''டி.வி.க்கு அருகில் நம் கையைக் கொண்டுபோனால், கை முடிகள் சிலிர்த்து எழுகிறதே... காரணம் என்ன ஜீபா?''

- மா.க.செல்வபிரகாஷ், பாப்பம்மாள்புரம்.

''அதற்குக் காரணம், 'ஸ்டாட்டிக் எலெக்ட்ரிசிட்டி’ எனப்படும் மின்காந்த விதி. தொலைக்காட்சிப்பெட்டியின் திரையை மின்னணுக் கதிர்கள் வேகமாகத் தாக்கும்போது, அந்தக் கதிர்கள் மின்னூட்டம் பெற்ற அயனிகளைத் (Ions) திரையில் உருவாக்குகின்றன. நேர், எதிர் மின்னேற்றம் அல்லாத நடுநிலை மின்னேற்றம் செய்யப்பட்ட உங்கள் கையின் ரோமங்களால், தாமும் நடுநிலை மின்னேற்றம் பெற முயற்சிக்கும் அயனிகள், முடிகளை ஈர்க்கின்றன. இதனால்தான் முடிகள் சிலிர்க்கின்றன.''

''ஹலோ ஜீபா... காய்ச்சல் இருக்கும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. அப்படி வெப்பம் அதிகரிக்கும்போது, நமக்கு வியர்க்காமல் குளிர்வது ஏன்?''

- க.பிரியங்கா, திருக்கோவிலூர்.

''நமது மூளையில் இருக்கும் ஹைப்போதாலமஸ் (Hypothalamas) எனும் பகுதிதான், உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்கிறது. நமக்குக் காய்ச்சல் வரும்போது, உடல் வெப்பநிலை உயர்வதற்குக் காரணமும் இதுதான். காய்ச்சலின்போது, உடலானது ஹைப்போதாலமஸுக்கு, வெப்பநிலைப் பராமரிப்புப் புள்ளியை அதிகரிக்கச் சொல்லி, சிக்னல்களை அனுப்பும். உடலில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படும்போது, உடலின் பதில் விளைவு இது. நோய்த் தொற்றுக்குப் பதில் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி செல்கள், 'எண்டோஜெனஸ் பைரோஜெனஸ்’ என்னும் மூலக்கூறுகளைச் சுரக்கும். அந்த மூலக்கூறுகள், ரத்தத்தில் பயணித்து, ஹைப்போதாலமஸை அடையும். இங்கேதான் உடல் வெப்பநிலையின் பராமரிப்புப் புள்ளி அதிகரிக்கப்படும். ஹைப்போதாலமஸ், 'குளிர்கிறது’ என்ற சமிக்ஞையை உடலுக்கு அனுப்பும். குளிரால் உடல் நடுங்கும் செயலும் உடலுக்கான ஒரு சமிக்ஞையே. தசைகளின் அசைவு மூலம் வெப்பத்தை உற்பத்திசெய்து, உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிக்னல் அது. வியர்வை என்பது, உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கான சிக்னல். நம் உடலில் இதுபோன்ற பல நுணுக்கமான தொழில்நுட்பங்கள் நிகழ்வதால்தான் நாம் சீராக இயங்குகிறோம்.''

''டியர் ஜீபா... வெளவால்களுக்குப் பகலில் கண் தெரியாது என்பது உண்மையா?''

- டி.மோகன் பிரசாந்த், முடுக்கன்துறை.

''மிகவும் தவறு. வெளவால்களுக்குப் பகலில் நன்றாகவே கண் தெரியும். மங்கிய வெளிச்சத்திலும் வெளவால்களால் நன்றாகப் பார்க்க முடியும். முக்கியமாக, பழம் தின்னி வெளவால்கள், நன்கு உப்பிய தன் பெரிய கண்களால், உணவையும் அதற்கான வழியையும்கூடக் கண்டுபிடித்துவிடும். இரவு நேரத்தில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் வெளவால்களுக்கு, கண்களைவிட அதன் புலன்கள்தான் 'பார்ப்பதற்கு’ அதிகம் உதவுகின்றன. அதற்குப் பெயர், 'எக்கோலொகேஷன்’ (echolocation). தங்கள் மூக்கு அல்லது வாயினால் பயங்கரமாக அவை எழுப்பும் ஒலி அலைகள் (நமது காதுகளால் கேட்க முடியாது) அருகில் இருக்கும் பொருள்கள் மேல் பட்டுத் திருப்பி, எதிரொலியாக வரும். அதைவைத்து, அந்தப் பொருள் இருக்கும் இடம், தூரம், வடிவம் போன்றவற்றை வெளவால்கள் தெரிந்துகொள்ளும்.''

''ஹாய் ஜீபா... சம்மர் லீவை என்ஜாய் பண்றதுக்கு உருப்படியா ஒரு ஐடியா சொல்லேன்!''

- எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

''கோடை விடுமுறை என்பது, உங்களுக்கு இயற்கையும் பள்ளியும் இணைந்து வழங்கும் ஓர் அற்புதமான ஓய்வு நேரம். கத்தரி வெயில் சுட்டெரித்தாலும், நண்பர்களுடன் நாள் முழுதும் விளையாட்டு, குடும்பத்துடன் பயணங்கள் என்று களிக்கும் காலகட்டம் இது. விளையாட்டு தவிர, எவ்வளவோ உபயோகமான விஷயங்கள் செய்யலாம்.

கிராமத்தில் தாத்தா, பாட்டி இருந்தால், அவர்களுடன் சில நாட்களைக் கழிக்கலாம். சுத்தமான காற்று, நீர், கால்நடைகள், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை கிடைக்கும். நம் பாரம்பரிய உணவுகளையும் விழாக்களையும் பழக்கவழக்கங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

கலை, விளையாட்டு அல்லது ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, பயிற்சி வகுப்புகளில் சேரலாம். ஆனால், அது உங்களுக்கு இன்னொரு சுமை ஆகிவிடாமல், விரும்பிச் செய்யும் விஷயமாக இருக்க வேண்டும்.

குடும்பத்தோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், மலைவாசஸ்தலங்கள், கடற்கரை நகரங்கள், பிரபல கோயில் நகரங்களுக்கு இன்பச் சுற்றுலா சென்று வரலாம். பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதோடு, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

உங்கள் தெரு அல்லது காலனி நண்பர்களுடன் சேர்ந்து, உங்கள் பகுதியைச் சுத்தப்படுத்துதல், ஏழை மாணவர்களுக்கு உதவுதல் என்று பிறருக்கு உபயோகமான செயல்களில் ஈடுபடலாம்.

வீட்டில் அம்மாவுக்கு உதவலாம். வேலைகளைப் பழகிக்கொள்ளலாம். இது, நீங்களே உங்கள் வேலைகளைச் செய்ய உதவியாக இருக்கும்.

இதுபோல, எத்தனையோ இனிய விஷயங்களைச் செய்ய, இந்தக் கோடை விடுமுறையைப் பயன்படுத்தலாம்.''

''என் இனிய ஜீபா... இரட்டைத் தலைக் குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் என்ன?''

- எம்.நவீன்குமார், கோயம்புத்தூர்.

''நாம் ஒவ்வொருவருமே, நம்முடைய மரபணுக்களின் (டி.என்.ஏ.) புரோகிராம்படி படைக்கப்பட்டவர்கள். நமக்கு ஒரு தலை, இரு காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு என்று அமைவது அந்த புரோகிராமின்படியே. இதில், சிறு குழப்பமோ, பிரச்னையோ ஏற்படும்போது, அந்தக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடு இருக்கும். இதுபோன்ற அதி தீவிரமான சமயத்தில், இரட்டைத் தலைக் குழந்தைகள் பிறக்கின்றன. கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் சில வீரிய மருந்துகள், சுற்றுச்சூழல் மாசு, கதிர்வீச்சு போன்ற விஷயங்கள்தான், டி.என்.ஏ. புரோகிராமில் குறைபாடு ஏற்படக் காரணங்கள். சுற்றுச்சூழலில் அக்கறை காட்ட வேண்டும். சுத்தமான காற்று, நீர், உணவு போன்றவற்றில் கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் இரட்டைத் தலைக் குழந்தைகள் உருவாவதைத் தடுக்கலாம்.''