Published:Updated:

செர்பிய ரவிவர்மா !

என்.மல்லிகார்ஜுனா

செர்பிய ரவிவர்மா !

என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:

ஓவியங்கள் தீட்டுவதில் பல வருடங்கள் அனுபவம் உள்ளவர்போல் மிகத் துல்லியமாக வரைந்து அனைவரையும் வியக்கவைக்கிறார், செர்பியா நாட்டைச் சேர்ந்த 11-வயது  தூஷன் க்ரதோலிக் (Dušan Krtolica).

''தூஷன், இரண்டு வயதிலேயே ஓவியம் வரைய ஆரம்பித்துவிட்டார்'' என்கிறார்கள் அவரது பெற்றோர்.

பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி, ஓவியங்களை வரைகிறார் தூஷன். தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், டைனோசர்கள் இவரது கைவண்னத்தில் உயிர்பெற்று, பார்ப்பவர்களின் பாராட்டுகளை அள்ளுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செர்பிய ரவிவர்மா !

''ஒருமுறை அப்பா வன விலங்குகள் கலைக்களஞ்சியப் புத்தகத்தை வாங்கித் தந்தார். அதை மூன்றே வாரங்களில்  படித்துவிட்டேன். அது, எனக்குத் தூண்டுகோலாக இருந்தது. விலங்குகளை ஓவியங்களாக வரைந்து, கண்காட்சி வைக்கும் ஆர்வம் தோன்றியது'' என்கிறார் தூஷன்.

செர்பிய ரவிவர்மா !

இதுவரை, மூன்று முறை தனது ஓவியங்களைக் கண்காட்சியாக வைத்திருக்கிறார் தூஷன். அதில் இரண்டு, 8 வயதிலேயே நடத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ், செர்பியாவின் சுட்டி ரவிவர்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism