Published:Updated:

3D கொண்டாட்டம் !

3D கொண்டாட்டம் !

3D கொண்டாட்டம் !

3D கொண்டாட்டம் !

Published:Updated:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... எங்க பகுதியில் சுட்டி விகடன் கடைக்கு வந்த முதல் நாளே அள்ளிட்டு வந்துட்டோம். முதல் தடவை, ரெண்டாவது தடவை, மூணாவது தடவையா பார்க்கிறோம்... பார்க்கிறோம்... பார்த்துட்டே இருக்கோம்.

தஞ்சாவூர் கோபுரத்தைக் கைகளால் தொட்டோம். மாமல்லபுரத்தில் சிற்பத்தைச் செதுக்கினோம். மேஜிக் சுட்டிகளின் உற்சாகத்தை ரசித்தோம். ஆரோவில்லில் நாங்களும் ஜம்ப் செய்தோம்.

கோடைக் கொண்டாட்டமாக இந்த இதழிலும் தொடர்கிறது 3ஞி. 35-ம் பக்கம் ஆரம்பிச்சு, 16 பக்கங்கள் காத்திருக்கு 3D ஸ்பெஷல் ட்ரீட். கண்ணாடியைப் போட்டுக்கிட்டு அந்தப் பக்கங்களுக்கு வாங்க. அதுக்கு முன்னாடி, புதுசா சுட்டி விகடனை வாங்கும் நண்பர்கள், கீழே இருக்கும் குறிப்புகளைப் படிச்சுக்கங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3D கொண்டாட்டம் !

என்ஜாய் ஃப்ரெண்ட்ஸ்!  

3D கண்ணாடி, பட்டையாக இருக்கும். அதை, 'ப’ வடிவத்தில் மடியுங்கள்.

மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவர்கள், அதன் மேலேயே இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொள்ளலாம்.

3D படங்களை நல்ல வெளிச்சத்தில் பார்ப்பது முக்கியம். ஒரு படத்தின் முழுமையான முப்பரிமாணத்தை அனுபவிக்க, ஒவ்வொரு பகுதியையும் அவசரப்படாமல், பொறுமையாக ரசியுங்கள்.

முகத்துக்கு நேராகப் பார்க்காமல், புத்தகத்தை சற்றே சாய்வாகப் பிடித்துப் பார்த்தால், 3D 'எஃபெக்ட்’ இன்னும் அருமையாக இருக்கும். சற்றே இட, வலமாக அசைத்தால், பிரமிப்பு கூடும். கை விரல்களைப் படத்தில் ஆங்காங்கே வைத்தும் ஆழம், தூரம் என ரசித்து மகிழுங்கள்.

முக்கியமான ஒரு விஷயம்... 3D படங்கள் அல்லாத மற்ற பக்கங்களைக் கண்ணாடி அணிந்தபடி பார்க்காதீர்கள்... படிக்காதீர்கள். அது, கண்களுக்குத் தேவையற்ற சிரமத்தைக் கொடுத்து, தொந்தரவை உண்டாக்கும்.

இனி என்ன? 3D உலகில் நுழையுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism