Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சுட்டி ஸ்டார் நியூஸ்...

சுட்டி ஸ்டார் நியூஸ்...

Published:Updated:

மின்மினிக் குகைகள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்...

 நியூசிலாந்தின் வட தீவுப் பகுதியில் வெயிட்டமோ என்ற இடத்தில் அமைந்துள்ளது, மின்மினிக் குகைகள் (Glow worm caves). மின்மினிப்பூச்சி இனங்கள் இங்கே அதிக அளவில் காணப்படும். கொசுவின் அளவு இருக்கும் இந்த உயிரினம், நீலப்பச்சை ஒளியை வெளியிடும். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சேர்ந்து வெளியிடும் ஒளியால் குகையே அற்புதமாக ஒளிரும். இந்தக் காட்சியைக் காண்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் படகில் வருவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தெரியுமா நண்பர்களே?

'பிஸ்கட்’ என்ற வார்த்தை, பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. இதற்கு, இரண்டு முறை வேகவைக்கப்பட்டது என்று பொருள். பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடும் பிஸ்கட்கள் கெடாமல் இருக்க, இரண்டு முறை வேகவைக்கப்பட்டன.

சுட்டி ஸ்டார் நியூஸ்...

திரைப்பட நடிகர் அல்லது ஒரு பிரபலத்தின் ரசிகராக இருப்பவரை திணீஸீ என்பார்கள். இது, Fanatic என்ற சொல்லின் சுருக்கம். இதற்கு வெறித்தனமான என்று பொருள்.

 ஒளிரும் தாவரங்கள்!

அமெரிக்காவின் வட கரோலின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மின்மினிகள் போல ஒளிதரும் தாவரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு தாவரத்தின் மரபணுவில், ஒளி தரும் பாக்டீரியாக்களைச் செலுத்தும்போது, 'லூசிஃபெரின்’ என்ற ஒளிரும் ரசாயனத்தை தாவரம் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் வெளிச்சம் உருவாகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்...

பயோலூமினஸென்ட் ஃப்ளோரா (Bioluminescent flora) என அழைக்கப்படும் இந்த வகைத் தாவரங்களை உருவாக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரிய ஹோட்டல்கள், வீடுகளை இந்த ஒளிரும் தாவரங்கள் விரைவிலேயே அலங்கரிக்கலாம்.

 வானிலை ஆய்வாளர்!

பூமியின் மழைக்கு மரங்கள் முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மழை வருமா, வராதா என்று முன்கூட்டியே அறிவிக்கவும் வானிலை ஆய்வாளர் மாதிரி ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தின் பெயர், படவ்க் (Padauk). பர்மாவில் அதிகமாகக் காணப்படும் இந்த மரத்தின் பூக்கள், பொன் நிறமாக இருக்கும். 

சுட்டி ஸ்டார் நியூஸ்...

இது மூன்று முறை பூ விட்டால், நாட்டில் பருவமழை தொடங்கிவிடுமாம். பர்மியர்கள் இந்த மரத்தைப் பார்த்தே மழையைக்  கணித்துவிடுவார்கள்.

ஹாய் ஸ்பிக்ஸ் மக்கா!

சமீபத்தில் வெளியான 'ரியோ 2’ படத்தைப் பார்த்து ரசித்து இருப்பீர்கள். அதில், அசத்தும் நீல வண்ணக் கிளிகளுக்கு, ஸ்பிக்ஸ் மக்கா (Spix’s Macow) என்று பெயர். மென்மையான சாம்பல் நிற இறகுகள், அடர்த்தியான நீல நிற வால் என அழகாக இருக்கும். 20 முதல் 30 வருடங்கள் வாழும். விதைகள், பழங்கள், சமைக்கப்பட்ட பாஸ்தா, காய்கறிகள் மற்றும் மிளகு போன்றவற்றை  உட்கொள்ளும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்...

அசைபோட்டுக் கொண்டே இருக்கும் இதன் குரல், மிக வலிமையானது. அமேசான் காடுகளில் காணப்படும் இவை, அழிந்துவரும் பறவை இனங்களுள் ஒன்று. இதைக் காக்க பல்வேறு முயற்சிகள் நடந்துவருகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்...
சுட்டி ஸ்டார் நியூஸ்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism