Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

Published:Updated:
பென் டிரைவ்

உலக அமைதிக்காக, சென்னை டிரேட் சென்டரில், 229 மாணவர்கள் கீ போர்டு வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 'சமர்ப்பன்’ என்ற அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கூட்டிசையில், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, வெள்ளை உடையில் கீ போர்டு இசைத்தது அவ்வளவு அழகு. 'மெல்லிஃப்ளூயஸ் ஆஃப் மெலோடிஸ்’ என்ற குழு, வழிநடத்திய இந்த நிகழ்ச்சி, கின்னஸ் அங்கீகாரம் பெற்றது. இதில் பங்கேற்ற அனைத்துச் சுட்டிகளுக்கும் கின்னஸ் அமைப்பின் சான்றிதழ்கள் மியூசிக் அகாடமியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமைதிக்கு அங்கீகாரம்!

பென் டிரைவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடை விடுமுறையில், கதை விழா கொண்டாடி மாணவர்களை மகிழ்வித்தது, காரமடை ஒன்றியத்தில் உள்ள ராமம்பாளையம் தொடக்கப் பள்ளி. கதை, பாட்டு, நடனம், நாடகம், களிமண் சிற்பம், விளையாட்டுகள் என, மூன்று நாட்களும் உற்சாகத்தில் திளைத்தார்கள் மாணவர்கள். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் உடனுக்குடன் கதை சொல்லி விருந்தினர்களை அசத்தினர் குழந்தைகள். இரண்டாம் நாள் மாலையில் நடந்த பொம்மலாட்டத்தில், மிகக் குறைந்த நேரப் பயிற்சியிலேயே கலக்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியை, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் ஃபிராங்க்ளினும் மாணவர்களை உற்சாகப்படுத்தினர். கோடு போட்டால், ரோடே போடுவேம்ல!

பென் டிரைவ்

ரோலர் ஸ்கேட்டிங்கில், சத்தம் இல்லாமல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் சென்னை சுட்டிகள். சென்னை அண்ணாநகர், டவர் பார்க் 'ரோலர் ஸ்கேட்டிங் கிளப்’பில், 5 முதல் 18 வயதுக்குள் இருக்கும் 100 சுட்டிகள் சேர்ந்து, 100 மணி நேரம் தொடர் ஸ்கேட்டிங் செய்யும் சாதனை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்கள். இந்தச் சாதனைக்குப் பின்னணியில் இருந்தவர், அண்ணா நகர் ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பின் தலைமைப் பயிற்சியாளர் கே.பி.உன்னிகிருஷ்ணன். மே 1 முதல் 5 வரை நடந்த இந்த நான்ஸ்டாப் ரோலர் ரிலே ஸ்கேட்டிங்கில் பங்கேற்ற குழந்தைகள், காலை 9 மணி முதல், இரவு பகல் இடைவிடாமல், ஒவ்வொரு குழுவாக ஸ்கேட்டிங் செய்தபோது, பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். நான்ஸ்டாப் சாகசம்!

- ரா.சுகன்யாவர்மா

பென் டிரைவ்

புராணங்களையும் மகான்களின் வாழ்க்கை வரலாறுகளையும் நாட்டிய நாடகமாகக் கண் முன்னே நிறுத்துகிறார்கள், சென்னை அம்பத்தூர், காஞ்சி காமகோடி நாட்டியப் பள்ளி மாணவர்கள். சமீபத்தில் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஸ்ரீ ராமனுஜர் வாழ்க்கை வரலாறு. ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் அவரின் வாழ்க்கை வரலாறை மேடையேற்றினர். கிருத்திகா, வீணா, நிகிதா, ஹீணா ஆகியோர் ராமானுஜரின் ஒவ்வொரு பருவத்துக்குமான வேடத்தில் தோன்றி அசத்தினார்கள். பரவச மணித் துளிகள்!

-அஸ்வின் படம்: க.பாலாஜி