Published:Updated:

சுட்டி தியேட்டர் - நவரச நாயகன் ஸ்பைடர்மேன்

கே.ராஷசேகரன் படங்கள் : தி.ஷெயப்பிரகாஷ்

சுட்டி தியேட்டர் - நவரச நாயகன் ஸ்பைடர்மேன்

கே.ராஷசேகரன் படங்கள் : தி.ஷெயப்பிரகாஷ்

Published:Updated:

சினிமா இல்லாமல் சம்மர் லீவா..? இந்தக் கோடை விடுமுறைக்கு வந்துள்ள, 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2’ படத்தை விமர்சிக்கிறார்கள், கோயம்புத்தூர் சுட்டிகள்.

 கோகுல்: கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரி¢த்து, மார்க் வெப் (விணீக்ஷீநீ ஷ்மீதீதீ) இயக்கத்தில், 2012-ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம், 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்.’ அதே இயக்குனரின் இரண்டாம் பாகம். இயற்கைக்கு மீறிய ஆராய்ச்சிகளால் எத்தகைய விபரீதங்கள் ஏற்படும் என்பதுதான் கதை.

விஷால்: ஆஸ்கார்ப் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறார். அவரிடம் பணிபுரியும் பீட்டர் பெர்க்கின் தந்தை, அந்த நோய்க்கு ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை செலுத்திக்கொண்டால், மனிதர்களுக்கு விபரீதம் ஏற்படும் என்பதால், அதை மறைத்துவைக்கிறார். விபத்தில் அவர் இறந்தும்விடுகிறார். இதெல்லாம் பீட்டர் பர்க்கின் சிறுவயதில் நடக்கிறது. தன் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து பெரி¢யவனாகும் பீட்டர், ஸ்பைடர்மேனாக சாகசங்கள் புரி¢ந்து, மக்களைக் காப்பாற்றிவருகிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி தியேட்டர் - நவரச நாயகன் ஸ்பைடர்மேன்

ராகுல்: ஆஸ்கார்ப் நிறுவனத்தில், மேலும் பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அங்கே, எலெக்ட்ரானிக் இன்ஜினீயராகப் பணிபுரிகிறார் மேக்ஸ். மிகவும் சாதுவான அவருக்கு, ஸ்பைடர்மேன் போலவே சாகசங்கள் செய்ய ஆசை. நிறுவனத்தில் ஏற்படும் ஒரு விபத்தால்,  மீன்கள் நிறைந்த ஆராய்ச்சித் தொட்டிக்குள் விழுந்துவிடுகிறார். அபாரமான மின்சார மனிதனாக மாறுகிறார். சாகசம் செய்யும் ஆசையில் மக்கள் முன்பு செல்கிறார். மக்களோ, பயந்து ஓடுகிறார்கள்.  ஸ்பைடர்மேனை கொண்டாடும் மக்கள், தன்னை வெறுப்பதைப் பார்க்கும் மேக்ஸ், கோபம் அடைகிறான். ஸ்பைடர்மேனை ஒழித்து, தான் ஹீரோ ஆக நினைக்கிறான்.

சூரஜ்: இதற்குள் இன்னொரு கதையும் இருக்கு. ஆஸ்கார்ப் நிறுவனத் தலைவரின் மகன், ஸ்பைடர்மேனுக்கு நண்பன். தன் தந்தை இறந்ததும் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று நடத்திவருகிறான். தன் நண்பன்தான் ஸ்பைடர்மேன் என்பது தெரியாது. அப்பாவைப் பாதித்த அதே நோய் அவனையும் தாக்குகிறது. ஸ்பைடர்மேனின் அப்பா ஆராய்ச்சி செய்த மருந்து, ஆஸ்கார்ப் நிறுவனத்திலேயே மறைத்துவைக்கப்பட்டிருப்பதை, மின்சார மனிதனான மேக்ஸின் உதவியுடன் கண்டுபிடித்து, தன் உடம்பில் ஏற்றிக்கொள்கிறான். இருவரும் சேர்ந்து ஸ்பைடர்மேனை ஒழிக்க நினைக்கிறார்கள். என்ன ஆனது என்பதுதான் விறுவிறு கிளைமாக்ஸ்.

தர்ஷனா: 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரூ கார்பீல்ட்தான் இதிலும் நாயகன். எம்மா ஸ்டோன் நாயகி. பீட்டர் பர்க்தான் ஸ்பைடர்மேன் என்பது தெரிந்தவர், எம்மா ஸ்டோன். ஸ்பைடர்மேன் மேல் நிறைய அன்பு இருந்தாலும், அவனை சராசரி மனிதனாகப் பார்க்கவே ஆசைப்படுகிறாள். கடைசியில், ஸ்பைடர்மேனுடன் சேர்ந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரையே இழக்கும்போது, நமக்கு கண்ணீர் வந்துவிடுகிறது.

விஷால்: மின்சார மனிதனோடு மோதும் ஒவ்வொரு காட்சியிலும் 3ஞி எஃபெக்ட் பக்கா. ஸ்பைடர்மேன் கைகளில் இருந்து கிளம்பி வரும் சிலந்தி வலை, நம் கண்களை நோக்கி வருவது பிரமாதம். கட்டடங்கள், ஓடும் வாகனங்கள் மீது ஸ்பைடர்மேன் பாயும்போது, நம்மையும்  அழைத்துச்செல்லும் உணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை நிச்சயம் பாராட்டியே ஆகணும்.

கோகுல்: சாகசம் மட்டும் இல்லாமல், அத்தையிடம் வெளிப்படுத்தும் பாசம், சிலரின் ஆர்வக்கோளாறு காரணமாக ஏடாகூடமாக மாட்டிக்கிட்டு சிரிக்கவைப்பது, நண்பனிடன் காட்டும் அன்பு, எம்மா ஸ்டோனை இழந்து கதறும்போது, சோகம் என நவரசங்களில் கலக்குகிறார் ஸ்பைடர்மேன்.

சூரஜ்: படத்தில் நீள நீளமாக வரும் வசனக் காட்சிகள் கொஞ்சம் சலிப்பாக இருக்கு. ஆனாலும், ஸ்பைடர்மேன் நமக்கு எப்பவும் ஸ்பெஷல்தான்.