விடுமுறை நாட்கள் தொடங்கியாச்சு. வழக்கமான வீடியோ கேம்களும், ஆங்ரி பேர்டு விளையாட்டும் அலுத்துவிட்டதா? இணையத்தில் அற்புதமான விளையாட்டுகளை வழங்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன.

எஜுகேஷன் ஜிலாப் (http://education.jlab.org/indexpages/elementgames.html) அமெரிக்க தேசிய ஆய்வுக்கூடமான, ஜெபர்ஸன் லேப் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம். என்னது, விடுமுறையிலும் அறிவியலா என அலற வேண்டாம். இந்தத் தளத்தில் உள்ள விஞ்ஞான விளையாட்டுகள் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அறிவியல் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

இதில், விஞ்ஞான லட்சாதிபதி எனும் விளையாட்டை ஆடிப்பார்க்கலாமா? (http://education.jlab.org/million)நம்ம அமிதாப்ஜி நடத்திய குரோர்பதி நிகழ்ச்சி மாதிரியான விளையாட்டு இது. கேள்விகள் அனைத்தும் அறிவியல் தொடர்பானவை. ஒவ்வொரு கேள்வியாக வரிசையாகக் காண்பிக்கப்படும். அதற்குச் சரியான விடை சொன்னால், அடுத்த கேள்விக்கு முன்னேறலாம்.

ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள். அவற்றில், சரியான பதிலை 'க்ளிக்’ செய்ய வேண்டும். நன்றாகப் பதில் தெரிந்தால், உடனே க்ளிக் செய்யலாம். அப்போது, இதுதான் சரியான பதிலா, உறுதியாகத் தெரியுமா? என்று குரோர்பதி பாணியிலேயே கேட்கும். உறுதியாகத் தெரிந்தால், ஆம் என க்ளிக் செய்யலாம். இல்லையா, வல்லுநரின் உதவியை நாடலாம். 50:50 வாய்ப்பைப் பயன்படுத்தலாம். இப்படி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வெற்றிபெற்றால், நீங்கள்தான் விஞ்ஞான லட்சாதிபதி. ஆனால், நிஜமான பணம் கிடையாது. ஒரு ஊக்கத்துக்காக, டாலர்களை வென்றதாக நினைத்துக்கொள்ளலாம்.

இதேபோல, இன்னும் பல விளையாட்டுகளும் அறிவியல் பகுதியில் இருக்கின்றன. அதில் ஒன்று, குறுக்கெழுத்துப் புதிர்கள். அணுக்கள், சூரிய மண்டலம், உடல்கூறு, இயந்திரங்கள் என ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்வுசெய்து, குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க, http://education.jlab.org/sciencecrossword/பகுதிக்குச் செல்லலாம். குறுக்கெழுத்துப் புதிர்களை, பி.டி.எஃப் வடிவில் எடுத்தும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடலாம்.

அறிவியல் போலவே, கணிதம் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. புதிர் கணிதம் எனும் விளையாட்டு மூலம், உங்கள் நண்பர்கள் மனதில் நினைக்கும் ரகசிய எண்ணைக் கண்டுபிடித்து அசத்தலாம் (http://education.jlab.org/mysterymath). மின்னல் வேக கணித விளையாட்டுகளும் வியப்பில் ஆழ்த்தும்.

விஞ்ஞானம் என்றால், பரிசோதனைகள் இல்லாவிட்டால் எப்படி? காற்று அடைத்த பலூனை திரவ நைட்ரஜனில் அழுத்தினால் என்ன ஆகும்? (http://education.jlab.org/frost) வீடியோவில் விளக்கமான பதில் இருக்கிறது. யூ டியூப் வீடியோக்கள் போல இந்தப் பகுதியில் விஞ்ஞான விளக்க வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம். இந்த இணையதளத்தை புக்மார்க் செய்துவிட்டீர்களா நண்பர்களே?