்ற கோடைப் பயிற்சிகள் என்கிறார் பள்ளியின் செயலர், சிந்தனைக் கவிஞர் கவிதாசன். குளுகுளு மலையில் ஜிலுஜிலு பயிற்சி!