கோடை பயிற்சி முகாம்

''மிஸ், கொஞ்சம் அசையாம உட்காருங்க...'' என்று செல்லமாக அதட்டினான் அந்த மாணவன்.

சுட்டி விகடன், நான்கு நாட்கள் கோடைப் பயிற்சி முகாமில், ஆசிரியை ஒருவரை மாடலாக உட்காரவைத்து, வரைந்த சுட்டியின் கலாட்டாதான் அது. மேட்டூர் டேம், ஜெம்ஸ் இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் நடந்த முகாமில், ஒவ்வொரு நாளும் குதூகலம்தான்.

திசைகள் எங்கும் ஸ்பைடர்மேன்!

முதல் நாளில்... ஓவியர் விஸ்வம் தலைமையிலான குழு, ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தது. போர்ட்ரைட், அவுட்டோர் ஸ்டடி, களிமண் சிற்பம் என்று பல வெரைட்டிகள். பலூன் மாஸ்க் கற்ற விளைவால், முகாம் எங்கும் ஸ்பைடர்மேன்கள்.

அன்று பெற்றோர்களுக்கும் கைவண்ணத்தைக் காட்ட வாய்ப்பு. வளாகத்தில் நீளமான துணி ஒன்றைக் கட்டி, பிரஷ் மற்றும் வண்ணங்களைக் கொடுத்தபோது, ஆர்வத்துடன் தங்கள் ஓவியத் திறமையைக் காட்டினர்.

தட்டில் துள்ளிய மீன்கள்!

எளிமையான பொருள்களில் பயனுள்ள விஷயங்களைக் கற்றுத்தந்தனர் ஷியாமளா தேவி தலைமையிலான குழுவினர். சார்ட்டில் காகிதப் பை தயாரிக்கக் கற்றுக்கொண்ட மாணவர்கள், அதில் தமக்குப் பிடித்த படத்தை வரைந்தனர். தெர்மக்கோல் தட்டில் மீன்களை வரைந்து, மற்றொரு தட்டைக் கத்தரித்து ஒட்ட, 'வால் ஹேங்கிங் பிளேட்’ உருவானது.

டைனோசருடன் நடனம் ஆடிய மயில்!

மூன்றாம் நாள், ஒரிகாமி பயிற்சி. மயில், கப்பல், ஒட்டகச்சிவிங்கி எனப் பலவற்றை காகிதங்களில் உருவாக்கினார் லெக்ஷ்மி நாராயணன். டைனோசர் செய்வதைக் கற்றுதந்தவர், அதைக் கையில் பிடித்துக்கொண்டு நடப்பதுபோலச் நடித்துக்காட்ட, மாணவர்கள் மத்தியில் உற்சாகக் கூச்சல். அந்த டைனோசருடன் மாணவர்கள் உருவாக்கிய மயில்களும் நடனம் ஆடின.

அடுத்து வந்த காகிதச் சிற்பி ரமேஷ், ''நட்சத்திரத்தைக் கையில் பிடிப்போம்'' என்றார். காகிதத்தை மடித்து, கத்தரிக்கோலால் ஒரு வெட்டு வெட்டினார். பிரித்தால், நட்சத்திரம். கிரிகாமியில் மாவிலைத் தோரணம், ஜப்பான் தோரணம் என விதவிதமாக அசத்தினார்.

நர்ஸ் தொப்பி... அரசர் தொப்பி!

கடைசி நாள் கலகப்பும் கற்றலுமான பயிற்சிகளுக்கு சூப்பரான ஒரு டீம் வந்தது.

கைகளில் கண்ணாமூச்சி: வெல்கம் கைத்தட்டலில் தொடங்கியது நிகழ்ச்சி. கைத்தட்டலின் மூலம் நமது நினைவாற்றலை எப்படி சோதிப்பது... எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதைக் கற்றுத்தந்தார் சுப்பிரமணி. ஒரு மெல்லிய நூலில் ஒருமுனையை வலது ஆட்காட்டி விரலிலும், மற்றொரு முனையை இடது ஆட்காட்டி விரலிலும் சுற்றிக்கொண்டு, இடது கையைக் காதில் வைத்து நூலைச் சுண்டியதும் வீணை மீட்டும் ஓசை எழுந்தது.

விதவிதமான விளையாட்டு: சிங்கம், புலி, சிறுத்தை, அணில் எனப் பல அணிகளாக மாணவர்களைப் பிரித்து, புதிது புதிதான விளையாட்டுகளைக் கற்றுத்தந்தனர், கலைவாணனும் சத்திய மாணிக்கமும். ஐந்தாக வெட்டப்பட்ட புகைப்படத்தை இணைக்கச் செய்து, அந்தப் புகைப்படத்துக்கும் நமது வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு எனக் கேட்டு, மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினர்.

தொப்பியோ தொப்பி: ஒரு செய்தித்தாளில், முதலில் அரசர் தொப்பி செய்யக் கற்றுத்தந்தார் சேதுராமன். பிறகு, கொஞ்சம் மாற்றி, நர்ஸ் தொப்பி ஆக்கினார். பிறகு, அதிலேயே அடுத்தடுத்து 16 வகையான தொப்பிகள் செய்து அசத்தினார். அடுத்து, மேஜிக் நிகழ்ச்சியை நடத்தினார். இவை, மந்திரம் அல்ல தந்திரம்தான் என்றும், எப்படிச் செய்வது என்பதையும் விளக்கினார்.

நான்கு நாட்கள் உற்சாகத்தைக் கண்களில் நிறைத் தபடி கிளம்பிய சுட்டிகள், ''அடுத்த வருஷமும் எங்க ஸ்கூலுக்கு சுட்டி விகடனின் சம்மர் கேம்ப் வரணும்'' என்றார்கள்.

எஸ்.என்.ராஜா (ஜெம்ஸ் பள்ளி இயக்குநர்): ''பாடக் கல்வி, விளையாட்டுக் கல்வி, வாழ்க்கைக் கல்வி இவை மூன்றும் சேர்ந்ததுதான், 'ஜெம்ஸ் பள்ளி’ என்று அடிக்கடி கூறுவேன். அதற்கு ஏற்றவாறு பல்வேறு கலை வல்லுநர்களை அழைத்துவந்து, எங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த சுட்டி விகடனுக்கு நன்றி.''

எஸ்.அன்பரசு (கலை ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர்): ''சம்மர் கேம்ப் என்றதும் நீச்சல், கம்ப்யூட்டர் பயிற்சி, மொழிப் பயிற்சி என்றுதான் இருக்கும். ஆனால், சுட்டி விகடன் தந்த பயிற்சிகள், மாணவர்களுக்குள் இருக்கும் கலைத் திறமையை வெளிக்கொண்டுவந்தது. இந்த நான்கு நாட்கள் உற்சாகம், ஆசிரியர்களையும் குழந்தைகளாக மாற்றியது.''