Published:Updated:

10 - ம் வகுப்பு முதல்வர்கள்

வி.எஸ்.சரவணன்

10 - ம் வகுப்பு முதல்வர்கள்

வி.எஸ்.சரவணன்

Published:Updated:
10 - ம் வகுப்பு முதல்வர்கள்

''இந்த வருஷம், டென்த் பப்ளிக் எக்ஸாம். இதை நினைச்சாலே படபடப்பா இருக்கு. எங்களுக்கு இருக்கிற பதற்றத்தில் பாதிகூட உன்கிட்டே இல்லையே. மனசுல பயத்தை வெச்சுக்கிட்டுப் படி!''

10-ம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு மாணவன், மாணவி வீட்டிலும் பெற்றோர் சொல்லும் டயலாக் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, இந்த டயலாக்கை மூட்டை கட்டிப் பரணில் தூக்கிப்போட்டுவிடலாம். ''பயம் எதுக்கு? ரிலாக்ஸாகவே படிச்சு ஜெயிப்போம்ல'' என்று சொல்லி அடித்திருக்கிறார்கள், நமது மாணவ கில்லிகள்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், முன் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் சாதனை மேல் சாதனை படைத்திருக்கிறார்கள்.

10 - ம் வகுப்பு முதல்வர்கள்

500-க்கு 499 மதிப்பெண்களை எடுத்து, 19 பேர் முதல் இடம். சென்ற வருடம் 498 மதிப்பெண்களைப் பெற்று, 9 பேர் முதல் இடத்தைப் பெற்றார்கள். இப்போது, இரு மடங்கைத் தாண்டிவிட்டார்கள்.  

முதல் இடம் இப்படி என்றால், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களின் சாதனை பல மடங்கு. சென்ற வருடம் 497 மதிப்பெண்களைப் பெற்று, 52 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். இந்த ஆண்டோ, 498 மதிப்பெண்களைப் பெற்று, 125 பேர் இரண்டாம் இடத்தைத் தொட்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு 496 மதிப்பெண்களோடு 137 பேர் மூன்றாம் இடம். இந்த ஆண்டு 497 மதிப்பெண்களோடு 321 பேர் அசத்திவிட்டனர்.

10 - ம் வகுப்பு முதல்வர்கள்

சதம் கண்டவர்கள்:

ஒவ்வொரு பாடத்திலும் சதம் அடித்தவர்களின் எண்ணிக்கையும் பல சதங்களைத் தாண்டியிருக்கிறது. தமிழ்ப் பாடத்தில் 255 பேர், ஆங்கிலத்தில் 677 பேர், கணிதத்தில் 18,682 பேர், அறிவியலில் 69,560 பேர், சமூக அறிவியலில் 26,554 பேர் நூற்றுக்கு 100 பெற்று பெருமையைச் சூடியுள்ளனர்.

எப்படி முடிந்தது இந்தச் சாதனை?

''பரீட்சை பயம் இல்லாமல் படித்தேன்.''

''பாடங்களைப் புரிந்து படித்தேன். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதே முக்கியம்.''

''பரீட்சை வரும்போது படித்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், அன்றைய பாடங்களை அன்றே படித்தேன்.''

10 - ம் வகுப்பு முதல்வர்கள்

''கஷ்டமான பாடங்களைப் பல முறை ரிவிஷன் பண்ணினேன்.''

இப்படி, விதவிதமாகத் தங்கள் வெற்றிக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள், இந்த முதல்வர்கள். இவர்களின் இந்தச் சாதனை இவர்களுக்கு மட்டுமல்ல, இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களுக்கும் புதிய உற்சாகத்தை, ஊக்கத்தைத் தந்திருக்கிறது.

சாதனைகள் என்பதே முறியடிக்கப்படுவதற்குத்தான். இந்த வருட சாதனையாளர்களுக்குப் பூங்கொத்து வாழ்த்துச் சொல்லும் அதேநேரம், அடுத்த ஆண்டு இந்தச் சாதனையை முறியடிக்க, புதிய மாணவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism