எங்க வீடு பெருசு!

வட அமெரிக்காவில் காணப்படும் கழுகு இனங்களில் ஒன்று, பால்டு ஈகிள் (Bald eagle).உலகிலேயே மிகப்பெரிய கூடுகளை மரத்தில் கட்டுவது இந்தக் கழுகுகள்தான். இவற்றின் கூடுகள், 2.5 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழம் எனப் பிரமாண்டமாக இருக்கும். கிட்டத்தட்ட 20 மீட்டர் உயரம்கொண்ட மரங்களைத் தேர்வுசெய்து, அதன் உச்சியில் கூடுகளைக் கட்டும். இதன் குஞ்சுகள், மற்ற பறவைகளுடன் விளையாடும்போது, 'எங்க வீடு ரொம்பப் பெருசு தெரியுமா?’ என்று சொல்லிக்குமோ!

கண்டுபிடிப்பு!

இப்போது, ஆடைகள், கைப் பைகள் என எல்லாவற்றிலும் 'ஜிப்பர்’ எனப்படும் ஜிப் பயன்படுத்தப் படுகிறது. ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகே, இந்த ஜிப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை பட்டன்களே பயன்படுத்தப்பட்டன. இது, அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினீயரான வொயிட்காம்ப் எல். ஜட்ஸன் (Whitcomb L. Judson) என்பவரின் ஐடியாவில் பிறந்தது. 16 ஆண்டுகளுக்குள் 30 வகையான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றவர் ஜட்ஸன். இவர், ஷூ லேஸுக்குப் பதிலாக, இந்த ஜிப் முறையைக் கொண்டுவந்தார்.

கோயில்மணி அறிவியல்!

கோயில்களில் காணப்படும் மணி, ஒரே உலோகத்தில் செய்யப்பட்டது அல்ல. காப்பர், ஜிங்க், குரோமியம், நிக்கல் போன்ற பல உலோகங்களை சரிவிகிதமாகக் கலந்து செய்யப்பட்டது அது. அப்படிப்பட்ட ஒரு கலப்பால் செய்யப்பட்ட மணியை நாம் அடிக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் ஒலியை, நமது உடல் உள்வாங்குகிறது. இதனால், உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் இயங்கி இடது பக்க மூளை அதிகமாக இயங்குமாம், ஆற்றலும் திறமையும் வளருமாம்.

இப்படியும் இருந்தாங்கப்பா!

அப்போது, லால் பகதூர் சாஸ்திரி மாதச் சம்பளமாக 40 ரூபாய் பெற்றுக்கொண்டிருந்தார். ஒருமுறை அவரது நண்பர், 50 ரூபாய் கடன் தருமாறு கேட்டார். சாஸ்திரி, தன் குடும்ப நிலையை எடுத்துக் கூறி, பணம் இல்லை என்றார். அப்போது சாஸ்திரியின் மனைவி, 50 ரூபாயை எடுத்துவந்து கொடுத்தார். நண்பர் சென்றதும் மனைவியிடம், ''உனக்கு எப்படி 50 ரூபாய் கிடைத்தது?'' என்று கேட்டார். ''நீங்கள் கொடுக்கும் பணத்தில் மாதம் 10 ரூபாய் சேமிப்பேன்'' என்றார். மறுநாள், சாஸ்திரி தான் வேலைபார்க்கும் இடத்தில், ''என் மனைவி குடும்பத்தைச் சிக்கனமாக நடத்துகிறாள். எனவே, எனக்கு 30 ரூபாய் சம்பளமே போதும்'' என்றார்.

உக்கிரமான எரிமலை!

உலகிலேயே மிகவும் பயங்கரமான எரிமலை, ஹவாய் தீவின் பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள மவ்ன லோவா (Mauna Loa). சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் இருந்து வெளிப்பட்டது இந்த எரிமலை. இன்றுவரை இந்த மலை உமிழ்ந்த எரிமலைக் குழம்பைக்கொண்டு, உலகைச் சுற்றி 30 முறை நான்கு வழிப்பாதையைப் போட்டிருக்க முடியுமாம். இன்றும் தனக்குள் பொங்கிக்கொண்டிருக்கிறது, மவ்ன லோவா.

புரட்சி... புரட்சி!

பொருள்களின் உற்பத்தித் திறன்களைப் பெருக்கவும், ஒரு துறையை முன்னேற்றவும் மேற்கொள்ளும் திட்டத்தைப் புரட்சி என்பார்கள். இங்கே சில புரட்சிகள்...

1. பசுமைப் புரட்சி வேளாண்மை
2. வெண்மைப் புரட்சி பால் பொருள்கள்
3. வெள்ளிப் புரட்சி முட்டை
4. பொன் புரட்சி பழம், காய்கறி.
5. மஞ்சள் புரட்சி எண்ணெய் வித்துக்கள்
6. நீலப் புரட்சி மீன் உற்பத்தி.
7. சாம்பல் புரட்சி மரம் உற்பத்தி.
8. கறுப்புப் புரட்சி மரபுசாரா எரிசக்தி

பற... பற... பற...

உலகிலேயே அதிக தூரம் வலசை செல்லும் பறவை, ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்கிற கடற் பறவை. வட துருவத்தில் தொடங்கி, ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என ஓர் ஆண்டுக்கு 35 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்கிறது. திரும்பி வருவதையும் சேர்த்தால், 75 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே பறக்கிறது. தவிர, இந்தப் பறவை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு 4,000 கிலோமீட்டர் பறக்கும். ஓர் அடி நீளமே உள்ள இதன் பறக்கும் வேகம், ஜெட் விமானத்தைவிட அதிகம்.