டென்னிஸ் ஆடுகளத்தில் வெற்றிகளைக் குவித்து, நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வருகிறார் தக்ஷினேஸ்வர்.

சென்னை, வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார் தக்ஷினேஸ்வர். ''பிரபல ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் நடால், டென்னிஸ் விளையாட்டை வளர்க்கும் விதமாக, பல நாடுகளில் டென்னிஸ் கிளப் தொடங்கி, உதவிவருகிறார். ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரில், 'நடால் எஜுகேஷனல் டென்னிஸ் ஸ்கூல்’ உள்ளது. அங்கே, இந்திய அளவில் நடந்த 14 வயதுக்கு உள்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்திருக்கிறது'' என்கிறார்.

இரட்டையர் பிரிவில், ரன்னர்- அப் ஆக இவரும் வருண் வைகோவும் வந்திருக்கிறார்கள். (ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் பேரன்தான் வருண் வைகோ.)

''என் அப்பா சுரேஷ் ஏகாம்பரம், திண்டுக்கல் டென்னிஸ் கிளப்பில் முக்கியமான ஆட்டக்காரர். அவர் விளையாடச் செல்லும்போதெல்லாம் நானும் போவேன். அப்போது, கண்களால் டென்னிஸ் பேட்டைப் பிடிச்சுப் பழகினேன்.'' என்று சிரிப்புடன் சொல்கிறார் தக்ஷினேஸ்வர்.

மகனின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அப்பா சுரேஷ் ஏகாம்பரம் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கே வந்துவிட்டார். ''தக்ஷினேஸ்வர் மூன்றாவது படிக்கும்போது பயிற்சியைத் தொடங்கினோம். அப்போது, பயிற்சியாளர் சக்கரவர்த்தி ஹைதராபாத்தில் இருந்தார். பயிற்சிக்காக மூன்று வருடங்கள் நானோ, என் மனைவியோ தக்ஷினேஸ்வருடன் ஹைதராபாத் சென்று தங்குவோம்'' என்கிறார்.

பெற்றோரின் அர்ப்பணிப்பான உழைப்புக்குப் பரிசாக, வெற்றிப் பதக்கங்களைக் குவித்துவருகிறார் தக்ஷினேஸ்வர். 2008-ல் திண்டுக்கலில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில டென்னிஸ் போட்டியில், பட்டம் வென்றார். 2010-ல் செகந்தராபாத்தில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசியப் போட்டியில் பட்டம், 2011-ம் ஆண்டு 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசியப் போட்டியில் சாம்பியன், 2012 கோலாபூரில் நடந்த 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசியப் போட்டியில் வெற்றி, 2014-ல் புனேயில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசியப் போட்டியில் தங்கப் பதக்கம் என்று பதக்கப் பட்டியல் நீள்கிறது.

''இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட டென்னிஸ் பிளேயர்களில் முதல் இடத்தில் இருப்பவரைத் தவிர, மற்ற அனைவரையும் வெற்றி கண்டிருக்கிறார் தக்ஷினேஸ்வர். இவரது ஃபுட் வொர்க் வித்தியாசமானது. இதுபோன்ற ஃபுட் வொர்க்கை மற்றவர்களையும் பின்பற்றச் சொல்வேன்'' என்கிறார், அவரது பயிற்சியாளர் சக்கரவர்த்தி.

''தக்ஷின் போட்டிக் களத்தில் நடந்துகொள்ளும் விதம் அற்புதமானது. ஒரு போட்டியில் தக்ஷினிடம் தோற்றவர், தனது ராக்கெட்டை இவன் பக்கம் கோபமாக வீசியெறிந்தார். தக்ஷின் கோபப்படாமல், பொறுமையாக அந்த ராக்கெட்டை எடுத்து அந்த வீரரிடம் கொடுத்து, அவரது கையைக் குலுக்கிவிட்டு வந்தார். இந்தப் பக்குவம்தான் தக்ஷினின் வெற்றிகளுக்கு மேலும் துணை நிற்கிறது. இவர் சர்வதேச அளவில் நிச்சயம் ஜொலிப்பார்'' என்கிறார்.

''விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். நமக்கு எதிராக விளையாடும் யாரும் நமக்கு எதிரி கிடையாது. அவரும் சக வீரர்தான். தோல்வி நேரங்களில் அவருக்கு நமது நட்பான புன்னகையும் கைகுலுக்கலும்தான் பெரும் ஆறுதலாக இருக்கும்'' என்கிறார் தக்ஷினேஸ்வர்.

பக்குவம் நிறைந்த தக்ஷினேஸ்வரின் வெற்றிப் பயணத்துக்கு, கோல்டன் வாழ்த்துகள்.