Published:Updated:

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

ப.சரவணகுமார் படங்கள் : சைபர்சிம்மன்

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

ப.சரவணகுமார் படங்கள் : சைபர்சிம்மன்

Published:Updated:
வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

விடுமுறை என்றால், சுற்றுலா நினைவுக்கு வரும்.  விலங்கியல் பூங்காக்களும், சரணாலயங்களும் சுற்றுலாவில் தவறாமல் இடம்பெறும். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள சரணாலயங்களுக்கு விசிட் அடிக்க முடிந்தால்..?

இதற்காக, அந்த நாடுகளுக்கே செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கிருந்தபடியே வெப்கேம் மூலம் உலக வனவிலங்கு சரணாலயங்களையும் அங்கு உலவும் விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

லைட்.வைல்டுஎர்த்.டிவி (http://lite.wildearth.tv) இணையதளத்துக்குச் செல்வோம் வாருங்கள். இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, அதன் முகப்புப் பக்கத்தில் விலங்குகளின் புகைப்படங்கள் இருப்பதைப் பார்க்கலாம். உங்களுக்கு விருப்பமான விலங்கை க்ளிக் செய்தால்,  அந்த விலங்கு உலாவும் சரணாலயத்துக்குப் போகலாம். சரணாலயத்தின் நேரடிக் காட்சிகளையும் பார்க்கலாம்... பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் பார்க்கலாம். அதே பக்கத்திலேயே அந்த வெப்கேம் அமைந்துள்ள இடம் மற்றும் அதில் காட்சிதரும் விலங்கு பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருந்தே, சக வனவிலங்கு ஆர்வலர்களோடு ஃபேஸ்புக் வழியாக அரட்டை அடிக்கலாம்.

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

இந்த இணையதளம், வைல்டுஎர்த்.டிவி தளத்தின் (http://www.wildearth.tv) பேக்அப்பாக அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை வெப்கேம் மற்றும் வீடியோ காட்சிகளாக வழங்கும் இணைய டிவி - யாக வைல்டுஎர்த் விளங்குகிறது. இந்தத் தளத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், வெப்கேம் காட்சிகளை பேக்அப் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், நேரடியாக இந்தத் தளத்துக்கே சென்று வனவிலங்கு கேமரா காட்சிகளைப் பார்க்கலாம். முகப்புப் பக்கத்தில் பிரபலமான வெப்கேம் மற்றும் நேரடி காட்சிதரும் வெப்கேம்களின் பட்டியல் இருக்கிறது.

வைல்டுஸ்கிரீன் எனும் வனவிலங்கு நலனுக்கான தன்னார்வ அமைப்பால் நடத்தப்படும் தளம், ஆர்கிவ் (http://www.arkive.org). இந்தத் தளத்தில் உலக வனவிலங்கு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பார்க்கலாம். இது, வெறும் பொழுதுபோக்கு தளம் அல்ல. அழியும் நிலையில் இருக்கும் வனவிலங்குகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இணையதளம். அழியும் நிலையில் உள்ள விலங்குகளை அறிமுகம் செய்துகொள்ளலாம். தாவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். பார்க்கவும் படிக்கவும் எண்ணற்ற தகவல்கள் உள்ளது.

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

வனவிலங்குகளைப் பார்த்து ரசிப்பதோடு, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தெரிந்துகொள்ளலாம். இதில், சிறுவர்களுக்கான தனிப் பகுதியில் வனவிலங்கு தொடர்பான விளையாட்டுகளும் இருக்கின்றன.

உலக வனவிலங்கு நிதி அமைப்பின் இணையதளத்திலும் அரிய ரக வனவிலங்குகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இது, வனவிலங்கு நலனுக்காகப் பாடுபடும் அமைப்பு. இந்தத் தளத்தின் 'வனவிலங்கு கண்டுபிடி’ பகுதியில் (http://worldwildlife.org/pages/wildfinder) பூமியில் உள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்கு வகைகளை அறிந்துகொள்ளலாம்.  

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

விலங்குகளை,அவற்றின் இருப்பிடங்களைக்கொண்டு தகவல்களைத் தேடலாம். ஃபான்டாக்கள், புலிகள், கடல் ஆமைகள் என அழியும் நிலைக்குத் தள்ளப்பட்ட பல விலங்குகள் தொடர்பான அரிய தகவல்கள், புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பசுமையான வனப் பகுதிகளுக்கும் சென்றுவரலாம். வீடியோ காட்சி இணைப்புகளும் உண்டு.

வலை உலா - வெப்கேம் வழியே வன உலா !

எக்ஸ்ப்ளோர் (http://explore.org) இணையதளத்திலும் வனவிலங்கு வீடியோ மற்றும் வெப்கேம் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். வனவிலங்கு மட்டும் அல்ல, கடல்வாழ் விலங்குகளையும் வெப்கேம் வழியே இதில் பார்க்க முடியும். பெரிய திமிங்கிலம், அழகான ஃபான்டா கரடி, அலறவைக்கும் ஆந்தை சுறுசுறுப்பான தேனீக்கள் ஆகியவற்றை வெப்கேம் வழியே பார்த்து அறிமுகம் செய்துகொள்ளலாம். இவற்றை, ஃபேஸ்புக் மற்றும் இ-மெயில் வாயிலாக நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம்.