''சுட்டி விகடனின் 3D கொண்டாட்டம், சம்மர் ஸ்பெஷல் ட்ரீட். இந்த விடுமுறையை மறக்கவே மாட்டோம்'' என்கிறார்கள், தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.

எஃப்.ஏ. பக்கங்களில் தொடர்ந்து அசத்திவரும் இவர்கள், இதழ் வெளியானதுமே 3D புத்தகத்துடன் புகைப்படம் எடுத்து அனுப்பினார்கள். ''16 பக்கங்களுமே பிரமிக்கவைத்தன. அடையாறு ஆலமரம், மதுரை நாயக்கர் மகால், சமணர் குகை எல்லாவற்றையும் 3D கண்ணாடி மூலம் பக்கத்தில் பார்த்தோம். அடுத்த இதழுக்கு இப்பவே சொல்லிவிட்டோம். புத்தகத்தை உடனடியாக எங்களுக்கு கிடைக்கச் செய்த, அறிவியல் ஆசிரியர் குணசேகரன் சாருக்கு தேங்க்ஸ்'' என்று உற்சாகக் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

இவர்களைப் போலவே பல்வேறு ஊர்களில் இருந்தும் கடிதங்கள், இ-மெயில், தொலைபேசி மூலம் அட்டகாசமான வரவேற்பு. இதோ, இந்த இதழிலும் 3D கொண்டாட்டம் தொடர்கிறது.

3D கண்ணாடி, பட்டையாக இருக்கும். அதை, 'ப’ வடிவத்தில் மடியுங்கள்.

மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவர்கள், அதன் மேலேயே இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொள்ளலாம்.

3D படங்களை நல்ல வெளிச்சத்தில் பார்ப்பது முக்கியம். ஒரு படத்தின் முழுமையான முப்பரிமாணத்தை அனுபவிக்க, ஒவ்வொரு பகுதியையும் அவசரப்படாமல், பொறுமையாக ரசியுங்கள்.

முகத்துக்கு நேராகப் பார்க்காமல், புத்தகத்தை சற்றே சாய்வாகப் பிடித்துப் பார்த்தால், 3ஞி 'எஃபெக்ட்’ இன்னும் அருமையாக இருக்கும். சற்றே இட, வலமாக அசைத்தால், பிரமிப்பு கூடும். கை விரல்களைப் படத்தில் ஆங்காங்கே வைத்தும் ஆழம், தூரம் என ரசித்து மகிழுங்கள்.

முக்கியமான ஒரு விஷயம்.... 3ஞி படங்கள் அல்லாத மற்ற பக்கங்களைக் கண்ணாடி அணிந்தபடி பார்க்காதீர்கள்... படிக்காதீர்கள். அது, கண்களுக்குத் தேவையற்ற வேலையைக் கொடுத்து, தொந்தரவை உண்டாக்கும்.

இனி என்ன? 3D உலகில் நுழையுங்கள்!