Published:Updated:

விர்ர்ர்ரூம் வருண் !

கே.ராஜசேகரன் படங்கள் : புகழ் திலீபன்

விர்ர்ர்ரூம் வருண் !

கே.ராஜசேகரன் படங்கள் : புகழ் திலீபன்

Published:Updated:

''எனக்கு     ஐந்து க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்களைப் பார்க்கிறீங்களா?'' எனச் சொல்லி, சிரிப்புடன் அறிமுகம் செய்தான், 11 வயது வருண்.

அந்த ஐந்து ஃப்ரெண்ட்ஸும், குட்டியான இரண்டு கால் இயந்திரக் குதிரைகள். ஆம்! எல்லாமே 50சிசி, 65சிசி, 75சிசி திறன்கொண்ட குட்டி பைக்குகள்.

சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் வருண், குட்டி பைக் ரேஸர். ஒரு பைக்கை அழகாக ஓட்டிக் காட்டிவிட்டு, '’எனக்கு பைக் ரேஸரா வரணும்னு ரொம்ப ஆசை. டிவி-யில ரேஸ் சம்பந்தமான சேனல்தான் பார்ப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடுமுறை நாட்களில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்குக்குப் போவேன். பிரபல ரேஸ் வீரர், வாலன்டினோ ராஸினா ரொம்பப் பிடிக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சாலையில் வண்டியை எப்படி ஓட்டணும், சாலை விதிமுறைகள், பயணப் பாதுகாப்புனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்'' என்கிறார் வருண்.

விர்ர்ர்ரூம் வருண் !

இந்தியச் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பைக் முதல், உலக அளவில் ஆட்டோ மொபைல் சார்ந்து எது நடந்தாலும் கவனிக்கும் வருண், அதைப் பற்றிய புத்தகம் படித்து விட்டு, அப்பாவிடம் பேசுவார்.

''சமீபத்தில், கோவையில் உள்ள கிங்டம் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ரேஸ்ல, பயிற்சிக்காக என்னையும் ஓட்டிக் காட்டச் சொன்னாங்க. நான் பைக் ஓட்டும் வேகத்தைப் பார்த்து, பல வீரர்கள் பாராட்டினாங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது'' என்கிறார் வருண்.

பைக் ஓட்டும் பயிற்சியில் பல முறை கீழே விழுந்து, அடிபட்டு ரத்தம் வந்திருக்கிறது. ''அதையெல்லாம் பார்த்துப் பயந்தால், ஜெயிக்க முடியுமா அங்கிள்? என் அம்மாவும் சகோதரியும் கொடுக்கும் ஊக்கமும், பள்ளி மற்றும் நண்பர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையும் என்னோட பலம். இன்னும் சில வருடங்களில், என்னை பைக் ரேஸில் பார்ப்பீங்க'' எனச் சொல்லி, 'விர்ர்ர்ர்ர்ரூம்’ என்று கைகளைக் காற்றில் செலுத்தி விடை கொடுத்தார் வருண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism