Published:Updated:

கணிதப் புலிகள் - அபஸ்தம்பா !

இரா.சிவராமன்

கணிதப் புலிகள் - அபஸ்தம்பா !

இரா.சிவராமன்

Published:Updated:

அபஸ்தம்பா கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த, இந்தியக் கணித மேதை. தனக்கு முன் தோன்றிய பௌத்தயானாவைப் போன்றே, தனது கணிதச் சிந்தனைகளை 'சுல்ப சூத்திரம்’ என்ற குறிப்புகளில் வழங்கியவர்.

தனக்கு முன்னால் தோன்றியவர்களின் கருத்தைப் பகிர்ந்துகொள்ள கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதன் என்றே இவரைச் சொல்லிக்கொண்டார்.  படைப்புகளின் ஆற்றலால், மகத்தான குருவாக பிற்காலத்தில் இவரை வழிபட்டனர். பௌத்தயானாவைப் போலவே, தனது கணிதக் கண்டுபிடிப்புகளை யாககுண்டங்களின் வடிவமைப்புக்கும், சிலை, தூண், கோபுரம் போன்ற தெய்வ வழிபாட்டுக்குத் தேவைப்படும் பொருள்களை நுட்பமாக அமைப்பதற்குமே பெரும்பாலும் வழங்கியிருந்தார். இவரது படைப்புகளின் காலகட்டம் கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. இரண்டாம்  நூற்றாண்டு வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது.  

கணிதப் புலிகள் - அபஸ்தம்பா !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுல்ப சூத்திரங்களின் உட்பிரிவான தர்ம சூத்திரங்கள் எனப்படும் குறிப்புகளில், 30 பிரிவுகளில் அபஸ்தம்பா தனது அரிய சிந்தனைகளை வழங்கியிருந்தார். இந்த 30 பிரிவுகளை, 'பிரசனங்கள்’ என்பர். இதற்கு கேள்விகள் என்று பொருள். பலவகையான கேள்விகளுக்கு, தகுந்த விடை அளிக்க முற்பட்டுள்ளார். வைதீகப் பரிகாரங்கள், பூஜை முறைகள், யாகத்துக்குத் தேவைப்படும் பொருள்கள், நெருப்பின் தன்மைகள், அமாவாசை, பௌர்ணமி போன்ற தன்மைகளின் குறிப்புகள், வேத மந்திரங்கள், விதிமுறைகள் போன்ற சிந்தனைகளை அமைந்துள்ளார். இதில் சிலவற்றை நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம்.

தனது கணிதச் சிந்தனையை இறுதிப் பிரிவில், 'சுல்ப சூத்திரங்கள்’ என்ற தலைப்பில் அமைத்தார். இந்தச் சுல்ப சூத்திரக் குறிப்புகளில், ஜியோமிதி சார்ந்த கணித சூத்திரங்களையும், அமைப்பு முறைகளையும் அபஸ்தம்பா வழங்கியிருந்தார்.

கணிதப் புலிகள் - அபஸ்தம்பா !

குறிப்பாக, கொடுக்கப்பட்ட வட்டத்தின் பரப்பிற்கு இணையான சதுரத்தைக் கண்டறிந்தது, இரண்டின் மூல வர்க்கத்துக்கான அருமையான சூத்திரத்தை வழங்கியது, இவரது மிகச் சிறந்த கணிதப் படைப்புகளாக இன்றும் விளங்குகிறது.

பல அரிய கணிதச் சிந்தனைகளை வாழ்வின் தேவைக்கேற்பக் கண்டறிந்து வழங்கிய மேதைகளில் ஒருவராகவும், இந்தியாவின் சிறந்த கணித மேதைகளில் ஒருவராகவும் அபஸ்தம்பா கருதப்படுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism