Published:Updated:

ஆஹா...அன்டார்டிகா !

ரமா மலர்

ஆஹா...அன்டார்டிகா !

ரமா மலர்

Published:Updated:

பள்ளிச் சுற்றுலாவாக, ஊர் விட்டு ஊர் செல்வது மாறி, கண்டம் விட்டு கண்டம் செல்கிறார்கள் இன்றைய மாணவர்கள்.

ஐக்கிய அரபுக் குடியரசில் (U.A.E) உள்ள ஜெம்ஸ் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த, துபாய் 'ஜெம்ஸ் மாடர்ன் அகாடமி’ பள்ளி, தன் மாணவர்களை அன்டார்டிகா துருவப் பகுதிக்கு அழைத்துச்சென்றது.

''ராபர்ட் ஸ்வான் என்பவர் முதன்முதலில் வட மற்றும் தென் துருவங்களில்  நடந்தவர். இயற்கையை மாசுபடுத்தாமல் அன்டார்டிகாவைக் காக்கும் நோக்கத்தில், உலகின் பல நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் உதவியோடு செயல்பட்டு வருகிறார். 1992-ல், அன்டார்டிகாவில் சுமார் 1,500 டன் கழிவுகளை அப்புறப்படுத்தினார். அங்கு ணிஙிகிஷிணி எனப்படும் கல்வித் தளத்தை நிறுவி இருக்கிறார். இவரின் முயற்சியால், ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் விண்ணப்பித்த 107 மாணவர்களில்... ஒன்பது பேர் சிறப்பாகத் தேர்வு பெற்று அன்டார்டிகா செல்லத் தகுதி பெற்றனர்'' என்கிறார் பள்ளியின் முதல்வர் நர்கிஷ் கம்பட்டா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஹா...அன்டார்டிகா !

இந்தப் பயணத்தில் இடம்பெற்றவர்களில் பூஜிதா ஜனார்த்தனன், பூஜா பாலாஜி மற்றும் ஐசக் ஜாய் போன்றவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

''இந்தப் பயணத்துக்கு, ஒரு மாணவருக்கு 16 லட்சம் செலவாகும். பன்னாட்டு கம்பெனிகள், வங்கிகள் எனப் பலரும் உதவி செய்தார்கள். பயணத்துக்கு முன்பு உடலும் மனமும் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கத்தக்க பயிற்சிகள் தரப்பட்டன'' என்கிறார் பூஜிதா.

விமானப் பயணம், கடல் பயணம், கப்பலின் உயரத்தையும் தாண்டிப் பொங்கிய ராட்சச அலைகள்,  பனி மலைகள், எதிர்பாராத புயல் காற்று, ராட்சசத் திமிங்கிலங்கள், பனிவெளியில் இரவு முழுவதும் உறங்கியது, கண் விழித்ததும் கண்ட நூற்றுக் கணக்கான பெங்குவின் பறவைகள் என, ஆண்டு முழுவதும் நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதற்கான அற்புதமான அனுபவங்களுடன் திரும்பி வந்திருக்கிறார்கள், இந்த லக்கி சுட்டிகள்.

ஜாலிப் பயணமாக மட்டும் இல்லாமல், சுற்றுச்சூழலைக் காக்கும் விழிப்பு உணர்வுப் பயணமாகவும் இது அமைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism